பிரான்சை கலக்கும் மஞ்சள் சட்டை போராட்டம்- அஸ்வினி கலைச்செல்வன்.

மஞ்சள் சட்டைகாரர் போராட்டத்தின் துவக்கம் :
மஞ்சள் சட்டை போராட்டமானது அக்டோபர் ,2018 அன்று திடீர் பெட்ரோல் டீசலின் விலை உயர்வை எதிர்த்து அதிபர் மாக்ரோனுக்கு எதிராக ஒரு குரல் போராட்டமாக பிரெஞ்சு வாகன ஒட்டிகளால் மஞ்சள் சட்டை அணிந்து எதிர்ப்பை காட்டும் வகையில் தொடங்கியது.
மஞ்சள் சட்டை அணிவதென்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த French Law வின் அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு அவசர கால உதவிகளின் தேவையை அல்லது விபத்து அபாயத்தை வெளிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
அதிக அளவிலான போராட்டகாரர்களை ஒன்றிணைத்து விலைவாசி உயர்வையும், வாகன எரிபொருள் விலை உயர்வையும் எதிர்த்து மில்லியன் மக்கள் கையெழுத்திட்ட புகார் மனுகளை பொருளாதார கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கமாக நவம்பர் 17,2018ல் நடத்தினர்.
இப்போராட்டமானது பலகட்ட போராட்டங்களின் தொகுப்பாக மாறியது. முதலில் ஆர்பாட்டமாக தொடங்கிய மஞ்சள் சட்டை போராட்டமானது வன்முறை, அரசு விதிகளுக்கு ஒத்துழையாமை, பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் போராட்டம், போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்யும் போராட்டம்,வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அனைத்து மக்களின் பொருளாதார சிக்கலால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் போராட்டம், போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களுக்கு சேதம் விளைவிக்கும் போராட்டம்,வேலை நிறுத்தம் என பல்வேறு கட்டமாக நடைப்பெற்று வருகிறது.

மஞ்சள் சட்டை போராட்டத்தின் நோக்கம் :

புதிதாக பெறுப்பேற்ற அதிபர் இம்மானுவேல் மாக்ரோனுக்கு உடனடியாக பதவி விலக வேண்டும்

குறைந்தப்பட்ச கூலி உயர்வை வழங்கக்கோரி பிரெஞ்சு எழுச்சி.

அரசின் தொழிலாளர்களுக்கு எதிராக கையாளும் சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல்

பலவீனமான வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்

அரசாங்கத்தின் வெளிப்படை தன்மையை அதன் பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மையை பெற வேண்டும்

கிராம புறங்களில் அரசு சேவைகளை மேம்படுத்தி வழங்க வேண்டும்

அரசியலமைப்புச் சட்டத்தின் படி உரிய நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற 7 அம்ச கோரிக்கைகளை கொண்ட போராட்டமாக நடைப்பெற்று வருகிறது.

போராட்டக்கள உயிரிழப்பு:

3 மஞ்சள் சட்டை போராட்டக்காரர்கள் உட்பட 11 பேர் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டுள்ளனர். பெல்ஜியம் மற்றும் பிரெஞ்சு நகரங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50 வயதுக்கும் மேற்பட்ட 2 மஞ்சள் சட்டை போராட்டகாரர்கள் மற்றும் ஒரு பெண் பொருளாதார கொள்கையின் திடீர் அறிவிப்பால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
4000க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு அரசின் முன்னெடுப்புகள்:

இப்போராட்டங்களின் விளைவாக பிரெஞ்சு அரசு ஆறுமாத காலத்திற்கு பெட்ரோலியம் மற்றும் டீசல் விலை உயர்வை மாற்றாது வரிகள் மீதான விலக்கை அமல்படுத்தியது.ஆறு மாதத்திற்கு பிறகு உயர்த்தப்பட்ட வரி மற்றும் விலையுயர்வும் நிலவும் எனவும் அறிவித்தது. மேலும் மின்சக்தி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மார்ச் 2019க்கு முன்னர் வரை விலையுயர்வு அறிவிக்கப்பட மாட்டாது எனவும் கூறியது.
மஞ்சள் சட்டை போராட்டகாரர்களின் போராட்டமானது ஓய்வு பெறாத நிலையில் அதிக நேரம் வரை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகாரப்பூர்வ வரிவிலக்கு அளிப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்தது. பிறகும் போராட்டங்கள் முற்று பெறாதா நிலையில் எரிபொருள் மீதான வரியை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்ததுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here