விரைவில் உள்ளாட்சி தேர்தல். – தனசேகரன்.

0
13

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பதவிகள் உள்ளன.

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பதவிகள் உள்ளன.

இதற்கான தேர்தல் 2016 அக்டோபர் முதல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு நிதி கிடைக்காமல் உள்ளது. சமீபத்தில் டில்லி சென்ற உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து உள்ளாட்சிகளுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என கோரினார். ‘தேர்தலை நடத்தினால் மட்டுமே நிதி வழங்க முடியும்’ என நிதி அமைச்சர் கறாராக கூறி விட்டார்.இதனால் தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. ஏற்கனவே 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையிலும் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தற்போது தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது.

இது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. இதில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்தும் முதற்கட்ட தேர்தலை நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்துவது எனவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இன்றும் ஆலோசனை தொடர உள்ளது. இதனிடையே தேர்தல் தேதி விபரம் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும். இதைத்தான் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். தேதி இறுதி செய்யப்படவில்லை. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here