ஓகி புயல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டதை அனைவரும் அறிந்ததே.அந்தப் புயல் வீசிய சமயத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களில் 250 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.எனவே அந்தக் குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும்.ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை 8 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணத்தொகையான 20 லட்சத்தை வழங்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவாததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. உடனடியாக அரசு பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்பதே கன்னியாகுமரி மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.