பேரிடர் காலங்களில்…. அஸ்வினி கலைச்செல்வன்

பேரிடர் என்பது புவிக்காலநிலை மாறுபாடுகள் (Geo-climatic factors) காரணமாக ஏற்படுகின்றன.இவை நிலவியல் கூறுகள், சுற்றுப்புறச்சூழல் சீர்கேடுகள், மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாகவும் நிகழ்கின்றன.

இடர் (Hazard) என்பது, அபாயகரமானதாக உணரக்கூடிய ஒரு நிகழ்வு. அந்நிகழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பாதிப்பு, உயிரிழப்பு, சுகாதாரக் கேடுகள், உடைமைகளின் சேதம், சமுதாய மற்றும் பொருளாதாரச் சீர்கேடு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த இடரானது, உச்சநிலையை அடையும்போது பேரிடராக (Disaster) மாறுகிறது. மக்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டுப் பெருமளவில் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வைப் “பேரிடர்” என்கிறோம்.

இயற்கைப்பேரிடர்கள்…

நிலநடுக்கம் (Earthquake)
எரிமலை வெடிப்பு
சுனாமி
தொற்றுநோய்கள்
புயல் (Cyclone)
வெள்ளப் பெருக்கு (Flood)
வறட்சி (Drought)
நிலச்சரிவு
பனிச்சரிவு (Avalanche)
மின்னல் மற்றும் இடி (Lingtning and Thunder)

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

பேரிடரின் தன்மை, தீவிரம், தாக்கும் இடங்கள் மற்றும் இழப்புகளை அறிதல்

பேரிடரைத் தவிர்க்க இயற்கைவளங்களைசேகரித்தல் மற்றும் எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல்.
தகவல் தொடர்புகளை  மேம்படுத்தி  வைத்தல்.
பாதுகாப்பு அமைப்புகளை ஏற்பாடு 
செய்தல் .
பெண்கள், குழந்தைகள் மற்றும் இயலாதோர்களைக் காக்கும் உத்திகளை  வகுத்தல்.
உணவுப் பொருள்கள், எரிபொருள்கள் (சமையல் வாயு), குடிநீர், உயிர்காக்கும் மருந்துகள், துணிமணிகள், முதலுதவிப் பொருள்கள் முதலியவற்றைப் பேரிடர் காலங்களில் சேகரித்து வைத்தல்.
எச்சரிக்கைகளைச் சரியாகப் புரிந்துக்கொள்ளல்.
வதந்திகளைப் பேரிடர் காலத்தில் நம்பாதிருத்தல்
உரிய முன்னெச்சரிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுதல் இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவை வெகுவாகக் குறையும்)

அரசு தரப்பும்,அதிகாரமும்….

பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005), (டிசம்பர் 23, 2005) எண். 53, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 28, நவம்பா் 2005 லும், மக்களவையில் 12 டிசம்பா் 2005 லும் நிறைவேற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் இச்சட்டம் இந்திய குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றது. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005, 11 அத்தியாயங்கள் மற்றும் 79 பிரிவுகள் கொண்டதாகும். இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் பொதுவானதாகும். இந்தச் சட்டம் “பேரிடா்களின் திறமையான மேலாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர நிகழ்வுகளைத் தவிர்த்தல் குறித்தும் விளக்குகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NDMA) என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிறுவனமாகும். இதன் பிரதான நோக்கம் இயற்கை அல்லது மனிதா்களால் உருவாக்கப்பட்ட பேரிடா்களின் போதும், நெருக்கடி காலத்தின் போதும் விரைந்து பணியாற்றத் தேவையான செயல்திறன் மேம்பாடு மற்றும் பேரழிவு மீட்பு பொறுப்புகளையும் செயல்படுத்துவதாகும். இம்முகமை டிசம்பர் 2005 ல் இந்திய அரசால் இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். பிரதம மந்திரி இதன் (NDMA) முழுமையான அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார். இந்நிறுவனம் கொள்கைகளை வடிவமைத்தல், வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்வதுடன், மாநில பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் முழுமையான மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது. மேலும் அவற்றுடன் ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகைளயும் செயல்படுத்துகிறது.

இவ்வாணையத்தின் உறுப்பினர்கள்…

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், பதவி வழி உறுப்பினர்

அரசு தலைமைச் செயலாளர், பதவி வழி உறுப்பினர்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்

உள் துறை செயலாளர்

நிதித் துறை செயலாளர்

மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு மையத்தின் இயக்குநர்.

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் கட்டட பொறியியல் துறையின் தலைவர்.

அவசர காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய முதன்மை பணிகளாவன…

கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களின் மூலம் தேவை மதிப்பீடு செய்வது.

பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தேவைப்படும் பொருட்களை சமமாக பகிர்ந்தளித்தல்

புகலிடம் / நிவாரண மையங்கள் உணவு, உடை, போன்ற அடிப்படை வசதிகளுடன், பொது சுகாதாரம் மற்றும் சுத்தமான இருப்பிட வசதிகள் அளித்தது.

நிவாரண பொருட்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடித்தல்.

மக்கள் மனநிலையும், சூழலியல் பிரச்சினைகளும்…

மின் இணைப்பு துண்டிக்கப்படுதல்.

மின் தூக்கி வேலை செய்யாது.

குடிதண்ணீர் மாசுபடுத்தப்படும்.

தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும்.

சாதாரண போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு செயல் பாதிக்கப்படும்

இதர சூழலியல் பிரச்சினைகளால் பேரிடர் தீவிரத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்வது சிரமமாகிறது.

செவி வழி வதந்திகளால் மக்கள் பீதி அடைய வாய்ப்புகள் உள்ளன.

பொருளாதார மாற்றின்றி மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு, அன்றைய தேவைகளை பூர்த்தி செய்யவே சிரமப்படும் சூழலும், மறுசீரமைப்பிற்கு பின்னான காலங்களில் பின்னடைவுகளை சரிசெய்ய சிரமப்பட வேண்டியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளும், மருத்துவ உபகரணங்களின் போதாமையும் மிகுந்த அச்சத்தையும் கவலையும் தருவதாக அமைகிறது.

எதிர்க்கொள்ள நாம் ஒவ்வொருவரும் இன்று பேரிடர் மையத்தின் பொறுப்புணர்வோடு செயல்படுவோம்.

அஸ்வினி கலைச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here