உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்?

நீதிமன்றத்தில் நீதிபதியும் – வழக்குரைஞரும்,வழக்குரைஞரும்- வழக்குரைஞரும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ள ,அனைத்து ஆவணங்களும் ஆங்கிலத்தில் இருக்க பெரும்பான்மை தமிழக மக்கள் இவர்களின் வார்த்தை விளையாட்டுகளால் தங்கள் வாழ்க்கையையும்,வளத்தையும் இழந்த,இழந்துக்கொண்டிருக்கிற நிகழ்வுகள்தான் நீதிமன்றங்கள் முழுவதும் நிறைந்து கிடக்கிறது.மக்கள் பேசுகிற மொழியைத்தான் நீதிபதிகளும், வழுக்குரைஞர்களும் பேச வேண்டும்,எழுத வேண்டும்.அப்படி செய்யாமல் இதுநாள் வரை மக்களை ஏமாற்றி வருவது தொடரக்கூடாது என்பதுதான் நமது போராட்டமாக இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 348 ( 2 ) ஒரு மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத்தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தியையோ , அந்த மாநில அலுவல் மொழியையோ உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்கலாம் என்று கூறுகிறது . ஆனால் அரசியலமைப்பு சட்டம் செயலுக்கு வரும் முன்பே 1949ல் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றி ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இராஜஸ்தான் உயர்நீதிமன்றமொழியாக இந்தியை மட்டும் ஆக்கினார்கள் . பின் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 1950 பிப்ரவரி 14ம் தேதி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 18 நாட்களிலேயே ராஜஸ்தான் மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்தியை ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற மொழியாக்கினார் . பிறகுஉத்திரபிரதேசம் , மத்தியபிரதேசம் , பீகார் ஆகியமாநிலங்களில் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது .

1997ல் மேற்குவங்க அரசு அவர்களின் வங்க மொழியை கல்கத்தா உயர்நீதிமன்ற மொழியாக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது . ஆனால் மத்திய அரசு மேற்குவங்க அரசின் கோப்பை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது .

07 . 05 . 1997 அன்று கூடிய உச்சநீதிமன்றத்தின் அ தின் அனைத்து நீதிபதிகள் குழு மேற்குவங்க அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்தது . தமிழ்நாட்டிலும் 2002ம் ஆண்டில் முதன்முதலில் மறைந்த முதல்வர் செல்வி . ஜெ . ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான . அரசாங்கம் தமிழை மொழியாக்க நடவடிகளை மேற்கொண்டது . ஆனால் அபோதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு . சுபாசன் ரெட்டி தமிழை நதியன்ற மொழியாக்க ஒப்புதல் தர மறுத்தார் . அதன்பின் 2006ம் ஆண்டில் கலைஞர் திரு . கருணாநிதி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு மண்டும் முயற்சி எடுத்து உயர்நீதிமன்றத்திடம் கருத்து கேட்டது . அப்போதைய அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டமர்வு தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க ஒப்புதல் அளித்தது . உடனடியாக 6 . 12 . 2006 அன்று தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . அத்தீர்மானம் சரத்து 348 ( 2 ) ன்படியும் இந்திய ஆட்சிமொழிச் சட்டம் பிரிவு 7ன்படியும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக 7 . 12 . 2006 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது . ஆனால் மத்திய அரசு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு மாறாக எந்த சட்டத்திலும் சொல்லப்படாத நடைமுறையாக 1997ல் வங்க மொழிக்கு செய்தது போலவே உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு WE அனுப்பியது . 2007ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி உயர்திரு . கே . ஜி . பாலகிருஸ்ணன் ” மாநில மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்க முடியாது , இந்தி கனிந்து வளரும் வரை ஆங்கிலம் இருக்கும் பின் உச்சநீதிமன்றம் , உயர்நீதிமன்றங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் இந்தி அலுவல் மொழியாக்கப்படும் ” என்று கூறி தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க ஒப்புதல் தரமறுத்தார் . உடனடியாக 2007 பிப்ரவரியில் அப்போதைய தமிழக முதல்வர் உச்சநீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்து தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்று விரிவான கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பினார் . அதன் பின் தொடர்ந்து மாறி மாறி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த இரண்டு அரசாங்கங்களும் தமிழை நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்று வழியுறுத்தி வருகின்றன . மேலும் பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்கள் 2012ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த போது குஜராத்தி மொழியை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரினார் .

இந்நிலையில் கடந்த 11 . 10 . 2012ல் கூடிய உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு தமிழ் , குஜராத்தி ஆகிய மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்க முடியாது என தீர்மானித்தது . தமிழக அரசு மீண்டும் 10 . 06 . 2014 அன்று உச்சநீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரியது . மேலும் 2015ல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கன்னட மொழியை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரினார் .

ஆனால் 16 . 12 . 2015ல் கூடிய உச்சநீதிமன்றத்தின் அனைத்துநீதிபதிகள் அமர்வு தமிழ் , கன்னடம் ஆகிய மொழிகளை உயர்நீதிமன்ற மொழியாக்கமுடியாது என தீர்மானித்தது ஆனால் இராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றப் பதிவாளர் 2015 ஏப்ரல் மாதம் அனுப்பியுள்ள ஒரு பதில் கடிதத்தில் உச்சநீதிமன்ற மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான நடவடிக்கை பரீசலனையில் உள்ளது என தெரிவித்துள்ளார் . மேலும் கடந்த 17 . 11 . 2015 அன்று கொலிசியம் முறையை மேம்படுத்துரதாக ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மூத்த வழக்கறிஞர் தனது தாய்மொழியான இந்தியில்தான் தன்னால் தெளிவாக வாதிட முடியும் என்று கூறி இந்திமொழியில் வாதிட்டார் . உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அவர் வாதத்தை கேட்டனர் . சில நிமிடங்களில் நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் தனக்கு புரியவில்லை என்று கூறி ஆங்கிலத்தில் வாதிடும்படி கேட்டதால் , அதன்பின் ஆங்கிலத்தில் வாதிட்டார் . இதே போல் உச்சநீதிமன்றத்தில் தினமும் பல வழக்கறிஞர்கள் அவர்கள் தாய்மொழியான இந்தியிலும் வாதிடுகின்றனர் உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்கிறது . வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட நீதிபதிகள் , வழக்கறிஞர்கள் இருக்கும் உச்சநீதிமன்றத்திலேயே ஒரு வழக்கறிஞரை அவரது தாய்மொழியில் வாதிட அனுமதித்து . தாய்மொழி உரிமையை அங்கிகரிக்கும் உச்சநீதிமன்றத்தின் செயல் வரவேற்கத்தக்கது . ஆனால் அதே உச்சநீதிமன்றம் வங்காளம் , தமிழ் , குஜராத்தி கன்னடம் போன்ற மொழிகளின் உரிமையை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் கூட அங்கீகரிக்க மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 348 ( 2 ) க்கும் இந்திய ஆட்சிமொழிச் சட்டம் பிரிவு 7க்கும் எதிரானதாகும் . இந்நிலையில் கடந்த 2015 , 2016ம் ஆண்டுகளில் டாக்டர் திரு . சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் தலைமையிலான சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்றநிலைக் குழு உயர்நீதிமன்ற மொழியாக அந்தந்த மாநில மொழிகளை ஆக்குவதற்கு நீதித்துறையிடம் ஆலோசனை கேட்கத் தேவையில்லை ( The Committee is further of the view that the consultation process with judiciary is not required as the Constitutional provisions are amply clear on the use of Scheduled Languages in the High Court and accordingly , the use of Scheduled Languages should be decided as per mandate of Article 348 ) . என 27 . 04 . 2015 , 19 . 04 . 2016 ஆகிய தேதிகளில் ( 75 , 84வது அறிக்கை ) தீர்மானம் நிறைவேற்றி உள்ளது . அதன்பின்னரும் உச்சநீதிமன்றத்தைக் காரணம் கூறி மத்திய அரசு தமிழ் மொழியின் உரிமையை மறுத்து வருகிறது

ஆகவே தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு வேண்டுதல் கடிதத்தை உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வேண்டுகிறோம்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here