தமிழ்நாடு தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

தமிழ்நாடு தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு தடகள சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் 2018 முதல் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய சங்கத் தலைவராக தேவாரம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

செயலாளராக லதா, பொருளாளராக ராஜேந்திரன், சீனியர் துணைத்தலைவராக சுதாகர், துணைத்தலைவர்களாக ஷைனி வில்சன், கிருஷ்ணசாமி, அன்பழகன், மதியழகன், மலர்விழி, மோகன்தாஸ், குவைத்ராஜா, கம்பன், ஜெயந்தி நீலசிவலிங்கசாமி ஆகியோரும் சீனியர் இணைச்செயலாளராக வேல்மனோகரனும், இணைச்செயலாளர்களாக உஸ்மான் அலி, கோவிந்தராஜூ, சண்முக சுந்தரம், பக்கிரிசாமி ஆகியோரும் தேர்வானார்கள்.