தமிழ்நாடு மின்சார வாரிய பணிநியமனத்தில் 300 -ல் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள். தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பறிபோகிறது.

தமிழ்நாட்டின் மின்சாரத்துறையில் தமிழே தெரியாத உத்தரபிரதேச ,பீகார், சத்தீஸ்கர் ,ஆந்திரா, ராஜஸ்தான் ,கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே தென்னக ரயில்வேயில் வடமாநிலத்தவர் ஒருவர் மொழி தெரியாத காரணத்தினால் ஒரே தடத்தில் இரண்டு தொடர்வண்டிகளை அனுமதித்து மிகப்பெரிய விபத்து ஏற்பட இருந்தது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது

‌மத்திய அரசின் அழுத்தத்தின் காரணத்தால் எடப்பாடி அரசு தமிழ்நாட்டிற்கான வேலைவாய்ப்புகளில் வெளிமாநிலத்தவர்,ஏன் ? வெளிநாட்டவர்களை கூட அனுமதிக்கும் வகையில் சட்டங்களை மாற்றியமைத்து தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறது இந்த அ.தி.மு.க. அரசு.

எல்லா மாநில அரசுகளும் வேலைவாய்ப்புகள் மண்ணின் மைந்தர்களுக்கே என்பதில் உறுதியாக இருக்க தமிழ்நாடு அரசு மட்டும் எதிர்திசையில் செல்வது வரும் காலங்களில் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இன்றைய இளைஞர்கள் அரசு திட்டங்களை பற்றியும் ,அரசியலை பற்றியும் கடும் அலட்சியம் காட்டுவதாலும் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருப்பதனாலும் ஒரு அரசு தன் மக்களை காக்கும் ,முன்னேற்றும் பாதையிலிருந்து விலகுவதோடு மட்டுமல்லாமல் துரோகமும் செய்கிறது.
இவற்றை உணர்ந்து தங்களின் உரிமைகளை மீட்பதற்கான போராட்டங்களை துவங்காவிட்டால் பக்கோடா,சமோசா போட்டு பிழைத்து கொள்ள தயாராகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here