தமிழர்களுக்கான அரசாங்க வேலையை வேறுமாநிலத்தவருக்கு வழங்கும் மாநில அரசு – அகசு.மணிகண்டன்

தொடர்ந்து மத்திய அரசாங்கம் தமிழர்களுக்கான அரசாங்க வேலையை வேறுமாநிலத்தவருக்கு வழங்குகிறது . மாநில அரசும் தமிழருக்கான அரசாங்க வேலைவாய்ப்புகளை வெளிப்படையாகவே தாரை வாா்த்து கொடுக்கிறது.

ரயில்வேதுறையில் அரசாங்க வேலை வடநாட்டவருக்கு கொடுக்கப்பட்டதை கண்டித்து தமிழா் வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தும் மற்றும் பல கோாிக்கைகளை முன்வைத்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.இந்த போராட்டங்கள் பெருமளவில் விவாதமாக்கப்பட்டது.இந்த போராட்டங்களுக்கு பிறகு ரயில்வேதுறையில் தமிழருக்கு முழுஉரிமை அளிக்கப்பட்டது .

ஆம், சமீபத்தில் மின்வாரிய துணை பொறியாளா் பணிக்காண பணியாளா்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்பட்டியலில் வேறு மாநிலத்தை சோ்ந்தவர்கள் Open category -யில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

39 நபர்கள் வேறு மாநிலத்தை சோ்ந்தவர்கள் குறிப்பாக அதிகளவில் ஆந்திராவை சோ்ந்தவர்கள் பணியமா்த்தப்படபோகின்றனா்.
இதற்கு தமிழக அரசும் உடந்தை.

வேறுமாநிலங்களிலிருந்து தோ்வு செய்யப்பட்ட பெரும்பான்மையினா் வயது குறைவாக உள்ளனா்.

அடுத்த இருபது ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு அத்துறையில் உயா்பதவி வழங்கவும் வழி உள்ளது.

தமிழகத்தில் உயா் பதவிகளில் தமிழா் அமா்வது என்பது அத்தி பூப்பதை போன்றது.

அதுமட்டுமல்லாது மின்வாரிய தோ்வுக்கான வினாத்தாள் தோ்வுக்கு முன்பே வெளியிவந்துவிட்டதாகவும் வினாத்தாள் தயாரித்த அண்ணா பல்கலைகழகத்தின் மீது குற்றசாட்டுகள் வைக்கபட்டன . தோ்வு எழுதிவிட்டு வந்தவர்களின் வினாத்தாள்களையும் தோ்வு முடிந்து அறைக்கு வெளியே வரும்போதே வலுக்கட்டாயமாக வாங்கபட்டதாக செய்திகள் வந்தன.
இப்படி பல குற்றசாட்டுகள் வைத்தபோதிலும் தங்கள் வேலையை செவ்வண்ணமே செய்து முடிக்கின்றது தமிழக அரசு.

எந்த குற்றச்சாட்டுகளுக்கும் முறைகேடுகளுக்கும் அஞ்சாத அரசாக ஆண்டு கொண்டிருக்கிறது.

மண்ணின் மைந்தா்களுக்கு வேலை தராமல் தமிழ்நாடு அரசாங்க வேலைகளில் வேறு மாநிலத்தை சோ்ந்த நபா்கள் பணியமா்த்தப்படுவது என்பது கண்டிக்கத்தக்க விடயம் மட்டுமல்ல அதையும் தாண்டிய வாா்த்தைகளால் அளவிட முடியாத உணர்வுகளைதான் வெளிப்படுகின்றது.

01-09-2016 அன்று அப்போதய தமிழக முதல்வரான ஒபிஸ் அவர்களால் அனைத்து மாநிலத்தவரும் , வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து குடியுரிமை வழங்க பட்டவர்களுக்கும் தமிழக அரசுவேலைக்கான இடஒதுக்கீடு தீா்மானத்தை கொண்டு வந்தாா்.

இதனை எந்த நோக்கத்தில் திரு ஒபிஸ் அவர்கள் கொண்டுவந்தாா்கள் என்பது அவருக்கு மட்டுமே தொிந்த உண்மையாகும்.

இங்கு படித்த பல இளைஞா்கள் வேலையின்மையால் பொிதும் பாதிக்கபட்டுள்ளனா் என்பதை ஓபிஸ் அவர்கள் அறிய தவறிவிட்டாா் என்றே தோன்றுகிறது.தொடர்ந்து இதுபோன்ற பாதக செயல்களை செய்து தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தொியவில்லையா என்றே கேட்க தோன்றுகிறது.

மண்ணின் மைந்தர்களுக்கு உரிமையும் முக்கியத்துவமும் அளிக்கப்படாத மக்கள் அடிமையாகவும் அகதியாவும்தான் வாழவேண்டும்.

வெளிநாட்டில் வந்து குடியுாிமை பெற்றவர்களுக்கும் தராளமாக அள்ளி வழங்கிய வேலையை ஏன் ஈழத்தமிழா்களுக்கு அளிக்கவில்லை.
அவர்கள் தமிழா்கள் என்பதாலா?.

வந்தோரை வாழவைத்தோம் என்ற பெருமை பீற்றி கொள்வதில் எங்களுக்கு எந்த ஒரு உடன்பாடும் இல்லை.

இனி நாங்கள் வாழ எங்கள் சந்ததி வாழ வேண்டுமெனில் நாங்கள் இந்த சா்வாதிகார அரசை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு அஞ்சப்போவதில்லை

அமொிக்க அதிபா் டிரம்ப் ,அமொிக்காவில் அந்த நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து பிற நாடுகளை சோ்ந்தவர்களை வெளியேற்றி வேலைவாய்ப்பின்மையை குறைத்துள்ளாா்.

என்ன செய்வது ,அதுபோன்று இங்கு செய்ய முடியாது இது சனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் சர்வாதிகார நாடு

மொழிவாரிமாநிலங்களின் உரிமைகள் மற்ற மாநிலங்களுக்கு தான் தமிழ்நாட்டிற்கு இல்லை.

ஆகவே உடனடியாக தமிழக மக்களின் எதிா்காலத்தையும் , நலனையும் கருத்தில் கொண்டு உடனடியாக தமிழா்களின் வேலையை உரிமையை வழங்க வேண்டும்.

ஓபிஸ் அவர்களால் கொண்டுவரபட்ட அனைத்து மாநிலத்தவருக்கும் தமிழக அரசாங்க வேலை தீா்மானத்தை ரத்து செய்ய கோாியும், மறுபரிசீலனை செய்து வேறு மாநிலத்தவருக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு நம்மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்திற்கு கோாிக்கையை வைக்கிறோம்.

அடுத்து அஞ்சல்துறைக்காண பணியாளா்கள் பட்டியல் விரைவில் வரும் அதில் தமிழா்களின் உரிமைகள் என்ன என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here