புதிய சமூகம்- தனபால்.

1 . பின்வரும் பெரிய பிரச்சனைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம்
2 . சுற்றுச்சூழல் பிரச்சினைகள் (புவி வெப்பமடைதல், காற்று, நீர் மாசுபாடு, பிற)
3 . இயற்கை வளங்களின் பகிர்மான மோதல்கள் (நிலம், நீர், பிற)
4 . கல்வி, வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பு இல்லாமை
5 . குழந்தைகள் மற்றும் முதியோருக்கான பாதுகாப்பு இல்லாமை
6 . மத விரோதம், துன்புறுத்தல், பயங்கரவாதம், மிதமிஞ்சல் போன்றவை.
7 . மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள்
8 . மாசு மற்றும் வாழ்முறை காரணமாக சுகாதார பிரச்சினைகள் (புற்று, நீரிழிவு, உடல் பருமன், பிற)
9 . கொரோனா போன்ற உலகமயமாக்கப் பட்ட தொற்று நோய்கள்.
10 . இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய மேலதிக விளக்கங்கள் தேவையில்லை. அவை நம் ஒவ்வொருவரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கின்றன.
11 . மேல் காணும் பிரச்சனைகளுக்கு மூல காரணங்களாக பின்வருவன அமைகின்றன.
12 . * மனித மற்றும் பொருளாதார வளங்களின் சுரண்டல் மற்றும் விரயம்
13 . * தீவிர தனியார்மயம், எந்திரமயம், நகரமயம், உலகமயம், முதலியன
14 . * உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அராஜகம்.
15 . * ஊழல் & சட்டவிரோத நடவடிக்கைகள்
16 . இவைகள் கீழ்க்கண்டவைகளால் ஏற்படுகின்றன:
17 . * நீடித்துநிலைக்க முடியாத அதீத நுகர்வு கலாச்சாரம்,
18 . * தனிநபர்வாதம்
19 . தொழில்துறை உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் இந்த மூல காரணங்களை சாத்தியப் படுத்துகின்றன.
20 . இந்த மூலகாரணங்களைப் பற்றிய சிறு குறிப்புகள் பின் வருகின்றன:
21 . (மனித மற்றும் பொருள்) வளங்களின் சுரண்டல் மற்றும் விரயம்
22 . சுரண்டலின் அடிப்படையில், சுரண்டுபவர் மற்றும் சுரண்டப்படுபவர் என இரு வகுப்பினர் இருக்கிறார்கள்.
23 . சிலர் நேரடியாக மற்றவர்களை சுரண்ட வில்லை என்றாலும் சுரண்டுவோருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவிபுரிவதன் மூலம் சுரண்டலில் பங்கு பெறுகின்றனர். சுரண்டுவோர் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பொதுவாக சுரண்டுவோர் என அழைக்கப் படலாம்.
24 . மனிதர்களின் சுரண்டல் பல்வேறு வழிகளில் செய்யப்படுகிறது.
25 . படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, பறிமுதல், காலனித்துவம், ஏகாதிபத்தியம், அடக்குதல், அடிமைத்தனம், இனவெறி, சாதியம், முதலியன மூலம் ஒரு மக்கள்/குடியினர் பிற மக்களை/குடியினரை சுரண்டுகின்றனர்.
26 . சில சமுதாயங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் பூர்வ குடிகள் இருவரும் தங்களுக்குள் கலக்காமல், ஆக்கிரமிப்பாளர்கள் ஆளும் அதிகாரத்துடன் வளங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பூர்வ குடிகளை ஒடுக்குகிறார்கள். இது போன்ற சமூகங்கள் பிளவுன்ட சமூகங்கள் எனலாம்.
27 . சில சமுதாயங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் பூர்வ குடிகளை இடம் தெரியாமல் ஆக்கியுள்ளனர்.
28 . தற்போதைய அரசாங்கங்கள் சுரண்டுவோர்களால் சுரண்டுவோர்களுக்காக ஆனவை.
29 . பிரமான்ட கட்டிடங்கள், பெரிய இராணுவம், பெரிய பொலிஸ், போன்ற படோடோபமான, தேவையற்ற செலவினங்களால் அரசாங்கங்களே பெரிய சுரண்டலமைப்பாக வளர்ந்திருக்கின்றன. இந்த வசதிகள் முக்கியமாக சுரண்டும் வர்க்கத்திற்கே பயன்படுகின்றன.
30 . மற்ற சுரண்டுவோரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மற்ற அரசாங்கங்களைக் காட்டி பெரிய இராணுவம் நியாயப் படுத்தப்படுகிறது.
31 . சமுதாயத்தில் நிலவும் மோதல்களைக் காட்டி பெரும் பொலிஸ் நியாயப் படுத்தப்படுகிறது. உண்மையில் இது பெரும்பாலும் சுரண்டுவோர் மற்றும் சுரண்டப் படுபவர் களிடையேயான மோதல்களால் ஏற்படுகிறது.
32 . மத நிறுவனங்கள் தசமபாகம் போன்ற வசூல்களைச் செய்வதன் மூலம் உறுப்பினர்களை சுரண்டுகின்றன. அவைகள் நிறைய நிலங்கள் முதலியனவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
33 . ஆலை முதலாளிகள் தொழிலாளர்களை குறைந்த ஊதியம், அதிக வேலை, அபராதம், போன்றவற்றால் சுரண்டுகிறார்கள். மேலும் அவர்கள் நிலங்கள், தொழிற்சாலைகள், போன்ற உற்பத்தி சாதனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
34 . உற்பத்தியாளர்கள் கச்சாப் பொருள்களுக்கு குறைந்த விலையைக் கொடுத்து இயற்கையையும் விவசாயிகளையும் சுரண்டுகின்றனர். மேலும் தங்கள் பொருள்களுக்கு அதிக விலை மூலம் வாடிக்கையாளர்களை சுரண்டுகின்றனர்.
35 . வியாபாரிகள் விளைபொருள்களுக்கு குறைந்த விலை கொடுப்பதன் மூலம் விவசாயிகளை சுரண்டுகின்றனர். மேலும் தங்கள் பொருள்களுக்கு அதிக விலை மூலம் வாடிக்கையாளர்களை சுரண்டுகின்றனர்.
36 . வாடகையில் இருப்பவர்கள் அதிகப்படியான வாடகை, சேதங்கள், மூலம் சுரண்டப் படுகின்றனர்.
37 . கடன் வாங்கியவர்கள் அதிக வட்டி, அபராதம், ஆகியவற்றின் மூலம் சுரண்டப் படுகின்றனர்.
38 . அரசு அல்லது தனியார் முகவர்கள் லஞ்சம், கமிஷன்கள், முதலியவற்றைக் கோருகின்றனர். மாஃபியாக்கள் மிரட்டி பணம் பிடுங்குகின்றனர். இவை அப்பட்டமான சுரண்டல்கள்.
39 . பெரிய நிலஉடமையாளர்கள் தங்கள் பண்ணை வேலையாட்களையும் குத்தகை விவசாயிகளையும் சுரண்டுகின்றனர்.
40 . தொழில் அல்லது சேவை நிபுணர்கள் தங்கள் சேவைகளுக்காக அதிக கட்டணம் கோருவதும் சுரண்டலே.
41 . சுரண்டுவோர் ஒருவரை ஒருவரும் சுரண்டிக் கொள்கிறார்கள். ஆனால் எளிய மக்களை சுரண்டுவதன் மூலம் தங்களின் சுரண்டலை சரிக்கட்டிக் கொள்கிறார்கள்.
42 . சுரண்டலின் நிகர பலு தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில்முனைவோர் ஆகிய எளியவர்களின் மீது சுமத்தப் படுகிறது.
43 . உலகளாவிய நிலையில், ஏகாதிபத்திய நாடுகளின் பில்லியனர்களில் தொடங்கி மறுகாலனியாக்கப் பட்ட நாடுகளின் அமைப்புசாரா தொழிலாளர்களில் முடியும் சுரண்டல் சங்கிலியில் பல கண்ணிகள் உள்ளன.
44 . சுரண்டல் என்பது பல சமயங்களில் வீண்விரயமாக்குதல் என்றே பொருள்.
45 . சுரண்டல் மற்றும் வீண்விரயத்தினால் பின்விளைவுகள் இருக்கின்றன.
46 . சுரண்டுவோர் தனிநபர்வாதிகள். அவர்கள் மற்றவர்களை, இயற்கையை மற்றும் பொதுநன்மையைப் பற்றி கவலை இல்லாமல் நல்ல வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.
47 . மற்றவர்கள் இரு கண்களையும் இழப்பார்களானால் தங்கள் ஒரு கண்ணை இழக்கத் தயாராக இருக்கும் சில கடுமையான தனிநபர்வாதிகளும் இருக்கிறார்கள்.
48 . சுரண்டப்படுபவர்கள் அவசியம் கூட்டுத்துவவாதிகளல்ல. நிச்சயமாக சிலர் தனிநபர்வாதிகளே. இந்த தனிநபர்வாத சுரண்டப்படுபவர்கள் சுய நலனுக்காக எவ்வளவு முடியுமோ முயல்கின்றனர். அவர்களும் பெரிய ஆளாக வர விரும்புகிறார்கள்.
49 . தற்போதைய அரசாங்கங்கள் மற்றும் நீதி மன்றங்கள் பெரும்பாலும் தனிநபர்வாதிகளால் ஆனது.
50 . தற்போதைய தனிநபர்வாத சமுதாயங்களில், அரசாங்க வேலையை பெறுவது, சுரண்டுவோர் என்ற நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு உறுதியான வழியாகும்.
51 . ஊடகங்களும் தங்கள் மேம்போக்கான நிகழ்ச்சிகள் மற்றும் படைப்புகளின் மூலம் மக்களை திசைதிருப்பி அவர்களின் நேரத்தை விரயமாக்குவதும் சுரண்டல் ஆகும்.
52 . சுரண்டலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் மீடியா நிறுவனங்கள் (திரும்பத்திரும்ப நிகழும்) தேர்ந்தெடுக்கப்பட்ட சில சம்பவங்களை வைத்து பரபரப்பு ஏற்படுத்துவதில் சிக்கிக் கொண்டு இருக்கின்றன. அவை வெறும் தனிநபர்வாத இரைச்சல், ஸ்பேம் மற்றும் விளம்பரங்களை உருவாக்குகின்றன.
53 . அச்சு ஊடகம் பளப்பளப்பான படங்கள் மற்றும் பத்திபத்தியான எழுத்துக்களை வைத்து மேம்போக்கான விசயங்களைப் பற்றி கத்தை கத்தையாக அச்சிட்டுத் தள்ளுகின்றன. அதன்மூலம் கூடுதல் தாள்களையும் ரசாயணங்களையும் விரயம் செய்கின்றன.
54 . இயற்கை வளங்களின் சுரண்டல் பல்வேறு வழிகளில் செய்யப்படுகிறது.
55 . காட்டு விலங்குகள் தந்தம், கொம்பு, தோல், முதலியவற்றிற்காக சுரண்டப் படுகின்றன.
56 . வளர்ப்பு விலங்குகள் அதிக பால், முட்டை, இறைச்சி, போன்றவற்றிற்காக இயற்கைக்கு மாறான முறையில் சுரண்டப் படுகின்றன.
57 . காடுகள், புதைபடிவ எரிபொருள்கள், கனிமங்கள், நீர்நிலைகள் மற்றும் நிலத்தடிநீர் வரைமுறையின்றி சுரண்டப்படுகின்றன.
58 . ஒருவர் எவ்வளவு பொருள் சேர்க்கவும் நுகரவும் முடியும் என்ற கட்டுப் பாடு இல்லாத போது, சுரண்டல் அளவில்லாமல் பெருகுகிறது.
59 . இயந்திரங்களின் உதவியுடன் மனிதர்கள் இயற்கை வளங்களை துஷ்பிரயோகம் செய்யும் அளவு இனியும் நிலைக்காது.
60 . தீவிர தனியார்மயம்
61 . மக்களுக்கு இயற்கை வளங்களின் மீதான உரிமையை மறுப்பதன் மூலம் தனியார்மயமாக்கலும் ஒரு சுரண்டலே.
62 . அனைத்து இயற்கை வளங்களும் ஆபத்தான வேகத்தில் தனியார்மயமாக்கப்படுகின்றன. பழைய ஆட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த முழு நிலத்தையும் தங்கள் சொத்தாக நினைத்தனர். புதிய ஆட்சியாளர்கள் அவ்வளவு அப்பட்டமாக இருக்க முடியாது. அவர்கள் பெரிய பணமுதலைகளுடன் இணைந்து, பல்வேறு திட்டங்கள் மற்றும் சாக்குப்போக்குகள் மூலம் பொது வளங்களை தனியார்மயமாக்குகிறார்கள்.
63 . பொது நலன் என்ற பெயரில் ஒரு சிறிய இழப்பீட்டில் பழங்குடி மக்கள், விவசாயிகள் மற்றும் பிற பலவீனமான மக்களிடமிருந்து நிலங்களையும் சொத்துக்களையும் கையகப்படுத்துகின்றனர். பெரும்பாலும் மறைமுகமான தனியார் மயமாக்கத்திற்காகவே இப்படி செய்யப் படுகிறது.
64 . தனியார்மயமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிக் கட்டாயப் படுத்தப் பட்டவர்கள் மீண்டும் இன்னும் அதிகமான விலையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
65 . தனியார்மயமாக்கப்பட்ட சேவைகளின் எதிர்மறையான விளைவுகள் உள்ளாட்சி அமைப்புகளின் மற்றும் மக்களின் மீது திணிக்கப்படுகின்றன.
66 . தீவிர எந்திரமயம்
67 . தற்போதைய பிரதான உற்பத்தி முறை எந்திரமய முறையாகும்.
68 . சிறிய எண்ணிக்கையில் ஆன நபர்கள் நிலம் மற்றும் பிற உற்பத்தி சாதனங்களின் பெரும்பகுதியைப் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் உற்பத்தி செய்து கட்டுப்படுத்துகின்றனர்.
69 . எனவே, அநேக மக்களுக்கு உழைக்க மற்றும் வாழ்வாதாரத்தைப் பெறும் வாய்ப்பு இல்லை.
70 . எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெறுவதற்கான ஒரே வழி ஆபத்து அல்லது களங்கம் காரணமாக மற்றவர்கள் செய்ய முன்வராத வேலைகளை செய்ய வேண்டும்.
71 . இன்னொரு வழி, சிறப்பு கைவினைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்று ஆடம்பர பொருட்களின் உற்பத்தியில் ஈடுபடலாம். இதன்மூலம் மனித வளங்கள் வீணான வேலைக்கு திசை திருப்பப் படுகிறது.
72 . தீவிர தொழில்மயமாக்கல் என்பது ஒரு வட்டாரத்தில் உற்பத்தியை மையப்படுத்தி அந்த இடத்தை அதிகமாக மாசுபடுத்துகிறது. அடுத்து, உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை மற்ற எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்வதனால் மாசுபாடு கூடுகிறது.
73 . தீவிர நகரமயம்
74 . அரசாங்க நிறுவனங்கள், வெள்ளை காலர் வேலைகள், தொழில்துறை உற்பத்தி ஆகியவற்றின் மையப்படுத்தலினால், நகரங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பாரியளவிலான குடியேற்றம் நடந்து, நகரங்களின் பெருக்கத்திற்கு இட்டுச் செல்கிறது.
75 . இது போக்குவரத்து நெரிசல்கள், நீண்ட பயண நேரம், நெரிசலான பொது போக்குவரத்து, மிதிபடல்கள், விபத்துக்கள், காற்று, நீர் மற்றும் இறைச்சல் மாசுபாடு, தனிநபர் பாதுகாப்பின்மை, நீர் பற்றாக்குறை, ஒழுங்கற்ற மற்றும் பாதுகாப்பற்ற கட்டிட வளர்ச்சி, நிலம் தளமிடப்படுவது, மழையின் குறைவான உறிஞ்சல், வெள்ளப்பெருக்கு, போதாத குப்பை மற்றும் கழிவுநீர் மேலாண்மை, போதாத சுகாதார வசதிகள், மலைபோன்ற குப்பைக் கிடங்குகள், நிலத்தடிநீர் மாசு, வாடகை மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு, போன்ற பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
76 . உற்பத்தி, விநியோக அராஜகம்
77 . தனியார் தனிநபர்வாத முயற்சிகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அராஜகத்திற்கு இட்டுச்செல்கின்றன, இதனால் உற்பத்திப் பெருக்கம் மற்றும் வீண்விரயம் ஏற்படுகின்றன.
78 . சில நிலங்கள் தரிசாகவும், சில மக்கள், இயந்திரங்கள், வாகனங்கள், போன்றவை வீணாக இருக்க, மற்ற நிலங்கள், மக்கள், இயந்திரங்கள், போன்றவை அளவுக்கு அதிகமாக சுரண்டப்படுகின்றன.
79 . சுரண்டலாளர்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. அவர்களது முயற்சிகள் பயனற்ற போட்டி, திரும்பத்திரும்ப செய்தல், மறுகண்டுபிடிப்பு, கூடுதலான சுரண்டல், பிராண்டிங், விளம்பரம் போன்ற விரயங்கள், ஆகியவற்றிற்கு இட்டுச் செல்கின்றன.
80 . ஊழல் & சட்டவிரோத நடவடிக்கைகள்
81 . ஒருவர் எவ்வாறு சொத்து சேர்க்கிறார் என்பதைக் கட்டுப்படுத்த திறன்வாய்ந்த வழிகள் இல்லாத போது, அனைத்து வகையான தீய மற்றும் சமூகவிரோத வழிகளும் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு: தொழிலாளர்கள் மீதான அதீதசுரண்டல், இயற்கை வளங்களை தனியார்மயமாக்கல், கொத்தடிமைப் படுத்தல், அடிமைப் படுத்தல், கொள்ளை, லஞ்சம், வங்கிகள் மற்றும் மக்களை மோசடி செய்தல், போன்றவை.
82 . சமூக சமத்துவமின்மை என்பது இளைத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை (உடல், மொழி, பாலியல், மன ரீதியான துஷ்பிரயோகம்) சாதகமானதாக்குகிறது. பாதிக்கப் பட்டவர்கள் மிகவும் பலவீனமானவர்கள், அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. குற்றவாளிகள் சமூகத்தில் வலுவானவர்கள்.
83 . சிறார்களை ரகசியமான சுரண்டலுக்குப் பயன்படுத்துவதற்காக சிறுவர், சிறுமியர் கடத்தப்படுவது இந்த சமூக நிலையில், குறிப்பாக, தங்குமிடம் கட்டுப் படுத்தப்படாத போது, சாத்தியமாக உள்ளது,
84 . தனிநபர் தனது பேராசையை அடைவதற்கு, கூட்டாளிகளின், பங்காளிகளின் சேவைகள் அவசியம். அவர்களுக்கும் பேராசைகள் இருக்கின்றன. இந்த அடுக்கடுக்கான தேவைகளுக்கு அதிக வளங்கள் தேவைப் படுகின்றன. இவை அனைத்தும் மேலும் அதிகப் படியான ஊழல் மற்றும் குற்றங்களுக்கு வழி வகுக்கின்றன.
85 . சில பலவீனமானவர்கள் கூட, வாழ்வாதாரத்திற்காக அல்லது மேலான வாழ்க்கைக்காக, தங்களைப் போன்ற சிறிய குற்றவாளிகளுக்கு கடுமையான மற்றும் உடனடி தண்டனை வழங்கப்பட்டாலும், திருட்டு அல்லது கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
86 . நீடித்து நிலைக்கமுடியாத அதீத நுகர்வு
87 . தொழில்துறை உற்பத்தி பெரிய எண்ணிக்கையிலான பல்வேறு விலையிலான பல்வேறு பொருட்களையும் சேவைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
88 . சுரண்டுவோர் ஏராளமாக நுகர விரும்புகிறார்கள். அவர்கள் மத்தியில் மேலும் அதிக ஆடம்பரங்களுக்கும், படோடாபங்களுக்கும் பிரம்மான்டங்களுக்குமான ஒரு கடுமையான போட்டி உள்ளது.
89 . சுரண்டப்படுவோர் தங்களால் முடிந்த வரை நுகர்வதற்காக தங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ செய்கிறார்கள். மிகவும் சிலரே இந்த பித்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.
90 . மக்களிடையில் மேலும் மேலும் அதிகமாக உழைப்பை கோரவும், உற்பத்தி செய்யவும், விற்கவும், வாங்கவும், நுகரவும் அழுத்தம் நிலவுகிறது.
91 . கூடுதலாக நுகரவேண்டுமா, சுரண்டுவோர் மேலும் கூடுதலாக சுரண்டவேண்டும், சுரண்டப் படுவோர் மேலும் கூடுதலாக சுரண்டலுக்கு ஆட்படவேண்டும்.
92 . தனிநபர்வாதம்
93 . நிலப்பிரபுத்துவ மற்றும் எதேச்சாதிகார முடியாட்சியின் சகாப்தத்தில், பல மக்கள் பண்ணையடிமை அல்லது பிற பிறப்பின் அடிப்படையிலான அடிமைத் தளைகளில் இருந்தனர். பலர் அதை வெறுத்து, சபித்தனர். ஆனால், அந்த சமூக அமைப்பை மாற்ற யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
94 . தொழில்துறை புரட்சி வந்தது, சிலருக்கு நம்பிக்கையை அளித்தது. சமூக அமைப்பை வீழ்த்தினர். பழைய நிலப்பிரபுத்துவ சலுகைகள் அகற்றப்பட்டன (ஆனாலும், பழைய பிரபுக்கள் குறிப்பிடத்தக்க அளவு வளங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது). புதிய அமைப்பு என்னவென்றால் எவரும், தோற்றத்திலேனும், தங்களால் முடிந்த அளவுக்கு பணக்கார பிரபுவாக ஆக முடியும்.
95 . பலர் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிய செல்வந்தர்களாக ஆக விரும்பினர். தனிநபர்வாதம், அதாவது மற்றவர்களின் நலன்களையும் பொது நலன்களையும் கருத்தில் கொள்ளாமல், சொந்த நலன்களில் மட்டும் ஈடுபடுதல், தளைத்தோங்கியது.
96 . முடியாட்சியை அகற்றியதற்குப் பிறகு, சில நாடுகளில் சோசலிசப் புரட்சிகள் ஏற்பட்டன. ரஷ்யா மற்றும் சீனா இரண்டு பெரிய உதாரணங்கள். ஆரம்பத்தில் சில வெற்றிகளுக்குப் பிறகு, இரண்டாவது தலைமுறை அந்த அமைப்பை உயிர்ப்போடு வைத்திருக்க முடியவில்லை. உள் மற்றும் வெளி நாட்டு சதிவேலைகளுக்கு கூடுதலாக, தனிநபர்வாதம் மற்றும் நீடிக்கமுடியா நுகர்வு முறை இந்த பின்னடைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம்.
97 . தற்போதைய ‘ஜனநாயக’ அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் தனிநபர்வாதிகளால் ஆனது. அவர்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்கள் நீடித்துநிலைக்குமா அல்லது அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்குமா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவைகளால் நன்மையடையக்கூடிய எவரும் நன்மையடையலாம். பலவீனமான பிரிவினால் அவைகளால் நன்மையடைய முடியாது என்றால் அது அவர்களின் பிரச்சினை அல்ல.
98 . பொது மக்கள் இந்த ‘ஜனநாயக’ அரசு மீது (தண்ணீர் பற்றாக்குறை, வெள்ளம், கையகப்படுத்தல், மாசுபாடு, பேரிடர்கால மீட்பு மற்றும் நிவாரணம் சரியில்லாமை போன்றவற்றிற்காக) புகார் கூறுகிறார்கள். ஆனால், அது அனைவரின் நலனில் முன்னெச்சரிக்கையாகவோ சரியான நேரத்திலோ செயல்படும் அளவுக்கு போதுமான அளவு பரினாம வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
99 . மேற்கண்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பின்வரும் தீர்மானங்கள் தேவை:
100 . தனிநபர்வாதம் மற்றும் நீடிக்க முடியா நுகர்வு வாழ்க்கைமுறை உலகின் நிலைத் தன்மைக்கு பெரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட்டன. தற்போதைய போக்கு அபாயகரமானது. கூடுதல் முன்னெச்சரிக்கை புத்திசாலித் தனம். நாம் பாதுகாப்பான நிலையை அடையும் வரை இந்த போக்கை இறங்குமுகமாக திருப்ப வேண்டும்.
101 . தனித்தனிப் பிரச்சனைகளுக்காக தனித்தனிக் குழுக்களால் நடத்தப்படும் தனித்தனிப் போராட்டங்கள் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
102 . முடிந்தவரை விரைவாகவும் சுமூகமாகவும் சமூக அமைப்பை மீண்டும் மாற்றுவதிலும் அதை கூட்டுத்துவ முறையில் ஒருங்கிணைப்பதிலும் எல்லோருடைய நலனும் உள்ளது.
103 . நாம் கூட்டுத்துவவாதிகளாக மாற்றமடைய வேண்டும்.
104 . நெருக்கடிக்கு தனிநபர் வாதிகளை (அல்லது முதலாளிகளை) குற்றம் சாட்டுவது எதிர்மறையானது. நம்மிடம் ஒரு சாத்தியமான மாற்று இல்லாத நிலையில் மேலும் சமூகங்கள் நீண்ட காலமாக தனிநபர்வாதத்தில் நடக்கும் நிலையில், அவர்களில் பலர் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கலாம்.
105 . தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சமூகங்களுக்குமான எளிய வாழ்க்கைமுறையும் கூட்டுத்துவ ஒழுங்கமைப்பும் கொண்ட ஒரு புதிய முழுமையான அணுகுமுறை நமக்குத் தேவை.
106 . நாம் நமது உற்பத்தி மற்றும் நுகர்வில் பொறுப்புடன் இருக்கவும், பிறரின் பொறுப்பற்ற உற்பத்தி மற்றும் நுகர்வை புறக்கணிக்கவும், மற்றவர்களை பொறுப்புள்ளவர்களாக மாற வலியுறுத்தவும் வேண்டும்.
107 . வளங்களையும் மற்றும் உற்பத்தி, விநியோகம், வீட்டுவசதி, கல்வி, அரசாங்கம் போன்ற சமூக செயல்பாடுகளையும் சமூகமயமாக்குவதன் மூலம் தனிமனித தேவை மற்றும் கூட்டு பாதுகாப்பு ஆகிய இரண்டும் இணக்கமாகும் வகையில் பொருட்களில் மற்றும் செயல்முறைகளில் அதிகபட்ச சாத்தியமான சிக்கனத்தை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.
108 . தற்போதைய அசையா மற்றும் அசையும் கட்டமைப்புகளின் (கட்டடங்கள், சாலைகள், தண்டவாளங்கள், துறைமுகங்கள், வாகனங்கள், போன்றவை) அளவு அதன் உச்சகட்டத்தை அடைந்து விட்டன. சமூகமாக நியாயப்படுத்தப்படுகிற விதிவிலக்குகள் தவிர இவற்றின் மேலதிக அதிகரிப்பு நிறுத்தப் படவேண்டும்.
109 . மக்கள்தொகையை மேலும் அதிகரிக்காமல் கட்டுப்பாடுகள் மூலம் அதை தற்போதைய மட்டத்தில் பராமரிப்பது பாதுகாப்பானது. அதை நிலைநிறுத்துவதற்காக, குடும்பத்திற்கு 2 குழந்தைகள் என்று கட்டுப் படுத்துவது சரியானது. (ஒரே பாலினத்தில் 2 குழந்தைகள் போன்ற சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், ஒரு குடும்பம் 3 வது குழந்தை பெற்றுக் கொள்வதை தேர்வு செய்யலாம்.)