சாதிவாரியாக ஆரம்பப் பள்ளி மாணவர்கள் பிரிப்பு – சென்னை மாநகராட்சிப் பள்ளியில் அவலம்

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சாதிவாரியாகப் பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கீழ் 119 ஆரம்பப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக கல்லூரிகள், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.


நவ. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று பேட்ச்சுகளாக (சுழற்சி முறையில்) மாணவர்கள் பள்ளிக்கு வர அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னை எம்ஜிஆர் நகரில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், மாணவர்களை சாதிவாரியாகப் பிரித்து, வருகைப் பதிவேடு தயாரித்து, அதைப் பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், கரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் இப்பள்ளி திறக்கப்பட்டது. வருகைப் பதிவேடு சாதிவாரியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதால், சுழற்சி முறையில் மாணவர்களும் சாதிவாரியாகப் பிரித்து வரவழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது குறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், “பள்ளிகளில் சாதி அடிப்படையில் எந்த ஒரு விஷயமும் செய்வதில்லை. வருகை பதிவேட்டில் அல்ஃபாபெடிக் (Alphabetical order) அடிப்படையில் தான் மாணவர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளளது. எம்ஜிஆர் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வருகை பதிவேட்டில் சாதி குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியானது, இது தொடர்பாக அங்கு சென்று விசாரித்தோம்.


சாதி – சமூக நீதிக்கு எதிரானது:-


மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைக்கு ஏற்பாடு செய்ய, தகுதி வாய்ந்த மாணவர்களை கண்டறிய சில ஆசிரியர்கள் வருகை பதிவேட்டின் பின்புறம் குறித்து வைத்துள்ளனர். அதை உடனடியாக நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் சாதி தொடர்பான நிகழ்வு சமூக நீதிக்கு எதிரானது” என்றார்.

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் உடனடியாக பாடம் எடுக்காமல், அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப பாடம் எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


அதனடிப்படையில், தற்போது அகர வரிசையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.


விசாரணையில், சாதிவாரியாகப் பிரித்து மாணவர்களை வரவழைத்தது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

எழுத்தாக்கம்: தமிழினி சகுந்தலா