மாணவர் தலைவரிடம் ஏபிவிபி அராஜகம்!

பெண்கள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய அனைத்திந்திய மாணவர் கழகத்தைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் கவல்பிரீத் கவுர் மீது ஏபிவிபியினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததோடு அநாகரீகமாக நடந்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சத்யவதி கல்லூரியில் பெண்களுக்கு எதிரான அனைத்துவகை வன்முறைகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

குறித்த கருத்தரங்கில் கவல்பிரீத் கவுர் உரையாற்றியபோது ஏபிவிபியினர் அநாகரீகமாக நடந்துக்கொண்டதோடு, அவரை வசைபாடியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி கவல்பிரீத் கவுரை தாக்கவும் அவர்கள் முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் ஹிந்துத்துவ ஏபிவிபியினரிடமிருந்து கவல்பிரீத் கவுரை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here