மதர்சன் நிறுவனம்- தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்.- ராம்


காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது மதர்சன் பன்னாட்டு தொழிற்சாலையில் 200 க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் வேலையில் உள்ளார்கள்.

தங்களது அடிப்படை உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் உலகம் முழுவதும் ஒரு லட்சம் தொழிலாளர்களை கொண்ட மதர்சன் குழுமத்தின் ஆண்டு வருமானம் 45,000 கோடி ரூபாய் . இந்நிலையில் 12 ஆண்டுகளாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பத்தாயிரம் ரூபாய் முதல் அதிக பட்சம் 12000 ரூபாய் மட்டுமே தரப்படுகிறது.இந்நிலையில் சங்கம் அமைக்க முடிவு செய்து AICCTU தொழிற்சங்கத்தின் மூலமாக சங்கம் அமைத்தனர் .அன்று முதல் நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டு கடந்த 12 நாட்களாக போராட்டத்தை தொடர்கின்றனர் தொழிலாளர்கள். மதர்சன் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு, ஹீண்டாய்,ரொனால்ட் நிசான் , JKM என பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டார்கள் . அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களின் ஒருங்கிணப்பும் வருங்காலத்தில் அவசியம் தேவை என பல தோழர்கள் பேசினர். இது தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி .

முதலாளி வர்க்கமும் அரசும் இணைந்து செயல்படும்போது தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் .இது போன்ற முன்னெடுப்புகள் தொடர வேண்டும். முதலாளித்துவம் அதன் வீழ்ச்சிக்கான வழியை தானாகவே தேடிக்கொள்ளும், அதை வீழ்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ளது .

மதர்சன் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here