வாக்களிக்க செல்லவிடாமல் சதி செய்த தமிழக அரசு

17/04/2019 அன்று சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற வைகை , பல்லவன் தொடர்வண்டிகள் அதை தொடர்ந்து இராமேசுவரம் மற்றும் அடுத்தடுத்த தொடர் வண்டிகளில் மக்கள் கூட்டம் வரலாறு காணாத அளவில் நிரம்பி வழிந்தது.
மக்களுக்கு கடந்த தேர்தல் எப்போதையும் விடவும் இந்த முறை வாக்களிக்க ஆர்வம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்; 4 நாட்கள் தொடர் விடுமுறை என்ற போதிலும். பேருந்தை விடவும் தொடர்வண்டியில் கட்டணம் குறைவு என்பதாலும் இந்த கூட்டம். ஆனால் மறுநாள் செய்திதாள்களில் போதிய பேருந்துகளை இயக்காதது தான் தலைப்பு செய்தி. இரவு செல்ல செல்ல இரண்டே பேருந்துகள் தான் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்ததாக செய்திதாள்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்படி எனில் மக்கள் வாக்களிக்க செல்லக் கூடாது என்று அரசு நினைக்கிறது என்றுதானே பொருள்.

  1. அந்த அளவிற்கு இளைஞர்களை கண்டு இந்த அரசு அச்சத்தில் இருக்கிறது.வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு இந்த அரசு புதிய முறைகளை கையாள்கிறது .இனி இளைஞர்களும் ,மக்களும் இதனை முன்னனுமானித்து இதுபோன்ற அரசின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here