திரிபுராவில் வன்முறை கும்பலால் லெனின் சிலை இடிப்பு!

மாபெரும் புரட்சியாளராக லெனின் அவர்களின் சிலை திரிபுராவில் இந்துத்துவ வன்முறை கும்பலால் இடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகாலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) திரிபுராவை ஆண்டு வந்தது.சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோல்வியை தழுவியது.தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

ஆட்சியை பிடித்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடுகள் மீதும் அலுவலகங்கள் மீதும் கடும் தாக்குதலை தொடுத்துள்ளனர்.அதன் ஒரு பகுதியாக புரட்சியாளர் லெனினுடைய சிலையையும் பிடித்துள்ளனர்.

கொடுங்கோல் மன்னர்களாலும், அராஜக ஆட்சியாளர்களாலும் பல்வேறு நாடுகளில் மக்கள் பெரும் துன்பத்தில் வாழ்ந்து வந்தனர்.அதே போலவே ரஷ்யாவிலும் ஜார் மன்னனின் ஆட்சியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் பல்வேறு தேசங்களும் அடிமைபட்டுக் கிடந்தனர்.

உலகெங்கும் சுரண்டலினாலும், அடிமைத்தனத்தாலும் வாடும் மக்களை விடுவிக்கும் தத்துவமாகத் தான் கம்யூனிச சிந்தனை தோன்றியது.காரல் மார்க்சும் , பிரெட்ரிக் எங்கெல்சும் மாபெரும் பங்களிப்பை கம்யூனிச தத்துவத்திற்கு வழங்கியுள்ளனர்.

கம்யூனிச தத்துவத்தை ரஷ்ய சூழலுக்குப் பொருத்தி பல்லாண்டுகால கொடுங்கோல் ஆட்சியை லெனின் தலைமையிலான ”ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி” 1917ம் ஆண்டு அதிகாரத்தை கைப்பற்றியது.

அடிமைப்பட்டு கிடைக்கும் ஒவ்வொரு தேசத்திற்கும் தம்மைத் தாமே விடிவித்துக் கொள்ளும் வழியை காட்டியது.

இதன் மூலம் புரட்சியாளர் லெனின் உலக மக்கள் அனைவருக்கும் தலைவராக விளங்குகிறார்.சிலைகளை சிதைக்கலாமே தவிர சிந்தனைகளை அல்ல!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here