பொருளாதார நெருக்கடியும் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியும். – பிரபு

தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
பொருளாதார நெருக்கடி பற்றிய செய்திகள் அன்றாடம் நாம் பார்த்து வருகிறோம் குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுடிருகிறது
GDP – GROSS DOMESTIC PRODUCT உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிகவும் வீழ்ச்சி அடைந்துள்து .
GDP – salary- profit – income இதில் salary என்பது தொழிலாளர்களின் கூலி , profit என்பது முதலாளிகளின் லாபம் . Income என்பதில் நான்கு கூறுகள் உள்ளது C+ I+ G + EX இதில் நான்குமே சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.
C- consumption நுகர்வு, I-Investment தனியார், G – government expansion , மற்றும் export.
1990 முன்பாக அதாவது உலகமயமாக்கல் காலகட்டத்திற்கு முன்பு வரை அனைத்து தொழிற்துறைகளிளும் அரசின் முதலீடு அதிகமாக இருக்கும் இதனால் பொருளாதார நெருக்கடி காலகட்டங்களில் அரசு சமாளித்து வந்தது. 1990-க்கு பிறகு உலகமயமாக்கல் காலகட்டத்தில் அரசின் பங்களிப்பு குறைந்தது . தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் முதலீடு அதிகமாகின.

காலப்போக்கில் முதலாளிகளின் லாபவெறியால் தொழிலாளர்களின் கூலி குறைந்து கொண்டே சென்றது முதலாளிகளின் லாபம் அதிகமாகின. கிராம புறங்களில் நிலை மிக மோசமாக சென்றது. விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு ஏற்ப கூலி கிடைக்காமல் மேலும் மேலும் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். இப்படியாக சுரண்டப்படும் மக்களின் நுகர்வு தன்மை குறைந்து கொண்டே வருவதால் பொருளாதார தேக்க நிலை ஏற்படுகிறது. இது தவிர ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற காரணங்கள் நடுத்தர மக்கள் வாகனங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .இந்த நேரத்தில் அதிகமான முதலீடு செய்து வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய அரசு, பொருளாதார நெருக்கடி உள்ளதை ஒப்புகொள்ளகூட தயாராக இல்லை. தனியார் முதலாளிகளும் எந்த முதலீடும் செய்யாமல் இதை பயன்படுத்தி தொழிலாளர்களின் வேலைகளை பறித்து மேலும் வரிச்சலுகை பெற முயற்சிகின்றனர..

தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்து தற்போது நடைமுறையில் இருக்கும் 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கி ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். வரும் காலங்களில் நிரந்தர தொழிலாளி என்ற ஒரு பிரிவே இருக்க கூடாது என்ற நோக்கத்தில் முதலாளிகளுக்காக அரசு செயல்பட்டு வருகிறது .ஆகையால் இத்தகைய பொருளாதர நெருக்கடி என்ற நிலை தொழிலாளர்களின் உரிமைகளை ஒழித்து கட்டும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்.
நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் அதன் அமைப்புகளின் மீதான விமர்சனத்தையும் முன் வைக்க விரும்புகிறோம். எந்த ஒரு நிரந்தர தொழிலாளியும் உடன் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்காக பேசுவதும் போராடுவதும் கிடையாது .அவ்வாறு சில நடந்தாலும் அது நிரந்தர தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை ஒட்டியே இருக்கும்

அந்த நிலையை மாற்றி நாம் அனைவரும் ஒரே வர்க்கம் என்ற உணர்வினை ஓங்க செய்து அனைத்து தொழிலாளர்களையும் சுரண்டலில் இருந்து விடுவிப்பதே நமது கடமையாகும். சமூக விடுதலை என்பது பாட்டாளி வர்க்கத்தால்தான் சாத்தியம். ஆனால் தொழிலாளர்ளின் பிரிவினை என்பது முதலாளித்துவம் மேலும் வளரவே வழிவகுக்கும் .இனி அனைவரும் ஒருங்கிணந்து செயல்படுவதும் அரசு மற்றும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்தும் போராடுவதுதான் நம்முன் இருக்கும் ஓரே வாய்ப்பு.இல்லையேல், தொழிலாளர்களுக்கு எதிர்காலம் இல்லை.

பிரபு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here