மோடியின் வெளிநாட்டு கை கடிகாரங்கள் பறிமுதல்!

பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நிரவ் மோடியின் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது அமலாக்கப்பிரிவு.


இதன் தொடர்ச்சியாக நிரவ் மோடிக்கு சொந்தமான வங்கி கணக்கு மற்றும் பல்வேறு நிறுவன பங்குகளை முடக்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பங்கு பத்திரங்கள் நேற்று முடக்கப்பட்டன. மேலும் சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்தது. அதன்படி நிரவ் மோடியின் நிறுவனத்தி்ல் நடந்த சோதனையில் 30 கோடி ரூபாய் பணம் மற்றும் 13.86 கோடி ரூபாய் மதிப்பபிலான பங்கு பத்திரங்கள் இன்று முடக்கப்பட்டன. இந்த சோதனையின் போது, 176 அலமாரிகள் மற்றும் 158 பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் 60 பிளாஸ்டிக் பைகளில் இருந்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கைகடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here