தனியார்மயமாகும் இந்திய ரயில்வே துறை- அனிகன்

தொடர்வண்டி சேவை , 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்திய இரயில் துறை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.இந்திய இரயில் துறையானது உலகின் மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்று. இந்தியாவின் மொத்த இருப்பு பாதையின் நீளம் 63,140 கிலோமீட்டர் ஆகும். இதைப்பயன்படுத்தி ஆண்டுக்கு 500 கோடி மக்கள் இந்திய இரயில் துறையின் பயணசேவையை பயனடைந்து வருகின்றனர்.அதேபோல் 35 கோடி டன் சரக்குகள் ஒரு ஆண்டுக்கு இடம்பெயர்ந்து வருகிறது.இந்திய இரயில் துறையில் 16 இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.14,444 தொடர்வண்டிகள் தினமும் இயக்கத்தில் உள்ளன. இந்திய இரயில்வே துறையின் ஆண்டு வருமானம் 1,06,647 கோடி (US) (2011–12).நிகர வருமானம் 9,610 கோடி (U.3) (2011–12) ஆகும்.

முழுக்க முழுக்க இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய இரயில்வே துறை 17 இரயில்வே மண்டலமாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிட தக்கது.இந்திய இரயில் துறையால் தொலைதூர இரயில்கள், புறநகர் இரயில்கள் ஆகிய இரண்டுமே இயக்கப்படுகின்றன.பியூஸ் கோயல் என்பவர் தற்போதைய இரயில்வே அமைச்சராக இருந்து வருகிறார். இந்திய இரயில்வேயின் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது.

உலகிலேயே அதிக அளவிலளான பணியாளர்களை கொண்டு இயங்கும் பொது துறை நிறுவனமாக இந்தியன் இரயில்வே துறை உள்ளது.

‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மண்டல ரயில்வே தேர்வு வாரியங்களும் ரயில்வே பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்திவந்தன. இந்தி தெரியாத, ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சியை பெற்றிராத தமிழ் வழி கல்வி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டிலிருந்து இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை நடத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவும் அனுமதி கிடைத்தது.

இதன்படி, தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென் மண்டல ரயில்வே தேர்வு வாரியத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வுகளை நடத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்திருக்கும் மோடி அரசு ஊழல் அதிகாரிகளின் சுயவிவரங்களை ரெயில்வே அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறதென பியூஷ் கோயல் தெரிவித்திருந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி வரைவானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பிய குறிப்புகள் பின்வருமாறு :

1.500 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்படும் என்று சொன்னது என்ன ஆனது?
2.இவற்றைவிடுத்து, இப்போது அடுத்த 10 ஆண்டுகளில், ரயில்வேயில் 50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்கிறீர்களே?, அதற்கு பணம் எங்கிருந்து வரும்?
3.ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறதா?
போன்ற கேள்விகளை மக்களவையின் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து மக்களவையில் பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “ரயில்வேயை தனியார்மயமாக்குவது என்ற கேள்வியே கிடையாது. ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது. இருப்பினும், ரயில்வேயில் வசதிகளை அதிகரிக்க வேண்டுமெனில், நமக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுகிறது. புதிய திட்டங்களின் போது, நாம் தனியார் முதலீடுகளுக்கு அழைப்பு விடுக்கப் போகிறோம். பொது – தனியார் கூட்டு மூலம் ரயில்வேயின் தரத்தை மேம்படுத்துவது என்ற முடிவை எடுத்திருக்கிறோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 1950 – 2014 காலக்கட்டங்களில் 77,609 கி.மீ. என்ற தண்டவாளங்களின் அளவு 89,919 கி.மீ. என்ற அளவிலேயே அதிகரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 வருடங்களில் மட்டும் 1,23,236 கி.மீ என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரயில் பெட்டி கூட ரே பரேலி நவீன கோச் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது கிடையாது. 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் அந்த தொழிற்சாலையில் உற்பத்தியே தொடங்கியது. தற்போது, 50,000 பெட்டிகள் வரை தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு அந்த பெட்டிகளை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளோம்.

ரயில்வே துறையில் கார்ப்பரேட்களை உள்ளே கொண்டு வந்ததே முதலில் காங்கிரஸ் தான். இப்போது, எங்களை குறை கூறுவது போல முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பது மூலம், வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெற முடியும், வெற்றியாளர்களுக்கும், தோல்வி பெறுபவர்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம் தான். தோல்வியாளர்கள் கடினமான விஷயங்களை மட்டுமே பார்ப்பார்கள்; ஆனால் வெற்றியாளர்கள் தங்கள் இலக்கில் மட்டுமே குறியாக இருப்பார்கள்” என்றார்.(source :The Indian Express Tamil)

“இனி முழு ரயில்களே வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படும்” – மோடி அரசின் புதிய அறிவிப்பாக பியூஸ் கோயல் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட முதல் இரயில் பெட்டி தொழிற்சாலை சென்னை பெரம்பூர் என்பது குறிப்பிடத் தக்கது.அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

ICF எனப்படும் (Intergeral Coach Factory )ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை 1952 ல் பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2.10.1955 ல் முதல் ரயில் பெட்டிகளின் உற்பத்தியை தொடங்கியது.

ரயில் பெட்டிகள் உற்பத்தியில் உலகப்புகழ் பெற்றது பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை. 2009 -10 ல் ஆண்டுக்கு 1,437 பெட்டிகள் என இருந்த அதன் உற்பத்தித் திறன் தற்போது தான் (2009 -10) 3,200 பெட்டிகளாக அதிகரித்துள்ளது.

பெரம்பூரில் மட்டுமல்ல ரே பரேலி, கபூர்தலா போன்ற இடங்களிலும் ரயில் பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. இனி இப்படி EMU, MEMU முதலான எல்லாமும் “ரயில் செட்’ களாகவே வாங்கப்படும். இலட்சக் கணக்கான ரயில் பெட்டித் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை இழப்பது மட்டுமின்றி இதனூடாக ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள ரயில் கட்டணம் இனி கடுமையாக அதிகரிக்கவும் செய்யும்.

Train 18 rake- யின்விலை உலகச் சந்தையில் 245 கோடி ரூ. இந்திய தொழிற்சாலைகளில் அதன் உற்பத்திச் செலவு வெறும் 97 கோடி .
பெரம்பூரில் தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய இரயில்வேக்கே சென்றாலும் வெளிநாட்டு தொடர்வண்டி நிறுவனங்களுக்கும் இவை ஏற்றுமதி ஆகின்றன.தாய்லாந்து, பர்மா, தைவான்,சாம்பியா,பிலிப்பைன்ஸ், தான்சானியா,உகாண்டா, வியட்நாம், நைஜீரியா,மொசாம்பிக் மற்றும் பங்களாதேசம்ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. மே மாதம் 2018ல் சர்வதேச இரயில் பெட்டிகள் தொழிற்நுட்ப கண்காட்சியில் கலந்து கொண்ட கவர்னர் திரு. பன்வாரி லால் புரோகித் அவர்கள் இந்தியாவிலேயே ஐ. சி. எப் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். வருங்காலங்களில் நவீன இரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனமாக திகழும் என்று பெருமையாக பேசியது குறிப்பிட்ட தக்கது.இந்நிலையில் 13000 தொழிலாளர்கள் பணிப்புரியும் இத்தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியிழப்பதோடு வளர்ந்துவரும் அரசு நிறுவனத்தின் வருவாய்,பகுதியை இந்திய அரசு இழக்கும் அபாயம் உள்ளது.
அரசின் பெருபான்மையான துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு அரசின் வருவாய் இழப்பீட்டு சதவீகிதம் உயர்ந்த நிலையில் பல தரப்பட்ட துறையை இழக்கும் சூழலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலாளர்களை பற்றிய சிந்தனை இல்லாத நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அரசின் அலட்சிய போக்குக்கு தொழிலாளர்களுடன் தொழிலாளர் நலத்துறையும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

“மக்களுக்காகவே நாங்கள் வாழ்கிறோம், சேவை செய்கிறோம்”, எனக் கூறிவரும் இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களை மார்க்ஸுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவே நிஜ புரிதலை அவர்களுக்குள் கொண்டுவரும். மார்க்ஸ் வாழ்நாளில் அவரது கடைசி மணித்துளி வரை அவருடன் இருந்தது வறுமை ஒன்றுதான். தனது குழந்தைகளுக்கு ஒருவேளை உணவளிக்க பணம் இல்லாத நேரங்களில்கூட உலகத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கிடைக்கவேண்டிய உணவு பற்றி சிந்தித்தவர் கார்ல் மார்க்ஸ்.அப்படிருக்க இன்றைய தலைவர்கள் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தை அபகரித்து கார்ப்பரேட் கைகளில் திணிப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

“சமுதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்” என்றார் கார்ல் மார்க்ஸ்.பொதுவுடமையின் தந்தை வழியில் நாமும் பயணிப்போம்.வெற்றி பெறுவோம்.

அனிகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here