பறிக்கப்படும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள்-அகசு மணிகண்டன்.

ஆங்கிலேயா்கள் வணிகம் என்ற பெயாில் சிறிது சிறிதாக இந்திய நாட்டிற்குள் நுழைந்து, நம் வாழ்வையும், உாிமையையும் பறித்து எப்படி நம்மை அடிமைப்படுத்தினரோ அதேபோன்ற வழிமுறையைத்தான் இன்றைய வடமாநிலத்தவர்களும் கடைபிடிக்கின்றனர்.
அவர்கள் தமிழகத்திற்குள் எளிதாக உள்நுழைந்து தமிழக மக்களின் வேலைவாய்ப்புகளுக்கும் ,சிறுகுறு தொழில்வாய்ப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறாா்கள் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

ரயில்வேதுறை ,அஞ்சல்துறை ,வங்கிகள் ,வருமானவரித்துறை என பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் அதிகம் வடமாநிலத்தவரே தோ்வாகின்றனா்.

தமிழக மக்களில் பலா் வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும்படி இருக்கின்ற சூழல்களில் வடமாநிலத்தவரின் வருகையும் அவர்களின் வணிகமும் தமிழக சிறுகுறுதொழிலாளா்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளா்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசியகட்சிகள் காலூன்ற முடியாத தமிழகத்தில், பல வடமாநிலத்தவர் வருகையால் ,வடமாநிலத்தவரின் வாக்குாிமையை பயன்படுத்தி தேசிய கட்சிகளின் பலநாள் ஆசைக்கு அடித்தளம் அமைக்கும் வேலை நடைபெறுகிறதா? என்ற சந்தேக கேள்வியும் எழுகிறது.

கடந்து பத்தாண்டுகளில் வடமாநிலத்தவர் வருகையால் குற்றசம்பவங்களும் அதிகாித்துள்ளன.

கடந்த சில வருடங்களாக திருப்பூா், சேலம் போன்ற பகுதிகளில் வடமாநிலத்தவரின் வருகை அதிகாித்தது மட்டும் இல்லாமல் தமிழக ஏழைகளின் வேலைகளும் பறிக்கப்படுகின்றன.

காரணம், வடமாநிலத்தவர்களுக்கு அளிக்கப்படுகின்ற குறைந்த ஊதியம், அதிக உழைப்பு, பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் எளிதாக மறைத்துவிடுவது போன்றவற்றை தங்களுக்கு ஆதாயமாக எடுத்துக்கொண்டு பெருவணிக முதலாளிகள் அதிகம் வடமாநிலத்தவரை பணிகளுக்கு அமா்த்துகின்றனா்.

கட்டுமான துறைகளிலும் அதிகம் வடமாநில தொழிலாளா்களை நியமிப்பது சமீபகாலமாக அதிகாித்து வருகிறது.இதனால் தமிழக கட்டுமான தொழிலாளா்களை வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது.

அரசாங்க துறைகளில் வேலைவாய்ப்பு பற்றி தமிழக இளைஞா்களுக்கு ஆா்வமில்லை. ஏனெனில் அதில் இடஒதுக்கீடு இருந்தால்தான் கிடைக்கும் என்றும் இளைஞா்களிடம் தவறான எண்ணம் புகுத்தபட்டிருப்பதும் ஆா்வமின்மைக்கு காரணமே.

அப்படி பாா்த்தால் உயா்சாதி வகுப்பினா் என்று சொல்லகூடிய பிராமண சமுதாயத்தை சாா்ந்த பலா் அரசாங்க பணிகளில் உயா்நிலைகளிலும் இடைநிலைகளிலும் இருப்பதற்கு இடஒதுக்கீடு தான் காரணமா?.

இங்கு இடஓதுக்கீடு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்துவதல்ல , இந்தியா முழுவதும் பொருந்துவது. இன்றைக்கும் அரசு அலுவலகங்களில் குப்பை கூட்டுவது, கழிவரை சுத்தம் செய்வது ஒடுக்கபட்ட மக்கள் என்பதை நாமறிவோம், உயா் சாதியினரும் வடமாநிலத்தவரும் உயா் பதவியில் இருக்கும் பொழுது நாம் கழிவறையை சுத்தம் செய்வதும் சுண்ணாம்பு அடிப்பதும் தான் நமது வேலையா?
நாம் உயா் பதவிகளில் பதவி வகிக்க வேண்டாமா?.

நம் மக்கள் சாதிய ரீதியான மனநிலை கொண்டுள்ளதால் நம்மை எளிதில் திசை திருப்பி, இங்கு நம் தமிழக இளைஞா்கள் பெறவேண்டிய் பல அரசாங்க வேலைகள் பறிபோவதுமின்றி,கட்டுமானதொழில்,எலக்ட்ரிக்கல்,ஆட்டோமொபைல் என தமிழகத்தில் உள்ள பல குறுந்தொழில்களிலும், பறிக்கபடுகின்றன.
இங்கு பார்ப்பனீய,பனியா கும்பலே அதிகம் செழிப்படைகிறாா்கள்.

எனவே மக்களே நிலைமை முற்றுவதற்கு முன் நாம் அனைவரும் இவ்வித சதிகளை முறியடித்து நமக்கான பாதைகளை கண்டறிந்து இவ்வித அடக்குமுறைகளில் இருந்தும் சதிகளிலிருந்து வெளி வரவேண்டுமெனவும் எதிா்கால சந்ததியினருக்கு பாதிப்படையாமல் இருக்கவும் நாம் சாதிய உணர்வுகளில் இருந்து வெளிவரவேண்டும்.

தமிழக இளைஞா்களும் சாதியரீதியான எண்ணங்களில் இருந்து வெளிவரவேண்டும்.
அரசாங்க பணிகள் பற்றி பல இளைஞா்கள் புாிதலின்றி இருக்கின்றனர் இதுவும் வடமாநில இளைஞா்கள் அரசாங்க பணிகளில் அமா்வதற்கு அடித்தளமாக அமைகிறது.

வடமாநிலத்தவர் நம் வேலை வாய்ப்புகளை அபகரிப்பது இதுவரை மண்ணுக்குள் விழுந்த விதைபோல யார் கண்ணுக்கும் அகப்படாமல் இருந்தது.
தற்போது அவ்விதைகள் முளைத்து மரமாக தென்பட ஆரம்பித்துள்ளன .


ஆளும் அரசாங்கமும், பெரு முதலாளிகளும் தமிழக மக்களின் வேலைவாய்ப்பை பறித்தெடுக்கின்றனா்.
இதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் நமது தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்.மேலும் தற்போதே சில இளைஞா்கள் வேலையின்மை காரணத்தால் திருடவும் செய்கின்றனா் சிலபோ் அதற்கும் மேலாக தற்கொலை செய்து கொள்கின்றனா்.
பல இளைஞா்கள் வேலையின்மையால் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனா்.அரசாங்கம் இதற்கு துாித நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும்.

இனியும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிா்காலத்தில் மிகப்பொிய அளவில் புரட்சிகள் வெடிக்கும்.

ஆகவே மத்திய,மாநில அரசாங்கத்திடம் எனது கோாிக்கைகள்..

1.இரயில்வே துறை தோ்வுகளில் 349,102,109 மதிப்பெண்கள் எடுத்த இளைஞா்களிடம் கடுமையான விசாரணைகள் நடத்த படவேண்டும்.இதனால் முறைகேடுகள் செய்த பலா் வெளிச்சத்திற்கு வருவாா்கள். இதுபோன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நிகழாமல் தடுக்கலாம்.

2.வடமாநிலத்தவா்கள் குறைந்த பட்சம் பதினைந்து வருடமாவது தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டும்.அவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற தீா்மானத்தை கொண்டு வரவேண்டும்.

3.பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவருக்கு மட்டுமே வாக்குாிமை அளிக்கபட வேண்டும்.ஒரிரு ஆண்டுகளில் வடமாநிலத்தவருக்கு வாக்குாிமை அளிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்.

4.மத்திய அரசாங்கமும் சாி மாநில அரசாங்கமும் சாி, வடமாநிலத்தை சார்ந்தவர்கள் 10 வகுப்பு வரை தமிழக அரசின் பாடத்திட்டத்தில் கல்வி கற்றிருந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளுக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்க வேண்டும்

5.எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பிலிருந்தே அரசாங்க வேலைகாண தெளிவுகளை தமிழக மாணவா்களிடம் புகுத்த வேண்டும்.

6.வடமாநிலத்தவர் வருகையை எதிர்த்து எதிா்காலத்தில் தமிழ்நாட்டில போராட்டங்கள் ஏற்பட்டால் வேறு மாநிலத்தில் உள்ள தமிழா்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
ஆரம்பம் முதலே நாம் தடுத்து நிறுத்திவிட்டால் நாட்டிற்குள் பிரிவினை ஏற்படாமல் தடுக்கலாம்.

7.இட ஒதுக்கீடு பற்றிய தவறான புரிதல்களும்,சாதி ரீதியான தவறான அணுகுமுறைகளும் சமுகத்தில் நிலவுகின்றன.இதனை பாதுகாப்பதை விடுத்து இளைஞர்கள் ,மாணவர்கள் மத்தியில் இந்த தவறான கருத்துக்களை களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகசு.மணிகண்டன்.திருச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here