பெரும்பான்மையானவங்க வீடு மட்டும் தான் உலகம்’ னு யோசிக்கிறவங்க இருக்காங்க …இன்னொரு பக்கம் கொஞ்சம் update ஆகி பெண் சுதந்திரம் பத்தி பேசுறவங்க…இதை தாண்டி சமூகம் குறித்து யோசிக்க இவங்களுக்கு நேரம் போதவில்லை போல..
……….விஜயராகவன்
பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியா இருக்கு அதான் முக்கிய காரணம்?அதுவும் தெருவுல இறங்கி போராடுற பொண்ணா இருந்தா அதுக்கு ஒரு எவ்ளோ பேர் வச்சி சமூகம் கூப்பிடுது,போராடுற பொண்ணு பாலியல் புகார் சொன்னா சமூக செயற்பாட்டாளர்களே,… தா,…மா,…யா, னு சொன்னா எந்த பொண்ணும் வராது அரசியலுக்கு,வேணா பெரிய கட்சியில் மேல் மட்ட பெண்கள் செல்வாக்கோடு வரலாம்
……………வாசுதேவன்
வீட்டில் அனைத்தையும் நிர்வகித்து அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுத்து சமூகத்தை சிறப்பாக கொண்டுவந்த பெண்களை புரட்சி என்ற போலி நாடகமாடி அவர்களை பொருள் தேடலில் ஈடுபடுத்தி அவர்களின் அறிவை மடைமாற்றம் செய்து, பெண்களின் உரிமையை இழக்கடித்துவிட்டனர்.
அதனாலேயே நல்லதொரு தலைமுறை தலையெடுக்கவும் முடியவில்லை, பெண்களால் அரசியலிலும் ஈடுபட முடியவில்லை, சிலரை தவிர…
பெண்களின் அரசியல் துவங்கவேண்டியது அவர்களின் இல்லங்களிலிருந்தே..
………புதூர் பாபு
சமையலறை இல்லாமல் வீடு கட்டும் போது சாத்தியமாகலாம்.. சமூகம் நம்பும் பெண்களுக்கே உரிய கடமைகள் உடையும் போதும்,ஆண்களின் கட்டுப்பெட்டித்தனமான எண்ணங்களில் சிறிதளவு மாற்றம் வருகையில் சாத்தியம்.
………..முத்துக்குமாரி
பெண்களை பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு அனுப்புவதே கடந்த 50 ஆண்டுகளாகத்தான். அதுவும் வேலை என்பது முடிந்தவரை அதிகம் ஊர் சுற்றாத, ஒரே இடத்தில் பணி புரிவது போல இருந்தால் தான் வீட்டில் இருப்பவர்கள் சம்மதிப்பார்கள். ஒரு பெரிய மேடையில் ஒரு பெண் மட்டும் இருக்க கீழே ஆண்கள் அமர்ந்து கொண்டு அவரை மேல் இருந்து கீழ் வரை பார்ப்பதை அரசியல் அனுபவம் இல்லாத குடும்பங்கள் விருப்புவதில்லை. மேலும் தரக்குறைவாக பேசுவதும் அரசியலில் சகஜம். ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதை எந்த சமூகமும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அரசியலில் இருக்கும் ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட அவர் வீட்டு பெண்கள் தான் தேவை படுகிறார்கள். இதில் அந்த வீட்டு பெண்ணே மேடையேறுவதை யார் விரும்புவார்கள்.
வீட்டிலேயே கூட ஆண்கள் அரசியல் பேசும் அளவிற்கு கூட பெண்கள் பேசுவதில்லை. பெண்களுக்கான மாத இதழ்கள் ஒழிந்தால்தான் பெண்கள் அரசியல் பழகுவார்கள்.
……..சுமதி விஜயகுமார்
பெண்கள் வருவதில்லை என்பது சரியல்ல. பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக வருகிறார்கள் என்ற பதம் சரியானது. அதன்படி பார்க்கையில் அரசியலில் ஆதிக்க போக்குகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் இருப்பதால் பெண்கள் பொதுவாகவே தனிமனித ஒழுக்கம் என்ற போர்வையில் கீழ் ஒடுக்கப்படுகிறார்கள். இது அரசியல் மட்டுமல்ல பாதுகாப்பு,சுய ஒழுக்கம் குடும்ப வாழ்வு இப்படியான பல சூழல் பிணைப்புகளில் செயல்படுவது மறுக்கப்படுகிறது.
……….அஸ்வினி கலைச்செல்வன்
வீட்டில் ஒரு அண்ணனும் தங்கையும் ஒரு மட்டைபந்து களத்தை விமர்சனம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவருமே சிறுவயது முதல் அந்த விளையாட்டை பார்த்து வளர்ந்தவர்கள் தான் ஆனால் இதில் அந்த பெண் ஒரு விமர்சனம் வைக்கிறாள் என்றால் அந்த அண்ணனின் மனதில் இயல்பாகவே ஒரு எண்ணம் இழையோடும் ,உனக்கு என்ன தெரியும் என்று நீயெல்லாம் பேசுறன்னு. ஒரு விளையாட்டை விமர்சனம் செய்வதில் கூட ஆண்கள் தேர்ந்தவர்கள் என்று அவர்கள் நம்புவதும் அதற்கு பெற்றோர்கள் ஆமாம் என்பதும் அந்த பெண் அதை கடந்து அடுத்த விமர்சனம் எடுத்து வைக்க யோசிக்க வைக்கிறது. சமூகம் பற்றி கேட்கவே வேண்டாம் இதில் அரசியல் வேறயா???.
……….கலைவாணி
முகநூல் பின்னூட்டங்களின் தொகுப்பு.