தோழர் முகிலன் – உயிரோடு இருக்கிறாரா?- ஜெயசேகர்

தோழர் முகிலன் அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார். அவை கூடங்குளம் போராட்டமாக இருக்கட்டும் அல்லது மணல் கொள்ளையாக இருக்கட்டும் அவரது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அவரது பங்கு மிக பெரியது.

ஆனால் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்ததோடு மட்டுமல்லாமல் காவல்துறையின் தடிஅடிக்கும் அவர் தப்பவில்லை . இவர் மீது பல வழக்குகளை ஆளும்வர்க்கத்தின் கைக்கூலிகள் போட்டதோடு மட்டுமல்லாமல் குண்டர் சட்டத்தில் அவரை சிறைக்கும் அனுப்பியது . ஆனாலும் மக்களுக்கு ஆதரவாக இவரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

தூத்குதுக்குடி துப்பாக்கி சூட்டில் நடந்த காவல்துறையின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டு காட்டியதாலும், கடந்த பிப்ரவரி மாதம் பதினைந்தாம் தேதி சென்னை பத்திரிகையாளர் சந்திப்பே இவரின் தலைமையில்தான் நடந்தது. இதில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஐ.டி தொழிலாளர் சங்க தலைவர் பரிமளா மற்றும் நேர்மை அமைப்பின் சார்பாகவும் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் கொடூர முகத்தை அதாவது திட்டமிட்ட படுகொலை என்பதை வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் சொன்னது என்னவென்றால் இதை மக்களுக்கு தெரிவிப்பதால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதையும் அவர் அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே சுட்டி காட்டினார். அதன் பிறகு அன்று இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரை செல்ல புறப்பட்ட அவர் கடைசியாக இரவு 10.30 மணியளவில் தோழர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு இரவு 2 மணியளவில் முகநூலில் பதிவிட்டும் இருந்து இருக்கிறார் . அதற்கு பிறகு மூன்று வாரங்கள் ஆகியும் அவரை இன்னும் காணவில்லை .

ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக அரசின் தூண்டுதலோடு காவல் துறை திட்டமிட்டு வன்முறை செய்தது என்பதை அம்பலப்படுத்தியதால்தான் இவரை பழிவாங்கும் நோக்கத்தோடு மத்திய அரசும், தமிழக அரசும் , காவல் துறையும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் இணைந்து காணாமல் ஆக்கி இருக்க வேண்டும் என்பதே அனைவரின் சந்தேகமாக இருக்கிறது.இன்று முகிலனுக்கு நாளை….?

ஜெயசேகர் , கருங்கல் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here