சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலேயே முதன்மை பல்கலைக்கழகம்.மிகவும் அதிகமாக நிதி பெறும் பல்கலைக்கழகமும் இதுதான்.ஆனால் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை தொடரந்து உயர்த்தி வருகிறார்கள். மாணவர் விடுதி ஊழல்,கட்டடங்களை கட்டுவதிலே ஊழல் ,பேராசிரியர் நியமனங்களிலே ஊழல் என்று பல்கலைக்கழகம் சீரழிக்கப்படுகிறது அதற்கு காரணம் பேராசிரியர் பேரவை (professor’s forum)என்ற பேராசிரியர்கள் அமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது.அவர்கள் ஆசிரியர்கள் வசதிகளுக்காக நிறைய தொகையை செலவிடுவதாகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் உயர்அமைப்பான சிண்டிகேட்டை கைப்பற்றி செலவீனங்களை மாணவர்கள் முதுகில் சுமத்துவதாக போராட்டத்தை ஒருங்கிணைக்கும் அரசியல்அறிவியல் துறை மாணவர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

மாணவர்களின் கோரிக்கைகள்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம்!!
We condemn the examination fee Hike!!•

தேர்வு கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறு.•

Revoke the examination fee hike immediately.•

இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணம் 60 ரூபாயில் இருந்து குறைந்தபட்சம் 85 ரூபாய் முதல் அதிகபட்சம் 165 ரூபாய் என 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.•

30% hike in Under Graduation exam fee from 60 rupees to the range of 85 rupees to 165 rupees.•

முதுகலை படிப்புகளுக்கான தேர்வுக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து குறைந்தபட்சம் 150 ரூபாய் முதல் அதிகபட்சம் 350 ரூபாய் என 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.•

50% hike in Post Graduation exam fee from 100 rupees to the range of 150 rupees to 300 rupees.•

பல்கலைக்கழக நிர்வாக இயலாமைக்கு மாணவர்கள் நாங்கள் பலியாவதா.•

Why should students be the scapegoats for university’s incompetency.•

தேர்வு நடத்த பணம் இல்லை என்றால் பல்கலைக்கழகத்திற்கு வரும் நிதி எல்லாம் எங்கே பதுக்கப்படுகிறது.•

When you claim to have no funds for even conducting examinations, then where have you stocked all the funds that the University receives?•

பல்கலைக்கழக நிதி ஆதாரங்களை அழித்துவிட்டு (நிரந்தர வைப்பு நிதி), பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வை அமல்படுத்த தேர்வுக் கட்டண உயர்வை அமல்படுத்துவதா.•

After exhausting fund reserves (corpus fund), How justified is it to increase the students’ examination fees to implement sixth pay commission!

மாணவர்களே ஒன்றுபடுவோம். மாணவர்களுக்கு எதிராக திட்டங்களை வகுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பை காட்டுவோம். நமது உரிமைகளை வென்றெடுப்போம்.S

tudents, Let’s unite! Let’s show our dissent and opposition to the University’s management that has been implementing unreasonable, anti-student exploitative policies.

University of Madras, Chepauk campus.

Students , University of Madras

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here