321 நபர்கள் பலியான இலங்கை குண்டு வெடிப்புக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.(ISIS) பொறுப்பேற்றுள்ளது

கொழும்பு மற்றும் மட்டகளப்பில் கிறிஸ்தவ தேவாலயங்கள்,ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் 321 உயிர்கள் பலியானதுடன் 500 க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர்.
2009 ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கையில் பொது இடங்களில் அதுவும் 8 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்து கடும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் திருநாளான ஈஸ்டர் சமயத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த குண்டு வெடிப்புக்கு உலகெங்கிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதற்கு யாரும் உரிமை கோரவில்லை என்பதால் செய்தது யார் என்ற மர்மம் நீடிக்கிறது.
குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கருதி 40 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறது.இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை நாங்கள்தான் நடத்தினோம் என்று அவர்கள் சொன்னாலும் அதற்கான எந்தவித ஆதாரத்தையும் தரவில்லை.ஏற்கனவே சில சமயங்களில் அந்த அமைப்பு தாங்கள் செய்யாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் அனைத்து பாதுகாப்பு பொறுப்புகளையும் ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here