9 மணி நேர வேலை- தொழிலாளர்கள் மீது மோடி அரசின் புதிய தாக்குதல்.- ராம்பிரபு


         அரசின் தொடர் ஒடுக்குமுறைகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு சட்டத்திருத்தங்கள் மூலமாக குறிப்பாக  குடியுரிமை திருத்த சட்டம் NPR ,NRC போன்றவைகளால் மதவெறியை தூண்டி மக்களை பலிகடாவாக்கும் செயல்களும்  ,சாதியப் படுகொலைகள் என இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் சூழ்நிலைகளில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்கும் வர்க்கமாக தொழிலாளர் வர்க்கம் இருப்பதாக தோன்றுகிறது.
  

ஏற்கனவே இருக்கும் 44 தொழிலாளர் நலச்சட்டங்களை  4 சட்டங்களாக மாற்றப்பட்டு இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இரண்டு சட்டங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அதில் ஒன்று 8 மணி நேர வேலையை 9 மணி நேரமாக மாற்றுவது . இதற்கான கருத்து கேட்புகள் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட நிலையில் அதில் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டதால் ,இந்த சட்டம் நடைமுறைக்கு வராது என நினைத்தால் இதைவிட பரிதாபம் வேறு இல்லை .சரி ஒரு மணி நேரம்தானே இதில் என்ன பாதிப்பு ? இதற்கான கூலி உயர்வு இருக்கத்தானே போகிறது என்று நினைக்கலாம் .

1000 தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலையில்  மொத்த 8மணி  நேரம் உற்பத்தி நடைபெருகிறது ஒரு மணி நேர உற்பத்திக்கான தொழிலாளர்களின் எண்ணிக்கை 1000/8=125 பேர்  இதுவே 9 மணி நேரமாக உயர்த்தப்பட்டால் 1000/9= 111.5 பேர் மட்டும் போதும்  சராசரியாக ஒரு மணி உற்பத்திக்கு 125 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும் இது உதாரணம் மட்டுமே நவீன தொழில்நுட்பம் தானியங்கி இயந்திரங்களை புகுத்துவதன் மூலமாக வேலை இழப்பு பல மடங்காக உயரும். ஏற்கனவே லாப வெறியில் தொழிலாளர்களை சுரண்டும் முதலாளித்துவம் மிக பெரிய பலத்துடன் இருக்கும் போது, அதை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய தொழிலாளர் வர்க்கம் எந்த திட்டமும் இல்லாமல் தனித்தனியாக போராடினால் எந்த தீர்வும் ஏற்படாது.

முதலாளித்துவ சித்தாந்தம் என்பது லாப வெறி மூலதன குவிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டது. அதனிடம் எந்த கருணையையும் எதிர்பார்க்க கூடாது  “எவ்வளவு சாத்தியமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்வது என்பதே முதலாளித்துவத்தின் சித்தாந்தம்” நாம் செய்ய வேண்டியது அவனுடைய சித்தத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பதல்ல முதலாளியின் சக்தியை பற்றி, அந்த சக்தியின் வரம்புகளை, அந்த வரம்புகளின் தன்மையை பற்றி விவரமாக ஆராய்வதே நாம் செய்ய வேண்டியதாகும்.  தொழிலாளர்களை வாழ வைப்பதே  முதலாளிகள்தான் என்ற கூற்று இன்று வரை கூறப்பட்டு வரும் நிலையில் “தொழிலாளர்களின் உபரி உழைப்பால் தான் மூலதனம் குவிக்கப்படுகிறது அதாவது தொழிலாளர்கள் போடும் பிச்சையால்தான் முதலாளிகள் வாழ்கிறார்கள் இந்த சுரண்டலை தக்க வைக்க முதலாளித்துவம் வரலாறு நெடுக எவ்வாறு செயல்பட்டு வந்துள்ளது ,அதை எதிர்க்க வேண்டிய தொழிலாளர் வர்க்கம் எவ்வாறு அணி திரள வேண்டும் என்று   நமக்கு  வழிகாட்டிய “மாமேதை காரல் மார்க்சை படிப்பது  அவர் எழுதிய மூலதனம் (முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை ) பற்றி பயில்வதும், அவர் வழிகாட்டுதல்படி முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவதும் இன்றைக்கு தொழிலாளர்களின் கடமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here