மனம் என்ற ஒன்று இருக்கிறதா ?- சேலம் .S.மீனா- உளவியலாளர்.

மனம் என்ற ஒன்று இருக்கிறதா ?

ஆம் இருக்கிறது. மனம் என்பது என்ன வென்று நான் விளக்குவதற்கு முன்பு உங்கள் அனைவரிடமும் நான் சில கேள்விகள் கேட்கிறேன்.
மனம் என்றால் என்ன ?உங்கள் பதில்கள் என்னவாக இருக்கும் என்று நான் யூகிக்கட்டுமா?

மனம் என்பது இதயத்தில் இருக்கிறது!?

மனம் என்பது ஒரு தனிப்பொருள், அது மூளையில் இருக்கிறது!?

மனம் என்பது ஆன்மா!?

மனம் என்பது அடிக்கடி மாறக்கூடியது!? இன்ப துன்பங்களை உணர்தல்?!

ஏழைகள் மனசு வழியாக யோசிப்பார்கள்? பணக்காரர்கள் மூளை வழியாக யோசிப்பார்கள்?

இப்படி உங்களிடம் பல்வேறு பதில்கள் மனம் பற்றி இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனால், உளவியல் ரீதியாக மனம் என்பதை இவ்வாறு கூறலாம். மூளை இல்லை என்றால் மனம் இல்லை. பொதுவாக மூளை என்பது நம் வெளி செயல்பாடுகளை செயல்படுத்துவதாகவும் (எ.கா: கால், கைகளை செயல்படுத்துவது) மனம் என்றால் உள் செயல்களை குறிக்கும் சொல் (எ.கா: பயம், வெறுப்பு , அன்பு, கோபம், ஆசை போன்றவை) மற்றும் சிந்தனைகள், கற்பனை திறன், புலனுணர்வு, அடையாளம் காணல்,பாராட்டுதல், உணர்வுகளின் செயல்முறைகள், மனப்பான்மை மற்றும் செயல்களை வடிவமைத்தலில் மனம் முக்கிய பங்கு வகுக்கிறது .

மூளையை கடந்து அனுபவங்கள், பரிணாம தொடர்ச்சிகள் போன்ற பல காரணங்கள் மனதை உருவாக்குகிறது ஆனால் மனம் தனியாக இயங்குவதில்லை. மூளையே இயக்குகிறது. அனைத்தையும் நினைவுகளாக சேமித்து வைத்து சரியான சூழ்நிலையில் ரசாயனங்களை கடத்தி உணர்வுகளை வெளிப்படுத்துகிறது, இன்றைய நவீன தத்துவியலில் இருந்து உளவியல் முதல் பரிணாமம் , நரம்பு மண்டல அறிவியல் துறை வரை மனம் என்பதை நம் உடலுக்கு அப்பாற்பட்டது அல்ல என்று நிரூபித்தாகிவிட்டது (மனம் என்ற விடயத்தை அடுத்த கட்டத்துக்கு உளவியல் ரீதியாக கொண்டு சென்றவர் சிக்மன்ட் பிராய்ட்.

சேலம்.S.மீனா.
உளவியலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here