புதிய வாழ்க்கை – தனபால்.

எளிமையான பொறுப்பான வாழ்க்கை (புதிய வாழ்க்கை)
1 . எளிமையான உணவு, உடை, வீடு என்பது வளமான வாழ்க்கை, வறுமை அல்ல.
2 . நம் தற்போதைய வாழ்முறை நிலைக்கக் கூடியதல்ல. உணவு, உடை, வீடு முதலியவற்றில் மேலும் மேலும் கூடுதலான ஆடம்பரத்திற்காக மக்கள் போட்டி போடுகின்றனர்.
3 . சிலர் இன்னும் குறை ஊட்டம் உள்ளவர்களாக உள்ளனர். சரியான ஊட்டத்தை பெற அவர்களுக்கு ஏதுவாக்க வேண்டும்.
4 . யாரும் போதா உடை உடுத்த வில்லை. கிட்டத்தட்ட தற்போதைய ஆடைகள் அனைத்தெம் படோடாபமானவையும் நீடிக்க முடியாதவையும் ஆகும்.
5 . தற்போதைய குடியிருப்புகள் பெரும்பாலானவை படோடாபமானவை. கோடையில் தகிக்கவும், மழையில் ஏராளமாக கசியவும், குளிர்காலத்தில் உறையவும் செய்யும் சில எளிய வீடுகளைத் தவிர மற்ற எதுவும் மோசமானவை அல்ல.
6 . உணவு, துணி, வீட்டுவசதி ஆகியவற்றின் அதீத நுகர்வினால் எழும் தேவை, விவசாயம், விலங்கு வளர்ப்பு, ஜவுளித் தொழில், தொழிற்சாலைகள் முதலியவற்றில் நம்மை இயற்கைக்கும் நமக்கும் தீங்கு விளைவிக்கும் சில வேதிப் பொருள்கள் மற்றும் வழி முறைகளை பயன்படுத்தும் படி நிர்பந்தித்திருக்கிறது.
7 . நீர், காற்று, ஆகியவற்றின் தற்போதைய மோசமான நிலை நமது தனிநபர் மற்றும் கூட்டு வாழ்க்கை முறைகளில் தீவிர மாற்றங்களைக் கோருகின்றன.

8 . உணவு
9 . எளிய உணவு ஆரோக்கியமானது மற்றும் நீடிக்கக்கூடியது. எளிய சமையல் நல்லது. விரிவான தயாரிப்பு தேவைப்படும் உணவுகள் நல்லவை அல்ல.
10 . சிறப்பு நேரங்களில் ஒரளவுக்கு சிறப்பான உணவு விரும்பத் தக்கது

11 . உணவை வீணாக்குவது மிகவும் மோசமானது.
12 . உள்ளூர், பருவகால மற்றும் பிராந்திய உற்பத்தி உணவுகளை சாப்பிடுவது போக்குவரத்து மற்றும் சேமிப்பில் ஏற்படும் விரயங்களை குறைப்பதால் நல்லது மற்றும் நீடிக்கக்கூடியது. அயல்நாட்டு உணவைச் சுவைப்பதை சில முறைகளுக்கு மட்டும் என்று தன்னிச்சையாக கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
13 . போதுமான உணவு பொருட்கள் விளைவிக்கப் படாத இடங்களுக்கு அருகிலுள்ள பிராந்தியங்களில் இருந்து அவை தருவிக்கப் படலாம்.
14 . உணவுக்கு சுவை சேர்க்க சிறிய அளவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் உலகளவில் பகிர்ந்து கொள்ள முடியும்.
15 . தேயிலை, காபி, கோகோ போன்றவை அத்தியாவசிய உணவுகள் அல்ல. அவற்றின் அதிகரித்த நுகர்வு பரந்த காடழிப்புக்கு வழிவகுக்கிறது. அவற்றின் உற்பத்தி தற்போதைய பரப்பளவில் நிறுத்தப் பட்டு படிப்படியாக பாதுகாப்பான அளவிற்கு குறைத்து சில பகுதிகளை மீண்டும் காடுகளாக்க வேண்டும்.
16 . பெரியவர்களுக்கு பால் தேவையில்லை. அவர்கள் பால் மற்றும் பால் பொருட்களின் நுகர்வை நிச்சயமாக குறைக்கலாம்.
17 . குளிர் நாடுகள் இயற்கையாகவே அதிகமான மேய்ச்சல் நிலம் மற்றும் அதிக பால் கொடுக்கும் கால்நடைகளை கொண்டிருப்பதால் அவர்கள் இதில் தாராளமாக இருப்பது இயற்கையானது தான்.
18 . எந்த விலங்கு உணவையும் மிதமாக உண்ணவும்.
19 . தொழில்மயமான விலங்கு வளர்ப்பானது இயற்கையின் மீது பல அத்து மீறல்களையும் (தாயிடமிருந்து இளம் கன்றுகளை பிரிப்பது போன்ற) உணர்வுள்ள உயிர்களுக்கு எதிரான கொடூரங்களையும் கொண்டது. விலங்குகளை சரியான எண்ணிக்கையில் முடிந்தவரை இயற்கைக்கு நெருக்கமாக வளர்ப்பது நெறிமுறைக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் இயைந்ததாக இருக்கும்.
20 . உயிருள்ள விலங்குகளை நீண்ட தூரம் வாகனங்களில் எடுத்துச் செல்வது அவைகளுக்கு தீவிர சித்தரவதையை ஏற்படுத்தும் என்பதால் அது நிறுத்தப் படவேண்டும்.

21 . நீர்
22 . தற்போதைய நீர் பயன்பாடு சிக்கனமானது அல்ல. நீர் துஷ்பிரயோகம் அதன் பகிர்வில் மோதல்களுக்கு வழி வகுக்கிறது. நீர் சிக்கனமான முறையில் பயன்படுத்தப் பட வேண்டும்.
23 . சில மலைப்பாங்கான இடங்களில் தண்ணீர் தாராளமாக கிடைக்கின்றது. அங்கே இருக்கும் மக்கள் மற்றவர்களுக்கான நீரை மாசு படுத்தாத பட்சத்தில் அதை தாராளமாக பயன்படுத்தலாம்.
24 . தூய்மையைப் பற்றிய மனப்பித்தை நாம் வெல்ல வேண்டும். தண்ணீரை சேமிப்பதற்கும், அதை மாசாக்காமல் காப்பதற்கும், தூய்மையான சேமிப்பை உறுதிப் படுத்துவதற்கும், சமையல், கழுவுதல், குளியல், கைகால் அலம்புதல் முதலியவற்றை சிக்கனமாக செய்யவேண்டும்.
25 . அடிக்கடி சுத்தம் செய்தல் நீர் மற்றும் சோப்பு போன்ற பொருட்களின் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கிறது, ஒரு குறிப்பிட்ட அளவு அழுக்காகும் போது மட்டும் சுத்தம் செய்யுங்கள். இதுதான் ஒட்டுமொத்த தூய்மை ஆகும்.
26 . நீங்கள் எப்போதுமே சுத்தமாக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் சமுதாயத்தை அழுக்காக்குகிறீர்கள் என்றும் அதன்மூலம் உங்களையும் அழுக்காக்கிக் கொள்கிறீர்கள் என்றும் பொருள்.
27 . வீடு, பணியிடம், பண்ணை அல்லது தொழிற்சாலை என்று எதுவாக இருந்தாலும், நீரை சரியான பயன்பாடு மற்றும் திட்டமிடல் அடிப்படையில் பொறுப்பு உணர்வுடன் பயன்படுத்த வேண்டும்.
28 . நீர்வழிகளையும் நீர்நிலைகளையும் சுத்தமாக வைத்திருங்கள். சுத்தப் படுத்தப் படாத பயன்படுத்திய நீர் மற்றும் மாசுபாடுகளை அவற்றில் கலக்க விடாதீர். நீர்ப்பிடிப்பு பகுதிகளை சுத்தமாக வைத்திருங்கள்.
29 . நீர்நிலைகளிலிருந்தும் நிலத்தடியிலிருந்தும் குறைந்தபட்ச நீரை மட்டும் எடுத்துக்கொள்வது மற்றவர்களுக்கும் தமக்கும் இனிமையாக இருப்பதாகும்.
30 . வீடுகளில் பயன்படுத்தப் பட்டு வெளியேற்றப் பட்ட நீர் எந்த மாசுபாடும் இல்லாமலோ அல்லது குறைந்தபட்சமே கொண்டதாகவோ இருக்க வேண்டும்.

31 . வீட்டில் பயன்படுத்தப் பட்ட நீர் வீட்டைச் சுற்றி பயன்படுத்தப் பட வேண்டும். அது முடியாதென்றால், சேகரித்து அருகாமைப் பகுதியில் தாவரங்களுக்காக பயன்படுத்த வேண்டும். அதுவும் முடியாதென்றால், சேகரிக்கப் பட்டு, நன்றாக சுத்திகரிக்கப் பட்ட பிறகு இயற்கை நீர்வழிகளில் அல்லது நீர்நிலைகளில் கலக்க வேண்டும்.
32 . தொழிற்சாலைகளிலிருந்து பயன்படுத்தப் பட்டு வெளியேற்றப் பட்ட நீர் நன்றாக சுத்திகரிக்கப் பட்டு எந்த மாசுபாடும் இல்லாமலோ அல்லது குறைந்த பட்சமே கொண்டதாகவோ இருக்க வேண்டும். அதை அருகாமைப் பகுதியில் தாவரங்களுக்காக பயன்படுத்த வேண்டும். அது முடியாதென்றால், மேலும் நன்றாக சுத்திகரிக்கப் பட்ட பிறகு, இயற்கை நீர்வழிகளில் அல்லது நீர்நிலைகளில் கலக்க வேண்டும்.
33 . நீரின் மாசுபாட்டைத் தடுப்பது அதை சுத்திகரிப்பதைக் காட்டிலும் எளிதானது. எனவே நமது குறிக்கோள் முடிந்தவரை மாசுபாட்டைக் தடுப்பதாக இருக்க வேண்டும்.

34 . உடை
35 . வெப்பமண்டலமோ, குளிர்மண்டலமோ, கோடையோ அல்லது குளிர்காலமோ, இயற்கையுடன் முடிந்தவரை ஒன்றி வாழ்வது நல்லது.
36 . துணியை முடிந்தவரை குறைவான அளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும். எ.கா., வெப்ப மண்டலங்களில், வயல்களில் வேலை செய்யும் போது, ஆண்களுக்கு கோமணம் போதும். வெப்ப மண்டலங்களில், முழு கால்சட்டையைக் காட்டிலும் குறைவான துணி தேவைப்படுவதால், அரை கால்சட்டையை பொதுவான உடையாக பயன்படுத்தலாம்.
37 . செயற்கை இழைகள், சாயங்கள், போன்றவை மாசு படுத்தக் கூடியவை. எனவே அவற்றின் தேவை குறைந்த பட்சமாக வைக்கப்பட வேண்டும். இயற்கை இழைகளும் சாயங்களும் விரும்பத் தக்கவை.
38 . நூற்பு, நெசவு, தையல், இஸ்திரி, போன்றவைக்கு ஆற்றல் தேவை. எனவே, இவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
39 . ஆகவே, நாம் வைத்துள்ள உடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். வழக்கமான வேலையில் சாதாரண பயன்பாட்டிற்கு 2-3 ஜோடிகள் மற்றும் சிறப்பு சமூக பயன்பாட்டிற்காக 2-3 ஜோடிகள் போதும்.
40 . ஒரு துணி பல ஆண்டுகளாக நீடிக்கும். வயது வந்தவர்கள் தங்கள் ஆடைகளை அவைகள் தாங்கும் வரை பயன்படுத்தலாம். குழந்தைகள் தங்கள் துணிகளை விட்டு வேகமாக வளர்கிறார்கள். ஆகையால், வயதான குழந்தைகளிடமிருந்து உடைகள் பெறப்பட்டு இளைய குழந்தைகளுக்கு ஒப்படைக்கப் படலாம்.

41 . துணிகளை துவைக்க நீர், சோப்பு போன்றவை தேவை. ஆகையால் துவைப்பதை நியாயமான அளவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். துணி உண்மையிலேயே அழுக்காக இல்லை என்றால் ஒரு பயன்பாட்டிலேயே துவைப்பது மோசம். 2 அல்லது அதற்கு மேற்பட்ட உபயோகத்திற்கு பிறகு துவைப்பது நல்லது. இதை துணி எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அதன் அடிப்படையில் முடிவு செய்யலாம். சற்று அழுக்கான துணியை அணிந்து கொள்வது சூழலுக்கும் அதன் மூலம் நமக்கும் ஏற்றது.
42 . இஸ்திரி போடுவது அவசியமில்லை அல்லது சிறப்பு சந்தர்ப்பங்களுக்கு மட்டும் போடலாம். சுருங்கலான துணி இயற்கைக்கு நெருக்கமானது.
43 . ஃபேஷனை துணி உபயோகத்தின் அளவைக் குறைப்பதற்கு பயன்படுத்தப் பட வேண்டும். குறைந்த துணி என்றால், குறைந்த பருத்தி போன்ற இழைகளின் சாகுபடி என்று பொருள். குறைந்த தோல் மற்றும் கம்பளி என்றால், குறைந்த மேய்ச்சல் நிலம், குறைந்த மேய்ச்சல் என்று பொருள்.
44 . டை, லேஸ் வேலை, எம்பிராய்டரி போன்ற பொருட்களுக்கு அலங்காரத்தைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை, எனவே அவை அவசியமற்றவை.
45 . வேலை செய்யும் போது, நமது உடலையும் உறுப்புகளையும் பாதுகாக்க சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம். அவை முடிந்த அளவுக்கு பகிர்வு-பயன்பாட்டில் வைக்கப்படலாம். வெய்யிலில் வேலைசெய்யும் போது அதிலிருந்து பாதுகாக்க தொப்பி போன்ற உபகரணம் நல்லதே.
46 . விவசாயம் அல்லது தோட்டக்கலை வேலைகளில் கையுறை மற்றும் சிறப்பு பூட்ஸ் ஆகியவை தேவையில்லை. எளிய குப்பைகளை சேகரிக்க கையுறைகள் தேவையில்லை. இது போன்ற பொருட்கள் மாசுபாட்டை மேலும் கூட்டவே செய்கின்றன.

47 . வீடு
48 . சிறிய வீடுகள் மற்றும் வேலையிடங்கள் தவிர்த்து, தற்போதைய கட்டமைப்புகள் சுற்றுச்சூழல் ரீதியில் விலை உயர்ந்தவை.
49 . செங்கற்களில் பயன்படும் மேல்மண்ணும், மணலும் விலை மதிப்புமிக்கவை மற்றும் ஈடுசெய்ய முடியாதவை. மரம், வைக்கோல், போன்றவை சிக்கனமாக பயன்படுத்தும் போது இயற்கையானவை.
50 . அளவு மற்றும் வடிவமைப்பு செயல்பாட்டளவில் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

51 . கும்பங்கள், கோபுரங்கள், வளைவுகள், தூண்கள் மற்றும் பிற செயல்பாட்டளவில் பயனற்ற உறுப்புகளுடன் கூடிய பெரிய கட்டமைப்புகளைப் பார்த்து நாம் பிரமிக்கக் கூடாது. இத்தகைய அம்சங்கள் அவற்றின் கட்டுமானத்திலும் மற்றும் பராமரிப்பிலுமான அதிகமான பொருட்கள் மற்றும் வேலை போன்றவற்றின் விரயத்தைக் குறிக்கின்றன.
52 . தற்போதைய பெரிய மற்றும் பிரம்மான்ட கட்டமைப்புகள் செயல்பாட்டளவில் பயனற்றவை. அவற்றின் இறுதி ஆயுட்காலம் வரையிலும் அவை அதிகபட்சமாக பயன்படுத்தப் பட வேண்டும் என்பதற்காக அவற்றை சிறிய அலகுகளாக மாற்றுவதன் மூலம் மேலும் அதிக வீடுகள், அலுவலகங்கள் அல்லது பணி இடங்களுக்கு இடமளிக்க வேண்டும்.
53 . கட்டப்பட்ட நிலப் பகுதியை அதிகரித்துக் கொண்டே போகக்கூடாது.
54 . முடிந்தவரை இயற்கையான குளிரூட்டல் அல்லது வெப்பமூட்டலை பயன்படுத்துங்கள். கட்டிடங்களை இதற்கு தகுந்தாற்போல் அமைக்கவேண்டும். வெப்பமண்டலங்களில், அவ்வப்போது, குறிப்பாக கோடையில், மின்விசிறியை பயன்படுத்தலாம். சிறப்பு இடங்களான மருத்துவமனைகளின் தீவிர பராமரிப்பு அறைகள் போன்ற இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு குளிர்சாதனங்களை பயன்படுத்துவது இயற்கைக்கு நல்லதல்ல.
55 . தீவிர வெப்ப நாடுகளில் நியாயமான அளவு குளிரூட்டலும், குளிர் நாடுகளில் நியாயமான அளவு கணப்புமூட்டலும் தேவையானதே.
56 . பயண விரயத்தை தவிர்ப்பதற்காக வீடு பணியிடத்திற்கு நெருக்கமாக ஒதுக்கப் பட வேண்டும்.

57 . பள்ளிப்படிப்பு
58 . அருகாமை பொதுப் பள்ளிகள் நிலைக்கக் கூடியதாகவும், அதனால், சமூகத்திற்கு பொறுப்புடையதாகவும் இருப்பதால் பல பிரச்சினைகளுக்கு பதிலாக இருக்கின்றன.
59 . கட்டமைப்பு முடிந்தவரை எளிமையானதாக இருக்கலாம். வெப்ப மண்டல பிராந்தியங்களில், மர நிழல், கூரைவேய்ந்த அறைகள், விளையாட்டு மைதானம், சில திட கட்டிடங்கள், ஆய்வகங்கள், அலுவலகங்கள் போன்றவை ஒரு பள்ளிக்கூடத்திற்கு போதுமானதாகும்.
60 . பள்ளிக்கூடம் செல்வதில் எரிபொருள் உபயோகத்தை குறைக்க, நடுநிலைப்பள்ளி (வயது 12-13 வரை) மாணவர்கள் எந்தவொரு வாகனத்தையும் பயன்படுத்த வேண்டிய அல்லது முக்கிய சாலைகளை கடக்க வேண்டிய அதன்மூலம் அபாயத்தை எதிர்நோக்க வேண்டிய அவசியமில்லாமல், நடக்கும் தூரத்தில் குடியிருப்புப் பகுதியின் உள்ளே உள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும்.

61 . 13 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நடக்கும் அல்லது சைக்கிளில் செல்லும் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்தோ சைக்கிள் மூலமோ செல்லலாம். கல்லூரி மாணவர்கள் முடிந்தவரை நிறுவனங்களின் விடுதிகளிலேயே தங்கலாம். இதனால் அவர்கள் பயண நேரத்தை மிச்சப் படுத்தி கல்வியில் அதிக நேரம் செலவிடலாம்.
62 . பள்ளிக்கு செல்லும் போது (10 வயதுக்கு கீழேயுள்ள) இளம் மாணவர்களுக்கு துணையாக பெரியவர்கள் அல்லது மற்ற பெரிய மாணவர்கள் செல்லலாம்.
63 . பள்ளி சீருடை எளியமையாக இருக்க வேண்டும்.
64 . வெப்ப மண்டல நாடுகளில், ஷூ, ஷாக்ஸ், பெல்ட், போன்றவை மிகப்பெரிய பொருள் விரயமாகும். அவற்றின் உபயோகம் அவசியமாக இருக்கும் குளிரான கூடுதல் வசதி படைத்த நாடுகளைப் பார்த்து காப்பி அடிப்பதைத் தவிர வெப்ப மண்டல நாடுகளில் அவற்றின் பயன்பாட்டிற்கு என்ன நியாயம் இருக்கிறது?
65 . அத்தகைய உடுப்புகள் குழந்தைகளுக்கு சித்திரவதையே. ஷூ & ஷாக்ஸ் பிள்ளைகளின் கால்களை சூடாக்கி அசெளகரியமாக்கும். காலையில் பள்ளிக்கு தயார்படுத்துவது அதிக நேரத்தை எடுப்பதாகவும் எல்லோருக்கும் மன உழைச்சலை உண்டாக்கவும் செய்கின்றன.
66 . சீருடை, பாடப்புத்தகம், போன்றவை அடுத்த வருடம் போதுமான அளவுக்கு நன்றாக இருந்தால் மற்றவர்களுக்கு கொடுக்கப் பட்டு மறுபடியும் பயன்படுத்தப் படவேண்டும்.
67 . 5 ஆண்டுகள் முடிந்த பிறகு பள்ளிக் கல்வி ஆரம்பிக்க வேண்டும். இந்த வயதிற்கு முன் குழந்தைகள் விளையாட்டுப் பள்ளிக்குச் செல்லலாம்.
68 . 10 வருடங்கள் தாய்வழி / உள்ளூர் மொழியில் கல்வி கற்பிப்பது சிறந்தது. ஒரு சர்வதேச மொழியின் அடிப்படைகள் ஆரம்பத்திலிருந்து கற்றுக் கொடுக்கலாம்.
69 . ஆரம்ப பள்ளிக்குப் பிறகு, பயிற்சி (தாய் மொழி & சர்வதேச மொழி என) இருமொழியில் இருக்க முடியும். பாடப் புத்தகங்கள் இதற்கேற்றாற் போல், முக்கிய வார்த்தைகளும், வரையறைகளும் இரு மொழிகளிலும் கொடுக்கப் பட்டு, தயாரிக்கப்பட வேண்டும்.
70 . 12 வயதில் இருந்து சுயமாக கற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

71 . தொடக்கத்திலிருந்தே ஒரு வெளிநாட்டு மொழியை பயிற்று மொழியாக கொள்வது குழந்தைகளின் கற்கும் திறனை முடக்குவதற்கு சமமாகும். பிளவுபட்ட சமூகங்களில் சிறந்த வாய்ப்பை நோக்கிய ஒட்டத்தில் ஒரு குறுக்குவழியாக இந்த அணுகுமுறையானது பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மற்ற ஒப்பளவில் ஒற்றுமையான சமூகங்களைக் காட்டிலும் முடங்கிய சமூகத்தை உருவாக்குவதன் மூலம் இது சமூகத்திற்கு தீங்கையே விளைவிக்கிறது.
72 . பிளவுபட்ட சமூகங்களின் ஆளும் வர்க்கம், வெளிப்படையான காரணங்களுக்காக, ஒரு சீரான பொது பள்ளி முறையை விரும்பவில்லை. எனவே, அவர்கள் பொதுப் பள்ளிகளை நாசமாக்கி பெருமளவில் தனியார் பள்ளிகளை அனுமதிக்கின்றனர். இது சமூக பிளவுகளை உயிருடன் வைத்துக் கொள்வதோடு, அத்தகைய சமுதாயங்களை பாதித்துக் கொண்டே இருக்கும்.

73 . மினுக்கு
74 . மினுக்கும் தங்கம் போன்ற உலோகங்கள், வைரம் போன்ற கற்கள், பட்டு போன்ற இழைகள் போன்ற பொருட்களை அவற்றின் மினுக்கும் இயல்புக்காக மதிக்க வேண்டாம்.
75 . அவற்றின் பிரித்தெடுத்தல், போக்குவரத்து, தயாரிப்பு, சேமிப்பு போன்றவை சுற்றுச்சூழலுக்கு பெருத்த சேதத்தை உருவாக்குகின்றன.
76 . பல குற்றங்கள் மற்றும் சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் இந்த மினுக்கும் பொருள்களின் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது. இதுவே பெண்களின் ஆதிகால பாவமாகும். அவர்கள் இந்த பலவீனத்தை கைவிட்டு புதிய பெண்கள் ஆக வேண்டும்.
77 . சாத்தியமான எல்லா வழிகளிலும் மினுக்கும் பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக, மத மற்றும் அரசாங்க முகவர்களால் அவற்றிற்கு கொடுக்கப் படும் மதிப்பு மற்றும் அங்கீகாரத்தை நாம் கேள்வி கேட்கவும் நிராகரிக்கவும் வேண்டும்.
78 . மினுக்கும் உலோகங்களால் அல்லது கற்களால் அல்லது ஜிக்னா வேலைப்பாட்டால் செய்யப்பட்ட அல்லது மூடப்பட்ட சிலைகளையோ அல்லது கட்டிடங்களையோ பார்த்து பிரமிக்க வேண்டாம். அவைகள் இயற்கையில் பெருத்த சீர்கேட்டையும் மனித உழைப்பின் விரயத்தையும் குறிக்கின்றன. அதில் ஈடு படுத்தப் பட்டிருக்கும் மனித உழைப்பு பெரும்பாலும் கட்டாயத்தினால் நடந்ததே. சொல்லப் போனால், அவைகள் மனிதனின் பொருளற்ற போட்டியின் சின்னங்களாகவே திகழ்கின்றன.
79 . அது போன்ற விசயங்களை பாதுகாக்க கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது தேவையற்றதும் நீடிக்கமுடியாததும் ஆகும்.

80 . உடலுழைப்பு

81 . உடல் உழைப்பும் & நடத்தலும் நமக்கு அவசியம். இல்லையென்றால் நம் தசைகள் சூம்பி விடும். இயந்திரங்களும் வாகனங்களும் நமது தசைகளை செயலற்றவை ஆக்கிவிட்டன. ஒரு சமநிலையை அடையும் வரை இந்த போக்கு திசைதிருப்பப் பட வேண்டும்.
82 . உழைப்பிற்கு பலனளிக்காத, சில விசயங்களில் மின்சார ஆற்றலையும் வீணாக்குகின்ற ஜிம்களில் உடற்பயிற்சி செய்வதை விட இந்த உழைப்பை வீட்டு வேலையிலும் பொது வேலையிலும் பயனுள்ள வழியில் செலுத்த வேண்டும்.
83 . மூட்டுச்சிகிச்சைப் பயிற்சி அல்லது சமூகத்திற்கு பயனுள்ள விசயங்களுக்காக சிறப்பு பயிற்சி அல்லது தவிர்க்கமுடியாத வகையில் உடலுழைப்புக்கான வழி இல்லாது போகும் நிலை ஆகியவற்றைத் தவிர மற்ற நேரங்களில் ஜிம்மை நாடுவது நல்லதல்ல.
84 . குழு செயல்பாடுகள்.
85 . பயணம், போன்ற வழிகளில் பெருத்த விரயத்திற்கு வழிவகுக்கும் பலனற்ற பல கூடுதல்கள் இருக்கின்றன. அவைகளை புறக்கணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும்.
86 . கணிசமான விரயம் ஏற்படுத்தாத பட்சத்தில் மதசார்பற்ற விழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றவை மித அளவில் தொடரலாம்.
87 . சமூகம் முழுமைக்குமான மேம்பாட்டிற்கு உதவுகின்ற திறமைகளில் சிறந்தவர்கள் பலரை அடையாளம் காண்பதற்காக போட்டிகளை பயன்படுத்தலாம்.
88 . சமூகத்திற்கு பயன்படுமா என்ற சந்தேகமான துறைகளில் ஒரிரு வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது தனிநபர்வாதமாகும். அதனால் சமூகத்திற்கு எந்த பலனுமில்லை.

89 . விளையாட்டு
90 . தனிநபர்வாத சமூகத்தில் தனிநபர்வாதத்தை ஊக்குவிக்கும் வழிகளில் ஒன்று விளையாட்டு. ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் தனிநபர் விளையாட்டு போட்டிகள் இதற்கு எடுப்பான சான்றுகளாகும்.
91 . தான் வெல்லவேண்டும் என்பதற்காக எதையும் செய்யத்துணியும் எதிர்மறை உணர்வை இதுபோன்ற விளையாட்டுகளால் ஏற்படுத்த முடியும். மீச்சிறு வித்தியாசமே நாயக நாயகிகளை உருவாக்கப் போதுமானது. எதேச்சையாக கிடைத்த வெற்றியைக் கொண்டு ஒரு நாடே கொண்டாடுவதில் என்ன பொருள் இருக்கிறது?
92 . குழு விளையாட்டுகள் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. அவை குழு மற்றும் கூட்டுத்துவ உணர்வை அளிக்கின்றன. தனிநபர் போட்டிகளை விட குழு போட்டிகளை ஊக்குவிப்பது நல்லது.
93 . பல பேரிடம், ஓய்வு நேரம் முழுவதையும் விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. சில பேரிடம் இதுவே தொழிலாகி விடுகிறது. மற்ற பலருக்கு இதை பார்ப்பதே பொழுதுபோக்காகவும் இருக்கிறது. நீடித்துநிலைக்கும் உலகை படைக்கும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கும் போது மேற்கண்ட வழக்குகளெல்லாம் பலனற்றவை.

94 . பொழுதுபோக்கு
95 . ஒரு நியாயமான அளவு ஒய்வும் பொழுதுபோக்கும் மக்களுக்கு அவசியம்.
96 . அது நிலைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அது அதீத பயணத்தையோ பொருள் விரயத்தையோ ஏற்படுத்தக் கூடாது.
97 . கூட்டுத்துவ வேலைகளில் பங்கு பெறுவது நல்ல பொழுதுபோக்கு.
98 . கூட்டாக ஆடுவது, பாடுவது, இசைப்பது போன்றவை நல்ல பொழுதுபோக்குகள்.
99 . பொழுதுபோக்கை அளிக்கும் பாத்திரத்தை சிலர் மட்டுமே பிடித்துக் கொள்வது சரியல்ல. கிட்டத்தட்ட எல்லோருக்கும் இந்த பாத்திரம் கிடைக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.
100 . போதைப் பொருட்களின் பயன்பாடு கட்டுப் படுத்தப்பட்டோ தடை செய்யப்பட்டோ இருக்க வேண்டும். அவற்றின் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கும், சமூகத்தின் மீதான அவற்றின் தாக்கத்தை குறைப்பதற்கும் போதுமான சமூக கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.

101 . கலை, இலக்கியம்
102 . தற்போதைய கலாச்சார இலக்கிய படைப்புகளில் பெரும்பான்மை தனிநபர்வாத அம்சங்களிலேயே கவனம் செலுத்துகின்றன. அவற்றில் பெரும்பான்மை யானவற்றிற்கு இயற்கையைப் பற்றியோ அல்லது நிலைத்தன்மையைப் பற்றியோ எந்த அக்கறையும் இல்லை. நாம் கூட்டுத்துவ அம்சங்களில் கவனம் செலுத்துகின்ற, நிலைத்தன்மையை ஊக்குவிக்கின்ற புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும்.
103 . புதிய எழுத்துக்கள் பலரை அடைய வேண்டும் என்பதற்காக எளிமையாகவும், பொருட் செலவிலும், வேலையிலும், நேரத்திலும் சிக்கனத்திற்காக சுருக்கமாகவும் இருக்க வேண்டும்.
104 . தற்போதைய & மற்றும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப் படுவதற்கு தகுதிவாய்ந்த பழைய படைப்புகள் மேலே கூறிய நோக்கங்களுக்காக சுருக்கமாக்கவும் எளிமைப் படுத்தவும் படவேண்டும்.

105 . பயணம் & போக்குவரத்து
106 . அன்றாட அருகாமை பயணத்திற்கு நடந்தோ அல்லது மிதி வண்டியிலோ போகலாம்.
107 . முடிந்தவரை குறைந்தபட்சமாக பயணம் செய்யுங்கள். அதிக பயணமானது அதிக போக்குவரத்து நெரிசல், நேரம், விபத்துகள் என்று பொருள்.
108 . குறைந்த தீங்கைக் கொண்ட சைக்கிள், மின்சார வாகனங்கள், படகுகள், ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுங்கள்.
109 . முக்கிய சாலைகளிலும் நீண்ட பயனங்களிலும் பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். உட்புற சாலைகளிலும், கடைசி தூர போக்குவரத்திற்கு மிதிவண்டி, மோட்டர்பைக், 3-4 சக்கர வாகனம் போன்ற சிறிய பொது அல்லது தனியார் வாகனங்களை பயன்படுத்துங்கள்.
110 . இதற்கு தோதாக, அரசு கடைசி தூர போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்.
111 . போக்குவரத்து வாகனங்களில் ‘வகுப்புகளை’ புறக்கணிக்கவும் அகற்றவும் வேண்டும்.
112 . மாற்றுத் திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், வயதானவர்களுக்கும் போதுமான இடங்களை ஒதுக்கவும், விட்டுக் கொடுக்கவும் வேண்டும்.
113 . வாகனங்களை குளிரூட்டுவதற்கும், கணப்புமூட்டுவதற்கும் இதற்காக கட்டிடங்களுக்கு கொடுக்கப் பட்ட வழிகாட்டியை பின்பற்றவும்.
114 . கழிவு சேகரிப்பு, சேமிப்பு, மறுசுழற்சி போன்றவை உள்ளூர் மட்டத்தில் செய்யவேண்டும். அதனால் வீணான போக்குவரத்து மற்றும் குவிப்பு தவிர்க்கலாம்.
115 . தொலைதூர இடங்களைக் காண்பதற்கான பயணத்தை சில அனுபவங்கள் மற்றும் உண்மையான தேவைகளோடு தன்னிச்சையாக நிறுத்திக் கொள்ளலாம்.

116 . ஆடம்பரம்
117 . ஆடம்பரம், படோடாபம், மினுக்கு, போன்றவைகளை புறக்கணியுங்கள்.
118 . நீங்கள் ஆடம்பரத்தின் நுகர்வோராக இருந்தால் அதிலிருந்து முடிந்தவரை விரைவாக விடுபடுங்கள்.
119 . நீங்கள் ஆடம்பரத்தின் உற்பத்தியில் வேலை செய்தால் அதிலிருந்து முடிந்தவரை விரைவாக விலகி சமூக ரீதியில் பொறுப்பான வேலையை தேடிக் கொள்ளுங்கள்.
120 . ஆடம்பர விடுதிகள் போன்றவை பொறுப்பற்ற நுகர்வையும் விரயத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. புறக்கணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் அவைகளை பொறுப்பானவைகளாக மாற்ற வேண்டும்.
121 . சமூக அமைப்பினால் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளை மீறாமல் தனிநபர்கள் தங்கள் எளிமையின் அளவை தீர்மானித்துக் கொள்ளலாம்.
122 . நுகர்வை குறைப்பதற்கான பல்வேறு வழிகளை கண்டுபிடிக்கும் விதத்தில் ஆக்கப் பூர்வமாகவும் படைப்பு வளத்தோடும் இருங்கள்.

123 . பொதுசுகாதாரம்
124 . சாலைகள், வடிகால்கள், நீர்வழிகள், நீர்நிலைகள், கழிவறைகள், சிறுநீர் கழிப்பறைகள், கழிவு சேகரிப்பு வசதிகள், அடைக்கல வீடுகள் போன்ற பொது பயன்பாட்டு கட்டுமானங்கள் விலைமதிப்பற்றவை. அவற்றை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், நீண்டநாள் நிலைக்குமாறும் செய்ய வேண்டும்.
125 . தடையில்லா சாலை போக்குவரத்து, நீர்வழிகள், வடிகால், போன்றவை மிகவும் முக்கியம். அவற்றை சுத்தமாகவும் தடையில்லாமலும் பாதுகாக்க வேண்டும்.
126 . பொது இடங்கள், கடற்கரைகள், காடுகள், மலைகள், போன்ற இயற்கை இடங்கள் மிகவும் முக்கியம். அவற்றை முடிந்தவரை இயற்கைக்கு ஒட்டியதாக வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை குப்பையாக்கவோ அழுக்காக்கவோ வேண்டாம்.
127 . மண் நீரை உறிஞ்சுவதை தடுக்காதபடி, காலி இடங்களிலும், நீர்வழிகளிலும் கட்டுமானத்தையும் தளமிடுவதையும் குறைந்தபட்சமாக வைத்துக் கொள்ளுங்கள்.
128 . சுத்தம் மற்றும் மறுசுழற்சி முக்கிய சமூக வேலைகளாகும்.
129 . இயற்கை ஒரு பெரிய மறுசுழற்சி சக்தி. அதன் வேலையை முடிந்தவரை நாம் ஏதுவாக்க வேண்டும்.
130 . கழிவுகளை (வீடு, விடுதி, உணவகம், கடை, பட்டறை, தொழிற்சாலை, போன்ற) அவை தோன்றும் இடங்களிலேயே வகை பிரிக்க வேண்டும்.

131 . உணவுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், எரு உற்பத்தி செய்வதற்கும் குடியிருப்பு பகுதியில் கால்நடைகள் வளர்க்கப் படவேண்டும்.
132 . சில சமையலறை கழிவுகளும் சாணமும் எரிவாயு தயாரிக்க பயன்படும். மட்கும் கழிவுகள் வீடுகளில் பிரிக்கப் பட்டு எருவாக்க வேண்டும்.
133 . இந்த மறுசுழற்சி நடவடிக்கைகள் முடிந்தவரை பல இடங்களில் தெரு மற்றும் குடியிருப்பு மட்டங்களில் பரவலாக செய்யப்பட வேண்டும்.
134 . கழிவுகளை குறைக்க, பேக்கேஜிங்ஐ குறைந்த பட்சமாக வைக்க வேண்டும்.
135 . ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பொருள்கள், அதிகப்படியான பேக்கேஜிங் போன்றவற்றை புறக்கணிக்கவும்.
136 . வீடுகள் மற்றும் வேலை இடங்களிலிருந்து மட்காத கழிவுகளை வகைப் படுத்தி சேகரித்து, உள்ளூர் மட்டத்தில் அல்லது பிராந்திய அளவில் மறுசுழற்சி செய்யப் பட வேண்டும்.
137 . மனித கழிவைப் பொறுத்த வரை, திறந்தவெளி மலம்கழித்தல் உணவுச் சங்கிலியை அறுபடாமல் காக்கிறது. தற்போதைய நகர்மய நிலையில், அப்பகுதிகளில் திறந்தவெளி மலம்கழித்தல் சாத்தியமற்றது. அதனால் அதை வலியுறுத்த தேவையில்லை. இந்த பகுதியில், மலத்தொட்டியில் சேகரிக்கப்பட்ட மட்கிய எருவை இயற்கைக்கு கொண்டு சென்று உரமாக பயன்படுத்தப் படவேண்டும். அதன் மூலம் உணவுச் சங்கிலியை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். கிராமப்புறங்களில், வண்டுகள் மற்றும் பிற உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஏதுவாக்க, திறந்தவெளி மலம்கழித்தலை முடிந்த வரை பின்பற்ற வேண்டும்.
138 . இயற்கையில் தூக்கி எறியப்பட்ட கண்ணாடி துண்டுகள், பாட்டில்கள் போன்ற பொருள்களை சேகரித்து வெறுங்கால் விலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் செய்ய வேண்டும்.
139 . மேலே உள்ள புது வாழ்வின் கொள்கைகள் தனிநபர்கள், குழுக்கள், சமூக அமைப்புகள் மற்றும் நாடுகளுக்கு பொருந்தும்.
140 . இந்த நல்வாழ்க்கைக்கான வரையறைகளை படிக்கும் நாளில் இருந்து கொள்கையென முடிந்தவரை கடைப்பிடிக்கலாம். படிப்படியாக அதிகப் படுத்தலாம்.
141 . எளிய வாழ்வு வாழ்தல் மட்டும் போதாது. அதிகாரத்தை பெறுவதற்கும், உண்மையிலேயே கூட்டுத்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கும் நாம் கூட்டாக வேலை செய்ய வேண்டும்.