பெட்ரோல் நிலையங்களை புறக்கணிப்போம்

பெட்ரோல் , டீசல் விலை உயர்வு.

Related image

65 ரூபாயில் இருந்த பெட்ரோலின் விலை இப்போது 87 ரூபாயை தாண்டி தினசரி உயர்ந்து கொண்டே இருக்கிறது.எரிபொருளின் விலை உயர்வதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்னொருபுறம் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்வதால் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். மத்திய ,மாநில அரசுகளின் இந்த அடாவடி வரி விதிப்பு வெள்ளைக்கார அரசினை நினைவுப்படுத்துகிறது .

எதிர்க்கட்சிகளும், இயக்கங்களும் பலமான எதிர்ப்பினை காண்பித்து ஆளுங்கட்சியினை பணிய வைக்க தவறுவதால் மத்திய ,மாநில அரசுகள் விலையை தினமும் உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் .கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஒரே நோக்குடன் செயல்படும் இந்த அரசின் லாபவெறியினை அடக்க அவர்களின் விற்பனையை முடக்கினால்தான் அவர்களுக்கு வலிக்கும்.

பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றான தமிழகம் ஒருநாள்பெட்ரோல் நிலையங்களை புறக்கணித்தால் மத்திய ,மாநில அரசுகளுக்கு சில நூறு கோடிகள் இழப்பு ஏற்படும் .ஒரு நாள் புறக்கணித்தால் பெட்ரோல் விலையை குறைத்து விடுவார்களா? என்று பலர் கேட்கலாம் .இது ஒரு துவக்கம்தான் ,முதல் அடி சரியாக இருந்தால் அடுத்த அடிகளை பற்றியும் நாம் திட்டமிடலாம். துவக்கம்தான் பிரச்சனை .பெட்ரோல் நிலையங்களை புறக்கணிப்பது என்ற நடவடிக்கையை ஓவ்வொரு தனி நபரும் செய்ய முடிந்த செயல்.தங்கள் குடும்பம்,நண்பர்கள் வட்டம் ,முகநூல் வட்டம் என்று இந்த செயல் பரவும் போது மிகப்பெரிய விளைவினை உருவாக்கும் .முயன்றால்தான் என்ன செய்ய இயலும் என்றே தெரியும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here