பெண் – சுமதி விஜயகுமார்.

உலகெங்கிலும் மக்கள் மேல் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையான ஒடுக்குமுறை. நிறம், இனம், பணம் என்று பலவிதம்.

இந்தியாவிலும் , ஹிந்துக்கள் அதிகம் வாழும் அதன் அண்டை நாடுகளிலும் மட்டும் கூடுதலாய் ஜாதிய ஒடுக்குமுறை. இவ்வளவு ஒடுக்குமுறைகளிலும் அந்த ஒடுக்குமுறைக்குள் ஒடுக்கப்படும் இனம் என்று ஒன்று இருந்தால் அது பெண் இனம்தான். 

உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த பெண்களில் ஒருவரான பெப்சி நிறுவனத்தின் CEO இந்திரா நூயி ஒரு பேட்டியில் ‘வீட்டையும் வேலையையும் எப்படி ஒரே சமயத்தில் கவனித்து கொள்கிறீர்கள்?’ என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் எந்த ஒரு ஆணிடமும் இந்த கேள்வி வைக்கப்படாது. ஆண்களிடம் கேட்கப்படும் கேள்வி ‘உங்கள் குடும்பத்தினருக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்? ‘ என்று கேட்பார்கள். அதாவது வீட்டு வேலை என்றால் அது பெண்களுக்கு தான். அது உலகின் தலை சிறந்த பெண் ஆளுமை என்றாலும். இது ஆண்களின் எண்ணம் மட்டுமா என்றால் நிச்சயம் இல்லை. தன்னிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்ட நிருபருக்கு இந்திரா அளித்த பதில் ‘ என் அம்மா என்னிடம் எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் வீட்டில் நீ ஒரு அம்மா தான் என்று சொல்லி இருக்கிறார். நான் வீட்டிற்குள் நுழையும் போதே என் பதவிகளை வாசலில் விட்டுட்டு தான் உள்ளே நுழைவேன் என்றார்.

இந்தியாவிலும் , ஹிந்துக்கள் அதிகம் வாழும் அதன் அண்டை நாடுகளிலும் மட்டும் கூடுதலாய் ஜாதிய ஒடுக்குமுறை. இவ்வளவு ஒடுக்குமுறைகளிலும் அந்த ஒடுக்குமுறைக்குள் ஒடுக்கப்படும் இனம் என்று ஒன்று இருந்தால் அது பெண் இனம்தான். 

படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்றெல்லாம் இல்லை. ஏறக்குறைய எல்லா பெண்களின் நிலைப்பாடும் இதுதான். நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று சுயமாக இருக்க வேண்டும் என்பதை விட, நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நிறைய பெண்கள் படிக்க வைக்கப்படுகிறார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் உயர்தட்டு பெண்கள் தங்கள் கணவரின் தொழிலுக்கு உறுதுணையாய் மட்டுமே இருக்கிறார்கள். தங்களுக்கு என்று ஒரு பாதையை தேர்ந்தெடுப்பதேயில்லை. வெளியில் பார்க்க ஒரு பெரிய ஆளுமை போல் தோற்றமளித்தாலும் அந்த தொழில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அந்த கணவருக்கு தான் இருக்கும். இது நன்றாக படித்த பெண்களின் நிலை. 

படித்த பெண்களுக்கே இந்த நிலை என்றால் படிக்காத பெண்களின் நிலை இன்னும் எப்படி இருக்கும் என்று கவலை கொள்ள தேவையேயில்லை. படிக்காத பெண்கள் படித்த பெண்களை போல் அல்லாமல், தங்கள் வறுமையின் காரணமாக சிறிய வயதில் இருந்து வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் தங்கள் கால்களில் நிறுக்கக்கூடிய அளவிற்கு தகுதியுடைவயர்களாகவே இருக்கிறார்கள். 

கீழ்த்தட்டு குடும்பங்களில் இருப்பதை போல் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் அதிகம் சண்டை போட்டுக்கொள்வதில்லை. மென்போக்காக பார்த்தால் மேல்தட்டு,நடுத்தர மக்கள் உறவுகளை புரிந்து கொள்பவர்கள் போல் தோற்றமளிக்கும். அனால் உண்மை நிலை அதுவல்ல. படித்த நடுத்தர, உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மிக அளவில் சமரசம் செய்து கொள்வதினாலேயே அந்த குடும்பங்களில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. அதுவே படிக்காத அடித்தட்டு பெண்களுக்கு இது போன்ற போலி கவுரவங்களில் நம்பிக்கை வைப்பதும் இல்லை,அதை காப்பாற்ற சமரசங்கள் செய்து கொள்வதும் இல்லை. தன் கணவன் குடித்துவிட்டு வந்தாலோ இல்லை வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தாலோ வேறு எதை பற்றியும் கவலைப்படாமல் தன் கணவனுக்கு முன் நேருக்கு நேர் நின்று தங்களுக்கான நியாயத்தை பெற முயற்சிப்பார்கள். கல்வி மட்டுமே அறிவை தந்து விடாது என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம்.

படித்த பெண்களை விட படிக்காத பெண்கள் சற்று சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் இருக்கிறார்கள் என்றாலும் , எந்த நிலையிலும் எந்த நாட்டிலும் பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். விதிவிலக்காக சில பெண்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மிக சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும் என்பதற்கான உதாரணங்கள். 

இன்றளவும் பெண்கள் எந்த உடை உடுத்த வேண்டும் என்பதையும் எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்பதையும் ஆண்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அதிலும் மடமையிலும் மடமையில் ஊறி இருக்கும் சில பெண்களோ தங்கள் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து முன்னேறி கொண்டிருக்கும் பெண்களை ‘இவர்கள் பெண்மைக்கே இழுக்கு’ என்று சித்தரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

படித்த பெண்களுக்கே இந்த நிலை என்றால் படிக்காத பெண்களின் நிலை இன்னும் எப்படி இருக்கும் என்று கவலை கொள்ள தேவையேயில்லை. படிக்காத பெண்கள் படித்த பெண்களை போல் அல்லாமல், தங்கள் வறுமையின் காரணமாக சிறிய வயதில் இருந்து வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் தங்கள் கால்களில் நிற்கக்கூடிய அளவிற்கு தகுதியுடையவர்களாகவே இருக்கிறார்கள். 

உலகம் இப்படி இயங்கி கொண்டிருக்க அறிவியலோ நமக்கு வேறு பாடங்களை புகட்டி கொண்டிருக்கிறது. ஒரு ஆண் உருவானதே பெண்ணின் தேவைக்காகத்தான் என்பதை அறிவியல் ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறது. ஆதி காலத்தில் பெண்கள் வளர்ச்சியின் குறியீடுகளாய் பார்க்கப்பட்டிருக்கிறார்கள். தன் குழந்தைக்கு யார் தகப்பனாய் இருக்க வேண்டும் என்பதையும் பெண்களே தீர்மானித்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ சில பெண்கள் ‘ஆண்களை விடவும் பெண்களே சிறந்தவர்கள்’ என்று கூறி கொள்கிறார்கள். பெண்கள் பிள்ளைப்பேறு காலங்களில் அனுபவிக்கும் வலியை ஒரு போதும் ஆண்களுக்கு தாங்கி கொள்ள முடியாது அதனால் பெண்களே உயர்ந்தவர்கள் என்று கூறி கொள்கிறார்கள்.

உடல் வலிமையில் பெண்களால் ஆண்களை எப்படி தோற்கடிக்க முடியாதோ அது போல் ஆண்களால் பிள்ளைப்பேறு பெற முடியாது. அவர்களுக்கு இயற்கையாய் அமைந்த உடல் வாகு அப்படி. அவ்வளவே. மற்றபடி ஆணுக்கு பெண்களோ இல்லை பெண்களுக்கு ஆண்களோ அடிமைகள் இல்லை. உலக நியதி என்பது எப்போதும் சமத்துவம் தான் . இயற்கையும் நமக்கு உணர்த்துவது அதை தான்.

ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, வயதானவர்களோ அனைவருக்கும் தேவையானது சுதந்திரமும் சுய மரியாதையும் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here