வறுமை

பூநூலால் எழுப்பப்பட்டிருக்கிறது
ஊருக்கும் சேரிக்குமிடையிலான
காங்கிரீட்!
முதலாளிகளின் வாசலில்
காவலுக்கு கடவுள்;
தடுத்த நிறுத்தப்படுகிறார்கள்
உழைக்கும் ஏழைகள்!
நைந்து போன உடை
கிழிந்த போன கந்தல்;
பட்டாடை நெய்யும்
நெசவாளி!
ஊதிய உயர்வு
வழிப்பறி கொள்ளை
வீடுவந்து சேரவில்லை;
விலைவாசி உயர்வு!
முடிந்தது அறுவடை
தரகர் முகத்தில் மகிழ்ச்சி;
விவசாயி முகத்தில் கலக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here