மீனவப் பிரதிநிதிகளுடன் முதல்வர் சந்திப்பு – சென்னையில் போராட்டம் வாபஸ்!

மீனவப் பிரதிநிதிகளுடன் முதல்வர் சந்திப்பு - சென்னையில் போராட்டம் வாபஸ்!
மீனவப் பிரதிநிதிகளுடன் முதல்வர் சந்திப்பு - சென்னையில் போராட்டம் வாபஸ்!
கன்னியாகுமரியில் ஒக்கி புயலினால் கடலில் காணாமல்போன மீனவர்களை மீட்பதில் அரசு மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் நேற்று நடைபெற்ற போராட்டங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்நிலையில், சென்னையிலும் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவர்களோடு அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தினரும் கலந்துக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து, முதல்வரை மீனவப் பிரதிநிதிகள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது மீனவர்களை மீட்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை முதல்வர் விளங்கியதாக தெரிகிறது. பின்னர் சென்னையில் மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here