ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைவர்கள் தோல்வியை சந்தித்தது தவிர்க்க முடியாதது – காரணமென்ன?

காபூல் நகரைக் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானின் அதிகாரப்புள்ளியாக தாலிபான் உயர்ந்துள்ளது. ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்டு ட்ரம்ப், ஜோ பைடன் என நான்கு அமெரிக்க அதிபர்கள் மீதான ஆப்கானிஸ்தான் படையெடுப்பு முடிவுக்கு வந்துள்ளது. இது 1965-75 ஆண்டுகளில் நடைபெற்ற வியட்நாம் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது

இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று – அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, தாலிபான்களுடனான 20 வருட போரை இழக்க வேண்டிய நேரம் இது என்று முடிவு செய்துள்ளனர்.

இரண்டாவது, கடந்த மே மாதத்திற்குள் டிரம்ப் தனது நிர்வாகத்தை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தருந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலைமைக்கு பைடனே காரணம் என்றும் இதுவே அமெரிக்க வரலாற்றில் மிகவும் அவமானம் மிகுந்த தோல்வி என்றும், இந்த விஷயத்தில் பைடனை விட, டிரம்ப் திறமையாக செயல்பட்டு இருப்பார் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது தொடர்பாக ஜோ பைடனை கடுமையான விமர்சித்துள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தொடர்ந்து கைப்பற்றிவருவதால், பைடன் ஆப்கானிஸ்தான் கொள்கையில் தோல்வியடைந்துள்ளார். தாலிபான்களுக்கு இனி அமெரிக்கா, அல்லது அமெரிக்காவின் சக்தி மீது பயமோ மரியாதையோ இருக்காது. காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தலிபான்கள் தங்கள் கொடியை உயர்த்தும்போது அது எவ்வளவு அவமானமாக இருக்கும். இது பலவீனம், இயலாமை மற்றும் முழுமையான தோல்வி” என்று கூறினார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் அமெரிக்கா இராணுவப் படைகளை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டது. வியட்னாம் சண்டைபோல் அல்லாமல், தான் ஆக்கிரமித்த நாடான ஆப்கானிஸ்தானை மறுசீரமைக்க அமெரிக்கா முனைந்தது. 2001-ஆம் ஆண்டு முதல், அமெரிக்க அரசு 48 பில்லியன் டாலரை செலவு செய்துள்ளது. இந்த முதலீட்டால் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பயனடைந்தன.

2011 முதல் அமெரிக்கா பெரிய அளவிலான ஜிஹாதித் தாக்குதல்களிலிருந்து விடுபட்டுள்ளது.  ஒரு நாட்டைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி என்ன என்பதை இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இவ்வுலகிற்கு காட்டியது. தன் தேசத்தின் தற்காப்புக்கான தனது கடமையை அதன் எதிரியை முழுமையாக தோற்கடித்து அந்த நாட்டை முறையாக சரணடைய செய்து விரோதங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது . ஆனால் ஒரு எதிரி சரணடைய மறுத்தாலும், தேசிய தற்காப்புக்கான கடமை இன்னும் உள்ளது.

இந்த யதார்த்தம் ஓரளவு மட்டுமே அமெரிக்காவிற்கு தெரிகிறது . உண்மையில், இந்த எண்ணம் இன்னும் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் உறிஞ்சப்படவில்லை. குறிப்பிட்ட, “ஜிஹாதிஸ்ட் அமைப்புகளை தோற்கடிப்பது”  போரை வெல்லும் என்று சொல்லும் மனநிலையில் இன்னும் அமெரிக்கா சிக்கிக்கொண்டிருக்கிறது . இந்த தவறான புரிதலுக்கான காரணங்கள் சிக்கலானவை. இதற்கு அமெரிக்காவின் ஆரம்பகால வெற்றி  ஒரு காரணமாக இருக்கிறது – அதன் ஆரம்பகால வெற்றி நீண்ட பாதையில் முன்னேறுவதற்கான அதன் திறனை தடுக்கிறது .

ஆப்கானிஸ்தானின் போரில் அமெரிக்காவுடன் இணைந்த கூட்டாளிகள் மிக மோசமாகத் தோற்றுப் போனதாக உணர்கிறார்கள். வாஷிங்டனுடன் பொறாமைப் படத்த “சிறப்பு உறவு” கொண்டிருந்த பிரிட்டிஷ் அமைச்சர்கள் கூட பைடனின் அவசர முடிவு குறித்து வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். ஐரோப்பியக் கூட்டாளிகள் எந்த அளவு அமெரிக்காவை சார்ந்திருக்கிறார்கள் என்பதை இந்தப் போர் தெளிவாகக் கோடிட்டுக் காட்டிவிட்டது. அமெரிக்கா ஒரு முடிவை எடுத்து அதன் போக்கில் செல்லத் தொடங்கிய பிறகு ஏதும் பேசாமல் அந்த வழியையே பின்பற்ற வேண்டிய நிலை இருப்பதையும் உணர்த்திவிட்டது. 

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் அதிர்ச்சிக்குள்ளானது சர்வதேச சமூகம். அந்த சமயத்தில் தான் அல்கொய்தா மற்றும் அவர்களது கூட்டாளிகள் இந்த உலகில் இரண்டாவது வலுவான சக்தியாக இருந்தனர்.

ஒசாமாவைக் கொல்ல அமெரிக்கப் படைகளுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இறுதியாக பாகிஸ்தானில் வைத்தே லேடன் கொல்லப்பட்டார். பின் லேடனும், அவரது கூட்டாளிகளும் ஆரம்பத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள டோரா-போரா மலையில் பதுங்கியிருந்ததாக கருதப்பட்டது. அமெரிக்கர்களுக்கு கிடைத்த இந்த வெற்றியை இரண்டாம் உலகப் போர் பாணியிலான வெற்றியாக கருதினர்.

இந்த 20 ஆண்டுகளை அமெரிக்கா, தலிபான்களின் இடைக்கால ஒடுக்குமுறையின்றி மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த ஆண்டுகளாக நினைவுப்படுத்தும். ஆனால் அமெரிக்க தலைவர்கள் அமெரிக்கர்களிடம் போரின் உண்மை பற்றி தவறாக வழிநடத்துகின்றனர். உதாரணமாக,டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மக்களின் சமாதானத்தை விட ” போர்களே நிரந்தரம் ” என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்.

தற்போது  பைடன் நிர்வாகம் அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது தொடர்பான விமர்சனங்களுக்கு எதிராக வாதிடுவது மிகவும் கடினம். ஆப்கானிஸ்தான் உண்மையிலேயே காப்பாற்ற முடியாத நாடாக இருக்கலாம். அதன் ஆளுகைக் கட்டமைப்புகள் ஊழல் மலிந்தவையாக இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தவை இல்லையே? கடந்த இருபது ஆண்டுகளில்தானே நடந்திருக்கின்றன?

என்ன வாதிட்டாலும் சட்டென வெட்டி வீசிவிட்டு புறப்பட்டிருப்பது அமெரிக்காவின் நம்பகத் தன்மை மீது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு கூட்டாளியாகவும், உலக விவகாரங்களில் தலையிடும் தார்மிக உரிமை கொண்டதாகவும் இருக்கும் அமெரிக்காவின் நம்பகத் தன்மைக்கு இது களங்கம்தான்.

2003-ஆம் ஆண்டில், ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. உண்மையில் இந்த போர்தான் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஆப்கானிஸ்தான் மீதான ஆர்வம் அமெரிக்காவுக்கு குறையத் தொடங்கியது. ஈராக் போரில், அல் கொய்தா -ஈராக் (al Qaeda in Iraq) அமைப்புக்கு எதிராக ஷன்னி விழிப்புணர்வு (Sunni Awakening) இயக்கத்துக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. அதேபோன்ற ஒரு யுக்தியைத்தான் ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தியது. உதாரணமாக, தாலிபான்கள் பெரும்பாலானோர் பத்தான் வகுப்பினரைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, எதிராக tajiks, Uzbeks போன்ற பிரிவினரை திரட்டும் முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், இந்த முயற்சி கடுமையாக தோல்வியடைந்தது. உதாரணமாக, தாலிபான் படைகளில் அதிகமானோர் tajiks, Uzbeks பிரிவினர் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பல்வேறு தரப்பினரின் ஆதரவைப்பெற்ற இயக்கமாக மாறியுள்ளது தாலிபான். தாலிபான் அமைப்பின் இந்த மாற்றமே அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஒபாமா ISIS இயக்கங்களை அது நட்பு கொண்டிருந்த நாடுகளில் நிறுத்தி பின்னர் கலிபாவை திரும்பப் பெறத் தேர்ந்தெடுத்தபோது, அமெரிக்கா நட்பு நாடுகள் ஈராக்கிய இராணுவத்திற்கு எதிராக இருந்த போதும், இராக் இராணுவம் நிலைத்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு அப்படி இல்லை. அரசாங்கமும் இராணுவமும் கிட்டத்தட்ட முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

இறுதியாக தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான இருதரப்பும் தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது அல்கொய்தா உலகின் மிக சக்திவாய்ந்த தேசத்திற்கு எதிரான நீண்ட மற்றும் முக்கியமான போரில் வெற்றி பெற்றுள்ளது. இது போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மாறாக ஒரு புதிய கேள்வியை எழுப்புகிறது. அமெரிக்காவை வெற்றிபெற்ற தாலிபான்கள் அடுத்து எங்கே தாக்குவர்? இந்த வெற்றி முடிவுக்கு வரவில்லை. மாறாக “முடிவற்ற போருக்கு” ஆணி வேராக மாறியுள்ளது . மேலும் அமெரிக்காவின் எதிரியான தாலிபான்களை மிகவும் ஆபத்தானவனாக்கியுள்ளது. தாலிபான்களின் இந்த வெற்றி அமெரிக்காவிற்கு பெரும் பிரச்னைகளை கொண்டுவரும்.

நியாயமாக சிந்தித்தால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி, தாலிபானின் வெற்றி என்று பொருள் கொள்வதை விட, கடந்த 20 ஆண்டுகளாக சுதந்திரத்தை அனுபவித்து வந்த ஆப்கான் மக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மையினர், பெண்கள், மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாக உணரப்படுகிறது.

-யாழினி ரங்கநாதன்