தேர்தல் கூட்டணி – ஜனநாயகத்தின் அவலம்-ஜெயசேகர்


அதிமுக,திமுக கூட்டணி என்று சொல்வதை விட மக்கள் விரோத கூட்டணி  என்றுதான் சொல்லவேண்டிய சூழ்நிலையில் தள்ளியிருக்கிறார்கள் இந்த திராவிட கட்சிகளும் அவற்றில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளும். இதில் மிகவும் கேவலமான கூட்டணி என்பது அதிமுக கூட்டணி தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பொதுவாக அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து கொண்டு தேர்தலை சந்திப்பது என்பது நடைமுறைதான். ஆனால் இப்போதைய அதிமுக கூட்டணி பற்றி சொல்லியே ஆக வேண்டும்.இப்போதைய அதிமுக என்பது பா.ஜ.க வின் பினாமி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பா.ஜ.க வை பற்றி சொல்ல தேவையில்லை. அதை சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது  ஜெயலலிதா அவர்களின்  பேச்சு என்பது மோடியா அல்லது லேடியா என்பதுதான். ஆனால் தமிழகத்தில் லேடிதான் என்பதை அந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நிரூபித்தனர். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பா.ஜ.க வின் கீழ் இயங்கும் ஒரு கட்சியாகத்தான் அதிமுக இருக்கிறது.

இவர்களை பணிய வைத்து பல மோசமான மற்றும் தமிழகத்தை அழிவின் பாதையில் இட்டுச் செல்லும்  பல திட்டங்களை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் பல உயிர்களை காவு வாங்கியது இந்த மத்திய பா.ஜ.க அரசு. இப்படி இருக்க மாம்பழமானது பேசின பேச்சி போதும்டா சாமி என்ற அளவிற்கு ஆயிற்று.மாற்றம் முன்னேற்றம் என்று கூவிய அன்புமணி, இரு திராவிட கட்சிகளிடம் கூட்டணி நூறு சதவீதம் அல்ல நூற்றியொரு சதவீதம் கூட்டணி கிடையாது என்றும் அதிமுக வை மிகவும் கேவலமாக மட்டுமல்ல கீழ்த்தரமான சொற்களை பேசிவிட்டு அதுவும் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட அதிமுக வோடு கூட்டணி சேர்ந்து இருப்பதை நினைக்கும்போது எலும்புதுண்டுக்காக காத்து கிடக்கும் நாயை விட கேவலமானவர்கள் இந்த அரசியல்வாதிகள் என்பதை தமிழக மக்களுக்கு புரிய வைத்து இருக்கிறார்கள்.

தே.மு.தி.க வை ஆரம்பத்தில் இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாகத்தான் மக்கள் ஆதரித்தார்கள். ஆனால் இன்று அவர்களின் நிலைமையை எங்கே போய் சொல்ல? எங்கு அதிக சீட்டுகள் தருவார்களோ அங்குதான் போவோம் என்று விடாப்பிடியாக இருக்கிறது. ஆனால் திமுக கதவை மூடிய பின்னர் ஒரே வழி அதிமுகவோடு சேர்வதுதான். ஆனால் அதிமுக கொடுத்த வெறும்  நான்கு சீட்டுகளை மட்டுமே இவர்களால்  பெற முடிந்தது. இப்படி இருக்கும் போது இவர்களின் கொள்கைகள் என்னவானது?

புதிய தமிழகம் மற்றும் புதிய நீதி கட்சிகள் பா.ஜ.க போடும் ஒரு எலும்பு துண்டுக்காக காத்து கிடப்பது எல்லோருக்கும் தெரியும்.

அதிமுக வின்  கூட்டணியில் இருக்கும் எல்லோருமே அதிமுக வை மிகவும் கேவலமாக விமர்சித்தவர்கள்தான் என்பதை நினைக்கும்போது பணம் மட்டுமே இவர்களது குறிக்கோளாக இருக்கிறது என்பதை  தொண்டர்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் தமிழகத்தில் உண்மையான அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு

இல்லையென்றால் இரண்டு திராவிட கட்சிகளும் இவர்களோடு கூட்டு சேரும் கட்சிகளும் தங்கள் சொத்துக்கள் மற்றும் செல்வாக்கை மட்டுமே வளர்த்து கொள்ளும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

இப்படிபட்ட தவறான அணுகுமுறை இருக்கும் வரை அரசியல்வாதிகளுக்கோ கொண்டாட்டம், மக்களுக்கோ திண்டாட்டம். ஜனநாயகம் என்பதை பணநாயகம் என்று மாற்றி வைத்தால் சரியாக இருக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெயசேகர் -கருங்கல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here