விவசாயிகளை ஏமாற்றும் PM கிசான் திட்டம்

 

 

விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம்.ஆண்டுக்கு 6000 ரூபாய் தருகிறோம் என்று அறிக்கை விட்டார் மோடி. வருடத்திற்கு 6000 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு 17 ரூபாய்.இந்த 17 ரூபாயை வைத்து விவசாயிகள் என்னதான் செய்ய முடியும்?
அது ஒருபக்கம் இருந்தாலும்
சமீபத்தில் விவசாயிகளுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் கிசான் திட்டத்தின் கீழ் வழங்குகிறோம் என்று அறிவிப்புகள் ,விளம்பரங்கள் பரவலாக தென்பட்டன. அனைவருக்கும் வழங்கிவிட்டோம் என்றும், வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் எனவும் ஆரவாரங்கள் பட்டையை கிளப்பின.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் அப்படி ஒரு விவசாயியை சந்தித்த போது அவர் சொன்னதுதான் அதிர்ச்சியை உருவாக்கியது.அவரது அலைபேசிக்கு 24.02.2019 அன்று உங்கள் வங்கி கணக்குக்கு கௌரவ நிதியாக 2000 செலுத்தியுள்ளோம் என குறுஞ்செய்தி வந்துவிட்டது.ஆனால் அவரது வங்கிகணக்குக்கு இதுநாள் வரை பணம் வந்து சேரவில்லை.
இதுதான் இவர்கள் விவசாயிக்கு பணம் வழங்கும் லட்சணம் . தேர்தல் சமயத்தில் விவசாயிகள் பெயரை சொல்லி நிதியை அபகரிக்கவே இந்த திட்டம். நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்துவிட்டு மக்களின் பொருளாதார வாழ்வை சீர்குலைய வைத்துவிட்டு மேலும் விவசாயிகளிடம் இருக்கும் கோவணத்தையும் பறிப்பதுதான் PM கிசான் திட்டம்.
மோடி எந்த திட்டம் கொண்டு வந்தாலும் கவனமாக இருங்கள் ஏனென்றால் பாதிப்பு பொதுமக்களாகிய நமக்குதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here