புது அரசு…..வெ.தனபால்.

ஒரு கூட்டுத்துவ அரசை உருவாக்குதல் (புது அரசு)
1 . கூட்டுத்துவ வழிகளை நடைமுறை படுத்தவும், அக்கறையற்றவர்களை வற்புறுத்தவும், ஒரு நீடித்த உலகை படைக்கவும் நமக்கு ஒரு கூட்டுத்துவ அரசாங்கம் வேண்டும்
2 . இதற்காக, நமக்கு ஒரு கூட்டமைப்பு அதாவது ஒரு கட்சி அல்லது கூட்டணி வேண்டும்.
3 . முடியாட்சி காலத்தில் தேர்தல் இருக்கவில்லை. இப்போது இருக்கிறது. அரசியல் அதிகாரத்தை பெற தேர்தலுக்கு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
4 . தொடக்கத்தில், நீங்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், ஆகியவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்கு நிதி அளிப்பதன் மூலமும் வாக்களிப்பதாக உறுதி அளிப்பதன் மூலமும் உங்கள் ஆதரவை தெரியப்படுத்துங்கள்.
5 . அடுத்து, (பிரச்சார விநியோகம், கலந்துரையாடல், கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் போன்ற) கூட்டுத்துவ வேலைகளில் பங்களிப்பதன் மூலம் உங்கள் பங்களிப்பை அதிகரியுங்கள்.
6 . பல்வேறு உழைக்கும் மக்கள், சிறு விவசாயிகள், ஆகியோரை பிரதிநிதித்துவப் படுத்தும் (கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட், சுற்றுச்சூழலியலாளர், போன்ற) கட்சிகள் முன்னணி வகிக்க வேண்டும். அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.
7 . இத்தகைய கட்சிகளின் தலைவர்கள் இந்த வரலாற்றுப் பணியில் சுணக்கமாக இருக்கக் கண்டால், உறுப்பினர்கள் அவர்களை வற்புறுத்த வேண்டும், தேவைப் பட்டால், புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது பிற நல்ல கட்சியில் சேரவும் வேண்டும். நமக்கு புதிய தலைவர்கள் தேவை. நீங்கள் ஒரு சாத்தியமான தலைவரே.
8 . தற்போதைய குழுக்கள், தொழிற்சங்கங்கள், இயக்கங்கள் போன்றவை, குறுகிய இலக்குகளின் மீதான தங்கள் முயற்சிகளை குறைக்க வேண்டும், கூட்டுத்துவத்திற்கு இன்னும் அதிக நேரம் ஒதுக்க வேண்டும், அதோடு சரியான முன்னணியுடன் இணைத்துக் கொள்ளவும் வேண்டும்.
9 . இந்த மறுசீரமைப்புக்கு ஆதரவாக இருக்கும் சுரண்டலாளர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டலில் இருந்து விடுபட்டு தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்து அதை பலப்படுத்துவதன் மூலம் புதிய அரசில் பங்குபெற வேண்டும்.
10 . கூட்டணியானது கூட்டுத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கொள்கை அறிக்கையையும் அரசியலமைப்பையும் தயார் செய்து அவற்றை பரப்புரை செய்ய வேண்டும்.
11 . இந்த அறிக்கை முதலாளித்துவவாதிகளை (அல்லது தனிநபர் வாதிகளை) வென்றெடுக்க ஒரு ஊக்குவிப்புத் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். ஒரு உதாரணத் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
12 . ஒரு நிலைமாற்றத் திட்டம்: கூட்டு பங்கு நிறுவனங்களை கூட்டுத்துவமயமாக மாற்றி, ஆனால் அதே நிர்வாகத்தின் கீழ் 10 ஆண்டு இடைக்காலத்திற்கு விட்டுவைக்கப் படும். நிர்வாகத்திற்கு நியாயமான சம்பளம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நியாயமான பங்கீடு கொடுக்கப்படும்.
13. குடியிருப்பு சொத்துகளுக்கு நிலைமாற்றத் திட்டம்: ஒரு குடும்பம் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், ஒரு வீட்டை அதன் பயனுக்கு விட்டுவிட்டு மற்ற வீடுகளை கூட்டுத்துவ குடியிருப்புத் தொகுப்பில் சேர்க்கப்படும். நிலைமாற்ற காலத்தில் வாடைகயிலிருப்போர் முந்தைய உரிமையாளருக்கு வாடகை செலுத்துவர். வாடகை ஒவ்வொரு ஆண்டும் 10% குறைக்கப்படலாம்.

 1. பங்கீடு அல்லது வாடகை ஒவ்வொரு ஆண்டும் 10% குறைக்கப்படலாம். சமூக நிலைமைகளில் படிப்படியான முன்னேற்றம் இந்த படிப்படியான குறைப்பை நியாயப்படுத்துகிறது.
 2. நிலைமாற்ற காலத்தின் முடிவில், நிறுவனமோ, குடியிருப்போ முற்றிலும் கூட்டுத்துவப்படுத்தப்பட்டதாக இருக்கும்.
  16 . அனைத்து புதிய தனியார் முன்முயற்சிகளும் எதிர்கால நிலைமாற்றத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அனுமதிக்கபடும்.
  17 . புதிய கொள்கை அறிக்கை மற்றும் அரசியலமைப்பின் மீது விரிவான மற்றும் தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இந்த பிரச்சாரத்தில் அனைத்து கூட்டுத்துவவாதிகளும் பங்கேற்பர். ஆவணங்கள் எளிமையாக இருக்க வேண்டும். அப்போது தான், அவை குறைவான பொருள் மற்றும் பணச் செலவில் சாதாரண மக்களிடையே பரவலாக விநியோகிக்கப் படலாம்.
  18 . சுரண்டப்படும் வர்க்கத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் விளக்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் 10-15 ஆண்டுகள் இந்த பிரச்சாரத்திற்கு ஒதுக்கலாம்.
  19 . முன்வரும் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு பரந்த ஐக்கிய முன்னணியை உருவாக்கலாம்.
  20 . நாம் அதிகாரத்திற்கு வரும்போது, புதிய அரசியலமைப்பை அமல் படுத்த வேண்டும்.
  21 . 2-3 முயற்சிகளில் தேர்தலில் போதுமான வெற்றி இல்லை என்றால், நாம் புரட்சிகர முறைக்கு செல்லலாம். தயாரிப்பு கால ஆண்டுகளின் அணி திரட்சியினால் அது எளிதாக இருக்கலாம்.
  22 . தேர்தலில் ஒரு தெளிவான வெற்றிக்கு பிறகும் கூட சில எதிர்ப்புகள் இருக்கும். போதுமான நபர்கள் கூட்டுத்துவ வாதிகளாக வென்றெடுக்கப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் புதிய ஏற்பாட்டைப் பாதுகாக்க நன்கு தயார் செய்யப் பட்டு அணி திரட்டப்பட வேண்டும்.
  23 . மற்ற நாடுகளுடனான சமனற்ற உடன்படிக்கைகளை திருத்தலாம் அல்லது ரத்து செய்யலாம். புதிய ஒப்பந்தங்கள் சமநிலை அடிப்படையிலோ அல்லது சிறப்புரிமை அடிப்படையிலோ போடப்படலாம்.
  24 . தற்போதைய அரசாங்க அதிகாரிகளில் பெரும்பாலானோர் தனிநபர்வாதிகள். அவர்கள் மேலும் மேலும் கூடுதல் தனியார்மயம், இலாபம் பார்த்தல், லஞ்சம், ஆகியவற்றிலேயே கவனம் கொண்டவர்கள். நீதிபதிகளும் அப்படியே.
  25 . இந்த அதிகாரிகளை (புதிய அரசியல் அதிகாரிகளால்) மேலே இருந்தும் (திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் மக்களின் நேரடி பங்கேற்பு மூலம்) கீழே இருந்தும் சரியான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.
  26 . புதிய அரசாங்கம் உருவான உடன், சமூகத்தை கூட்டுத்துவத்திற்கு படிப்படியாக தகவமைக்க வேண்டும்.