போராடும் மாணவர்களுக்கு அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் ஆதரவு!

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்று மாணவர்கள் கடந்த 15 நாட்களாக போராடி வருகின்றனர்.இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான போராட்டத்தை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.சில மாணவர்கள் தொடர் உண்ணாநிலையிலும் உள்ளனர்.நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கூடி போராடி வருகின்றனர்.கல்லூரி நிர்வாகம்,சட்டத்துறை அமைச்சர் என பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முடிவுக்கும் வராததால் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர்.இந்தச் சூழலில் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம்(ATSA) மற்றும் தமிழ்நாடு தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று (மார்ச் 12,2018) போராடும் மாணவர்களை சந்தித்து தங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here