இருளர் மக்கள் வெளியேற்றம் – தொடரும் துயரம்

எழுத்தாக்கம் : தமிழினிசகுந்தலா

11 இருளர் குடும்பங்கள் தங்களுக்கு பட்டா வழங்கும் வரை  தற்காலிகமாக முருகன் கோவிலுக்கு அருகில் வசிப்பதற்கு வழங்கப்பட்ட குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் நகராட்சியில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களின் குடிசைகளை தமிழக வருவாய்த் துறையினர் அக்டோபர் 1 ஆம் தேதி அன்று முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமலும் அல்லது மாற்று இடம் வழங்காமல் இடித்ததாகக் கூறப்படுகிறது.

எங்கும் செல்லாத இயலாத நிலையில், அந்த குடும்பங்கள் தங்கள் உடைமைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டு உடனடியாக தங்குமிடம் கோரி தாசில்தார் அலுவலகத்தை ஆக்கிரமித்தனர். பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் கூடி, இரவு வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீடற்ற பழங்குடியினருக்கு வீட்டு பட்டா உத்தரவாதம் அளிக்கும் வரை அங்கிருந்து அசைய மறுத்தனர்.

நான்கு மாதங்களுக்கு முன்பு  தாசில்தார் 11 குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்குவம் வரை அந்த இடத்தை  தற்காலிக ஏற்பாடாகத்தான் கொடுத்தார்கள் என்று போராட்டக்காரர்கள் கூறினர். இருப்பினும், நிலம் வேறு நோக்கங்களுக்காகத் தேவை என்று கூறி வருவாய்த் துறையினர் அவர்களை வேரோடு பிடுங்கி உள்ளனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) மற்றும் பழங்குடி உரிமைகளுக்காக போராடும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் (TNMMS), ” முருகன் கோவிலுக்கு அருகில் இருளர்கள் இருப்பது ஒரு தடை என்பதால்தான் செல்வாக்கு மிக்க ஒரு நபரால் இந்த அகற்றம் நிகழ்ந்துள்ளதாக ” கூறுகிறது.

பட்டாக்களுக்காக பொறுமையாக காத்திருந்த குடும்பங்கள், வெள்ளிக்கிழமை அன்று காலை “தங்கள் குடிசைகளை அகற்ற” தாசில்தார் மற்றும் பிற அரசு பிரதிநிதிகள் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தாசில்தார் குடிசைகள் இடிக்கப்படுவதை அமைதியாக  பார்த்துக்கொண்டிருந்தார். TNUEF மாவட்டச் செயலாளர் செல்வம் திரிவண்ணமாலி கூறுகையில், ” இது அவருடைய கைகளில்  இல்லை, வருவாய்த் துறையிடமிருந்து உத்தரவு வந்தது  என்பது தெளிவாகத் தெரிவதாக” கூறினார் . இந்நிலையில் மக்களை தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர்.

கோவிந்தராஜன் என்ற செல்வாக்குள்ள நபர் நிலத்தின் மீது கண் வைத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவர் இருளர் மக்கள், முருகன் கோவிலுக்கு அருகில் வசிப்பதால் ஒரு தடை என்றும் மேலும் நிலம் கோவில் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

மேலும் இருளர்கள் எலிகளையும் பாம்புகளையும் பிடித்து பச்சையாக உண்பதற்கு பெயர் பெற்றவர்கள் என்று அவர் மேலும் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. பழங்குடி குடும்பங்களை வேரோடு பிடுங்குவதற்கு பண பரிமாற்றம் நடந்ததாக தெரிகிறது” என்று கூறினார்.

மேலும் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு முன்பே, கோவிந்தராஜனின் சில நெருங்கிய உதவியாளர்கள் அவற்றை அகற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ (எம்) தலைவர்களின் உதவியுடன், பெர்னமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் “மறுபுறம், கோவிந்தராஜன் ”  இருளர்கள் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் இது மோதலை ஏற்படுத்தும்” என்று போலீசாரிடம் கூறியதை போலீசார் நம்பினர்” என்றும் திரிவண்ணமாலி குற்றம் சாட்டினார்.

இருளர்கள் பொதுவாக 10-15 குடும்பங்கள் கொண்ட சிறிய குழுக்களாக ஓலைக் கூரை குடிசைகளில் தங்குவார்கள். அவர்கள் நீண்ட காலமாக கான்கிரீட் வீடுகள் மற்றும் பட்டாக்களுக்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் விரக்தி மற்றும் கோபமடைந்த, 11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், தங்கள் குழந்தைகளுடன், சமையல் பாத்திரங்கள் மற்றும் எலிகளை எடுத்துச் சென்று, எதிர்ப்பு தெரிவித்து, தாசில்தார் அலுவலகத்தை ஆக்கிரமித்தனர்.

இருளர் குடும்பங்களுக்கு ஆதரவாக TNUEF, TNMMS மற்றும் CPI (M) ஆகியவற்றை சேர்ந்த  சுமார் நூறு உறுப்பினர்கள் தாசில்தார் அலுவலகத்தின் வாயிலில் போலீசார் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட்டனர். தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் வெறும் பட்டா மட்டும் கோரி  மூன்று மணி நேரம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

“இறுதியாக இரவு 11 மணியளவில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் ” மாற்று இடவசதி கொடுக்காமல் குடிசைகளை அகற்றியது தவறு என்று ஏற்றுக்கொண்டார்” என்று திரிவண்ணமாலி கூறினார். “விரைவில் அந்த 11 குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் என்று அரசாங்கப் பிரதிநிதிகள் சொன்ன பிறகும், நாங்கள் கலைந்து செல்லவில்லை. எங்களில் சிலர் அவர்கள் மாற்று இடம் தருவதாக கூறிய வீடுகளை காண போலீஸ் ஜீப்புகளில் பயணம் செய்து,  பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.இதுவரை, எட்டு குடும்பங்கள் பட்டா பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள இருளர் மிகவும் ஏழ்மையான,பழங்குடியினர் ஆவர். பல தலைமுறைகளாக  பாரம்பரியமாக  காடுகளில் வாழும் இந்த இருளர் மக்கள்  தற்போது நகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். நகர்ப்புறங்களில், அவர்கள் மின்சாரம் மற்றும் கழிப்பறைகள் இல்லாமல்  தார்பாலின் கூரை குடிசைகளில் தங்குகின்றனர். இன்றும், அவர்கள் தங்களது முக்கிய வாழ்வாதாரமாக மரம் வெட்டுதல் மற்றும் சிறிய விலங்குகளை வேட்டையாடுவது போன்றவற்றை செய்கின்றனர்.