தமிழ்த்தேசியமா?-இனத்தூய்மைவாதமா?- அகசு.மணிகண்டன்.

1
537

இன்றய தமிழக அரசியலில் தமிழ்தேசியம் தற்பொழுது அபரிமிதமாக துளிர்க்க தொடங்கிவிட்டது.

உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு, இதற்கு நேரடி சான்றாக, காந்திருந்த சாதிய,மதவெறியர்களுக்கு உறுமீன் கிடைத்தது போல தமிழ்தேசியம் கையில் கிடைத்துவிட்டது.

ஆம் !! இனதூய்மைவாதம் என்ற பெயரில், சாதிய அடையாளங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் ஒரு தரப்பினர்.

இது தமிழக மக்களின் சமூகசமநிலையை சீர்கெடுக்கும் நோக்கமாகும்.

வரலாற்றின் அடிப்படையில் சாதி என்பது ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து உருவானது.

பிறகு வர்ணாசிரம கோட்பாடுகளான பிராமணன்,சத்ரியன்,வைசியன்,சூத்திரன் என உருவாகி பல்லாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் பெரியார்,தமிழரசன் போன்றவர்கள் இந்த வர்ணாசிரம சாதிய கோட்பாடுகளை கடுமையாக விமர்சித்தும் ,சாதிஒழிப்பு வேண்டும் எனவும் போராடி வந்தனர்.

இதனை கருத்தில் கொண்ட நம் முன்னோர்கள் சாதிய அடையாளங்களை துறந்தனர்.

இதனால் தமிழகத்தில் சாதி மத பேதங்களின் பிரச்சனைகள் பெருமளவு குறைக்கபட்டது.

சுதந்திரம் வாங்கி 73 மூன்று வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் சாதி அடையளாங்கள் தலைதூக்குகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
(இந்த 73 வருடங்களில் சாதிய அடையாளங்களை ஒரு சிலர் வெளிப்படுத்தி வந்துள்ளனர், ஆனால் அவர்களை சாதி வெறியர்கள் என முத்திரை குத்தபட்டனர், ஆனால் இன்றோ அவர்கள் தூயதமிழர்கள் )

இன்றய காலகட்டத்தில் சாதியை வைத்து இந்து மதம் சொல்லும் வர்ணாசிரம கோட்பாடுகளை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை.

இருப்பினும் சில தமிழ்தேசியவாதிகள் தனது சாதிய அடையாளங்களை பாதுகாக்க துடிக்கின்றனர்.

இந்த ஐம்பது வருட திராவிட கட்சிகளின் ஆட்சி மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு மாற்று அரசியலை தேடுகின்றனர்.

இதனால் திராவிடத்தை கடந்து தமிழ்தேசியத்தை கையில் எடுத்துள்ளனர்.

அப்படி முன்னெடுக்கப்படும் தமிழ்தேசியம் சமீபகாலமாக வளர்ந்து வருகின்றது.

சில தமிழ்தேசிய ஆதரவாளர்கள் தங்களை தமிழினத்தை சேராத வேறொருவர் ஆளுகின்றனர் என்பதை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

மக்களிடையே!! தமிழ்நாட்டில் மற்றவர்கள் வாழலாம், ஆனால் தமிழன் தான் தங்களை ஆளவேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர்.

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு.தமிழ்தேசிய கருத்தியலை ஏற்காதவன் தமிழரல்ல என்பதும் பரப்பிவிடப்படுகிறது.

தமிழ்தேசிய கருத்தியலை எதிர்க்கும் அல்லது விமர்சனம் செய்பவரை தமிழரா என்பதை அறிய முற்படுகின்றனர். அப்படி முற்படும் போது அவர்களின் முன் இலை மறை காய் போல நின்ற சாதியானது வேற்றுமையை உருவாக்குகிறது.

இந்து மதத்தின் சாதிய கட்டமைப்பால் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் எனவும் சமூக ஏற்ற தாழ்வுநிலை உருவாகிறது எனவும் சமூக சீர்திருத்தவாதிகள் இந்து மதத்தை கடும் விமர்சனம் செய்தனர்.

இதனால் தமிழகத்தில் மதபிரச்சனைகள் குறைந்து காணப்பட்டது.தற்பொழுது இனவாதம் பேசபடுகிறது,
அது இனத்தூய்மைவாதமாக மாறிவருகிறது.
இது தமிழகத்தின் சமூகசமநிலைக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கமாகும்.

இனத்தூய்மைவாதம் பேசுவதால் சாதிய அடையாளங்கள் வெளிபடுகிறது,அப்படி சாதிய அடையாளங்கள் வெளிப்படும் போது அது நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறது.

சாதிய அடையாளங்கள் வெளிப்படுமேயானால் ,சமுகப்பிளவுகள் அதிகமாகும்.

முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறியதை போல் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.இதனால் ஒடுக்கப்பட்டவர்கள் மதம் மாறும் சூழ்நிலைக்கு தள்ளபடுவர்.

இது இந்துமத காவலர்களுக்கு காலில் சலங்கை கட்டிவிட்டது போல் வாய்ப்பை கொடுக்கும்.சமூகசீர்கேட்டை மதத்தின் பெயரால் ஏற்படுத்துவர்.தமிழகம் வடமாநிலங்கள் போல உருவெடுக்கும்.

ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ இயக்கமானது மிருக பலத்தோடு உள்ளது என்பதில் சற்றும் சந்தேகமில்லை.அதன்
மிருக பலத்தை எதிர்கொள்ள நாம் கூடுமானவரை ஓன்று பட்டு நிற்பது எப்படி என்பதை சிந்திப்பதற்கு மாறாக பிளவுகொள்கையினை முன்வைப்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதை போலாகும்.

வரலாற்றின் அடிப்படையில் இனத்தூய்மை என்பது அறவே கிடையாது.

அமெரிக்கர்களை எடுத்துக்கொண்டால் வெள்ளையின மக்களும் கருப்பின மக்களும் கலந்துதான் காணபடுகின்றனர்.

அதுபோலதான் ஒரு இனத்தில் கலப்பு என்பது வரலாற்று பூர்வமாக நடைபெறும் நிகழ்வாகும்.

இனதூய்மைவாதம் அல்லது இனவாதம்
பேசுபவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்துதான் பேசுகிறார்களா?.
அல்லது இனதூய்மை பேச வைக்கப்படுகிறார்களா?.என்பதில் சந்தேகம் உள்ளது.

மற்ற மொழி இனத்தின் மீது வெறுப்புற்று
இந்த இனதூய்மைவாதம் என்பதை பேசுகிறார்களா அல்லது தமிழ்மீது கொண்ட பற்றினால் செய்கிறார்களா என்பது தெரியவில்லை.

ஆனால்,இனதூய்மை பேசுவது
சிவப்பு கம்பளம் விரித்து ரிப்பன் வெட்டி இந்துத்துவ ஒடுக்குமுறையை மீண்டும் தமிழகத்துக்குள் அழைத்து வரும் வழியாகும்.

இனவாதத்தால் பிறமொழி இனத்தவருக்கும் அபாயம் ஏற்படும் சூழலுக்கு இட்டு செல்கிறது.இதனால் பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கும் பாதிப்பு உண்டாகும்.

ஆகவே இனதூய்மைவாதம் என்பது காலபோக்கில் மதவாதமாக மாற வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் சமநிலையை உடைத்தெறியும் விதமாக செயல்படும் இதுபோன்ற இனதூய்மை பேசும் வெறியர்கள் இருக்கும்வரை தமிழக மக்களுக்கு பிரச்சனை தான்.

தமிழ்மீது பற்று கொண்டால் நல்லது.
தமிழ்மீது வெறி கொள்வது என்பது ஆபத்தானது.

எனவே சாதியை ஒழித்து சமத்துவத்தை விரும்பும் மக்களாக வாழ்வோம்.

அகசு.மணிகண்டன்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here