
7 கட்டமாக நடந்து முடிந்த வாக்குபதிவுகளுக்கு பிறகு பெரும்பாலான ஊடகங்களால் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று வந்துள்ளது.
ஊடகங்கள் அனைத்தும் பா.ஜ.க வின் பிடியில் இருப்பதால் வேறு எப்படியும் வருவதற்கு வாய்ப்பில்லை.
துணை ஜனாதிபதியாக இருக்கும் பா.ஜ.க வை சார்ந்த வெங்கய்ய நாயுடு கருத்து கணிப்புகளை விட உண்மையான வாக்கு எண்ணிக்கை நடைபெறட்டும் அப்போது பார்க்கலாம், 1999 க்கு பிறகு வெளியான கருத்து கணிப்புகளில் பல தவறாக இருந்திருக்கிறது என்று சொல்லுமளவிற்கு உண்மை நிலவரம் இருக்கையில் இந்த ஊடகங்கள் தவறான தகவல்களை ஊதி பெருக்குகின்றன.
மேலும் வாக்குகளுக்கு பணமளித்து வெற்றி பெறுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மே-23 அன்று வாக்குகள் எண்ணிக்கை துவங்கப்பட்ட சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் இந்த கருத்து கணிப்புகளின் உண்மைதன்மை.
பா.ஜ. க வின் உள்ளிருந்தே இதுபோன்ற குரல்கள் ஓலிப்பது முடிவுகள் பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்காது என்றே எண்ண வேண்டியிருக்கிறது.