திருநெல்வேலி பேட்டை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு உழைப்பாளர் சங்க மையம் நடவடிக்கை.பேட்டை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு உழைப்பாளர் சங்க மையத்தினர் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு உழைப்பாளர் சங்க மைய பொது செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் தொழிலாளர்கள் அளித்த மனு:

நெல்லை அருகே பேட்டையில் 1958ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை தொடங்கப்பட்டது. இந்த ஆலை மூலம் நெல்லை மாவட்டத்தில் பலரும் வேலைவாய்ப்புகளை பெற்றனர். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஆலை வளாகத்தில் கூடுதலாக ‘பி’ பிரிவு மில் தொடங்கப்பட்டது.இந்த ஆலையின் லாபத்தை கொண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புதிதாக கூட்டுறவு நூற்பாலை தொடங்கப்பட்டது.


நெல்லை சுற்றுவட்டார மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி தந்த இந்த நூற்பாலை 2004ம் ஆண்டு மூடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஆலையை திறப்பதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான வேலைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆலையை திறக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு,மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என கூறிவிட்டது.

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையை திறக்க நடவடிக்கை எடுத்தது அரசு.ராமநாதபுரம் கூட்டுறவு ஆலையை நவீனப்படுத்தி மீண்டும் திறக்க தமிழக அரசு 2012-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்ததால் ஆலை செயல்பட்டு வருகிறது அதே போல் பேட்டை நூற்பாலையை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மாறாக இங்குள்ள எந்திரங்களை வேறு ஆலைகளுக்கு எடுத்து செல்வது,பல்வேறு சாதனங்களை முறைகேடாக விற்பது உள்ளிட்ட நடவடிக்கைளால் ஆலை திறக்கப்படும் என்ற கனவு சிதைந்து வருகிறது.எனவே பேட்டை நூற்பாலையை மீண்டும் திறந்திட நடவடிக்கை எடுப்பதோடு,அதன் நிலபுலன்களை யாரும் கபளீகரம் செய்யாமல் இருக்கவும் தடுத்திட வேண்டும் பேட்டை கூட்டுறவு நூற்பாலைக்குள் எந்திரங்கள், தளவாடங்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திட வேண்டும், என்றும் ”மூடப்பட்டுள்ள பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையை திறக்க வேண்டும். இந்த ஆலையை நவீனப்படுத்தி மீண்டும் திறக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தென்மாவட்ட சாதி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆலையை திறந்து வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலை பிரச்சனை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தமிழ்நாடு உழைப்பாளர் சங்க மைய பொதுச்செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here