Malcolm X

தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது.
#Malcolm_X

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஏதேனும் கற்றுக்கொடுக்க விரும்பினால் போராடும் குணத்தைக் கற்றுக்கொடுங்கள். புதிதாக எதையாவது சொல்லித் தர வேண்டுமானால் உலக போராளிகளைப் பற்றியும், மக்களுக்காக அவர்கள் வாழ்ந்ததைப் பற்றியும் சொல்லிக் கொடுங்கள். ஏதேனும் புரியவைக்க விரும்பினால் மக்களுக்கான சமத்துவம் என்றால் என்ன என்பதைப் புரிய வையுங்கள்.

ஃபிடல் காஸ்ட்ரோவும், மால்கம் எக்ஸூம் சந்தித்துக் கொண்டபோது, ‘அமெரிக்காவுக்கு உள்ளும் ஒரு கலகக்காரன் இருக்கிறான். எனது ஆதரவு உனக்கு எப்போதும் உண்டு’ என ஃபிடல் தெரிவித்தார்.

எங்கெல்லாம் உன் உரிமை மறுக்கப்படுகிறதோ? எப்படியெல்லாம் அதிகார வர்க்கம் உன்னை அடிமைப்படுத்த எண்ணுகிறதோ? எப்போதெல்லாம் உனக்கான சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ? அப்போதெல்லாம் மால்கம் எக்ஸ் சொல்வது இதுதான். “உனக்கான சுதந்திரத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here