சீரழிக்கப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டம்- அனிகன்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11ம் தேதி 2005-யில் மக்களவையிலும், 12 மே ,2005 ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஜூன் 15, 2015யில் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.இச்சட்டமானது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.

அரசின் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான மனுக்களை ஆன்லைன் மூலம் அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களிலும் பதிவு செய்யும் சேவையை மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி டில்லியில் துவக்கி வைத்தார். அரசின் வெளிப்படை தன்மையை தெரிவிப்பதற்காக இந்த ஆன்லைன் மூலம் மனு தாக்கல் செய்யும் சேவை துவங்கப்பட்டது.

தகவல்களை பெறுவது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.

 1. மக்களுக்கு தேவையான தகவல்களை தேவையான போது அளிப்பதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனரக ஆணையாளர் 24 கண்காணிப்பாளர்களை பொது தகவல் அலுவலர்களாக (PIO) நியமித்துள்ளார்.
 2. கண்காணிப்பாளர்களை A தொடங்கி W வரை ,உட்பிரிவுகளுடன் 24 அலுவலர்களாக பிரித்துள்ளது.
 3. நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சம்பந்தப்பட்​ட திட்ட அம்சங்கள் தொடர்பாக ஆர்டிஐ சட்டம் மூலம் தகவல் வேண்டுபவர் தனது பிரதிநிதித்துவத்தை சம்பந்தப்பட்ட பொது தகவல் அதிகாரிகளுக்கு சேப்பாக்கம் சி.எம்.ஏ அலுவலகம், எழிலகம் இணைப்பு, சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 4. தகவல் உரிமை கோரி விண்ணப்பங்களை இணையவழியாகவும் அனுப்பலாம். இணையதள முகவரி RTI Online Portal.
 5. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு கட்டண விகிதங்களை உரிய ரசீதைப் பெற்றுக்கொண்டு பணமாகவோ இந்திய அஞ்சல் ஆணை (IPO), கேட்பு வரைவோலை (DD), ‘Section Officer, PMO’ என்ற பெயரில் பெறப்படும் வங்கிக் காசோலையாகவோ (Banker’s Cheque) தகவல் அறியும் உரிமைப் பிரிவு பெற்றுக் கொள்கிறது. இணையவழியாக விண்ணப்பிப்போர் அதற்கான கட்டணத்தையும் இணைய வழியாகச் செலுத்த வேண்டும்.
 6. அத்துடன், பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்ட படிவங்களின் நிலை குறித்து அறிவதற்கான வசதியும் உண்டு. மேலும், விண்ணப்பங்கள் குறித்துத் தேவைப்படும் தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
  7.முதற்கட்டத்தில் தகவலை பெற முடியாதபட்சத்தில், www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

கட்டண விவரங்கள்:

விண்ணப்பப் படிவத்தின் கட்டணம்: ரூ.10  மற்றும் இதரக் கட்டணங்கள்: –
1.‘ஏ 3’ அல்லது அதற்குச் சிறிய தாளில் விண்ணப்பித்தால், ஒவ்வொரு பக்கத்துக்கும் தலா ரூ. 2.

 1. பெரிய அளவில் எடுக்கப்படும் நகலுக்கான கட்டணம். தகவல்களைக் குறுந்தகட்டிலோ குறு வட்டிலோ பதிவு செய்து அளித்தால்,
  அதற்கு உண்டான கட்டணம்.ஆவணங்களை ஆராய்வதற்கு முதல் ஒரு மணிநேரத்துக்குக் கட்டணம் இல்லை. அதன் பின் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும்.
  3.அளிக்கப்படும் தகவல்களுக்கான கட்டணம் ரூ. 50 என்ற அளவுக்குக் கூடுதலாக இருந்தால், அதை அனுப்பவதற்கான அஞ்சல் கட்டணம்.
  4.வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் விண்ணப்பிப்பதற்குக் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால், அவர்கள் உரிய அரசு அதிகாரியிடமிருந்து வறுமைக் கோட்டுக் கீழே இருப்பதற்கான சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

RTI க்கு கட்டுப்படும் துறைகள் :

தகவல் பெற விரும்புபவர் 011-24622461 என்ற தொலைப்பேசி அழைப்பு மூலம் சம்பந்தப்ப‌ட்ட துறை மூலம் தகவல் பெறலாம். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி அலுவலகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், யூ.பி.எஸ்.சி., உள்ளிட்ட 37 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பான தகவல்களை இந்த ஆன்லைன் தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை மூலம் பெறமுடியும் . ஆன்லைன் மூலம் மனுக்கள் பெறப்படும் இந்த தொழில்நுட்ப சேவை மக்களுக்கு பயன் தரும் மிகப் பெரிய முன்னேற்றகரமான சாதனை என காமன்வெல்த் மனித உரிமைகள் சேவை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நாயக் தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்

அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல்

அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல்

எந்த ஒரு குடிமகனுக்கும் பதிலளிக்கும் கடமை அரசாங்கத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை உணரச் செய்தல்

அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த தகவலைப்பெற விரும்பும் குடிமக்களுக்கு அதைக் கொடுக்க வழிவகை செய்வதோடு லஞ்ச-ஊழலைத் தடுத்தல்.

பயன்கள் :

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் விதி 19(1) பகுதியின் கீழ் தகவல் என்பது மக்களின் அடிப்படை உரிமையின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளிப்படையான மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கும்,ஊழல் செய்பவர்களை அம்பலப்படுத்தவும் லஞ்சம் இல்லாமல் சேவையைப் பெறுவதற்கும் குடிமக்களுக்கு உதவுகிறது.

ரகசியக் காப்புச் சட்டம் 1923 அரசின் செயல்பாடுகளை மூடி மறைக்கின்றது. இதை மாற்றி மக்கள் பங்கேற்பை உறுதி செய்து மக்களின் தேவைக்காக அரசை செயல்பட வைக்கப் பயன்படுகிறது.

இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான குறிக்கோள்களான சமத்துவம், சமூகநீதி, பாகுபடுத்தாமை, இறையாண்மை, வாழ்க்கைக்கான உரிமை, சுதந்திரம் போன்ற அம்சங்களை நிறைவேற்ற தகவல் உரிமை அவசியமாகிறது.

விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும்?

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணை பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத் தகவல் அலுவலர்,விண்ணப்பங்களை நிரப்புவதற்கும், மேல்முறையீடுகளை செய்வதற்கும் மனுதாரருக்கு உதவி செய்ய வேண்டும். வாய்மொழி விண்ணப்பங்களை எழுத்து வடிவில் மாற்றவும் இரு அதிகாரிகளும் உதவி செய்ய வேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் செய்து தர வேண்டும்.

வசதிகள்:

1.அனுப்பிய மனுதாரரின் விண்ணப்பத்தில் கேட்ட கேள்விகளுக்கு தகவல் தன்னிடம் இல்லை என்றால், மனுதாரருக்கு மனுவைத் திருப்பி அனுப்பக்கூடாது. அவரே அந்த மனுவினை சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு 5 நாட்களுக்குள்ளாக அனுப்பிவிட்டு, அவ்வாறு அனுப்பிய தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.(பிரிவு 6(3)).

2.நாம் அரசிடம் எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.08 தேதியிட்ட (அரசாணை எண் 114) சொல்கிறது. அதன்படி நாம் கொடுத்த மனுவிற்கு பதில் தரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது பற்றிய காரணங்களைக் கேட்கலாம். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பரிந்துரைத்த அதிகாரியின் அறிக்கை நகல், வாக்குமூலங்களின் நகல்களைக் கேட்கலாம்.

மாநில அரசு : நீங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் மாநில அரசு அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும்போது எந்த அலுவலகத்துக்கு அனுப்புவது என்று தெரியவில்லையா? அதற்காக கவலைப்பட வேண்டாம். தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அங்குள்ள அதிகாரி அவருக்கு சம்மந்தப்பட்டதல்ல என்றால் பிரிவு 6 (3)ன் படி உரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுப்பிய தகவல் உங்களுக்கு 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு : அதேபோல் முகவரி தெரிந்தால் மத்திய அரசு அலுவலகங்களுக்கு நேரிடையாக அனுப்பலாம். சம்மந்தப்பட்ட அலுவலகம் எது என்று தெரியாவிட்டால் மட்டும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

மத்திய பொதுத் தகவல் அலுவலர் மற்றும்
மேல் முறையீட்டு அலுவலர்,
தகவல் பெறும்உரிமைச்சட்டம் – 2005
அஞ்சலகங்களின் இயக்குனர்
சென்னை / கோவை / திருச்சி / மதுரை

பதிலில் திருப்தி இல்லை என்றால்?

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதில் கொடுத்துவிட்டார்கள். கொடுத்த பதிலில் உண்மை இல்லை. திருப்தி இல்லை என்று நினைத்தால், அதே துறையின் மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். அப்படி செய்யும்போது மேல்முறையீட்டு மனுவுடன் முதலில் விண்ணப்பித்த மனுவின் நகலையும், பொது தகவல் அலுவலர் கொடுத்த பதில் கடிதத்தின் நகலையும் இணைக்க வேண்டும். இவ்வாறு மேல்முறையீடு செய்வதற்கும் கட்டணம் இல்லை.

மனுவை நிராகரித்தலுக்கான காரணம்?

மனுதாரரின் விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கட்டணம் பெற்றுக்கொண்டு அந்த தகவலை அளிக்க வேண்டும். மனுவை நிராகரித்தாலும் பிரிவுகள் 8.9ன்படி அதற்கான காரணங்களை மனுதாரருக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும். அத்தகைய நிராகரிப்பிற்கு எதிராக மனுதாரர் எவ்வளவு கால அளவிற்குள், யாரிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற விபரங்களையும் தெரிவித்தல் வேண்டும்.

என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-இல் பிரிவு 13 மற்றும் 16 இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அசல் சட்டத்தில் பிரிவு 13 மத்திய தகவல் ஆணையர் மறும் தகவல் ஆணையர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கிறது (அல்லது 65 வயது வரை இதில் எது முதலில் வருகிறதோ). இந்த நியமனத்தில் இது போன்ற கால நிர்ணயத்தை மத்திய அரசால் பரிந்துரைக்கப்படலாம் என்று இந்த திருத்தம் தெரிவிக்கிறது. மேலும், தலைமை தகவல் ஆணையர், சம்பளம், பிற படிகள் மற்றும் சேவை காலம் தலைமை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும் என்றும் ஒரு தகவல் ஆணையருடையவை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும் என்றும் பிரிவு 13 கூறுகிறது. தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் சம்பளம், இதர படிகள், மற்றும் சேவை காலம் போன்றவைகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறுகிறது.

அசல் சட்டத்தில் பிரிவு 16 மாநில அளவிலான தலைமை தகவல் ஆணையர்கள் மற்றும் தகவல் ஆணையர்களுடன் தொடர்புடையது. இது மாநில அளவிலான தலைமை தகவல் ஆணையர்களின் சேவை காலத்தை 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கிறது (அல்லது 65 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ). இந்த நியமணங்களின் காலம் போன்றவை மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் என்று இந்த திருத்தம் தெரிவிக்கிறது. மேலும் அசல் சட்டம் மாநில தலைமை தகவல் ஆணையரின் சம்பளம், சேவை காலம் போன்றவை தேர்தல் ஆணையருடையதைப் போல இருக்கும். என்றும் மாநில தகவல் ஆணையரின் சம்பளம் மற்றும் சேவை காலம் போன்றவை மாநில தலைமை செயலாளருடையதைப் போல இருக்கும் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்த திருத்தம் இவை எல்லாம் மத்திய அரசால் பரிந்துரைக்கலாம் என்று தெரிவிக்கிறது.

திருத்தங்களுக்கான காரணங்கள்

இந்த பொருளின் கூற்றுப்படி, “இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களின் ஆணை வேறுபட்டது. எனவே, அவர்களின் நிலை மற்றும் சேவை விதிகளை அதற்கேற்ப பகுத்தறிந்து செய்ய வேண்டும்” என்று கூறுகிறது. திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, பிரதமர் அலுவலக மாநிலங்கள் விவகாரத்துறை அமைச்சர் ஜீதேந்திர சிங் கூறுகையில், “அநேகமாக அன்றைய அரசாங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ஐ அவசரமாக நிறைவேற்றுவதற்காக பல விஷயங்களை கவனிக்கவில்லை. மத்திய தகவல் ஆணையருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது தீர்ப்புகளை உயர் நீதிமன்றங்களில் எதிர்த்து முறையிடலாம் என்பது எப்படி இருக்கும்? தவிர தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்திற்கு விதிகளை உருவாக்கும் அதிகாரங்களை வழங்கவில்லை. நாங்கள் திருத்தத்தின் மூலம் அவற்றை சரி செய்கிறோம்” என்று கூறினார்

RTI சட்ட திருத்த மசோதா:

மத்திய தகவல் ஆணையரின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தின் போது, மசோதாவை தேர்வுக்குழு பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் என கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இந்த மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்பாமல் விவாதத்துக்கு எடுக்க முடியாது என்று தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியது. 

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு நடுவே, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், “RTI சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான எந்தவித உள்நோக்கமும் அரசுக்கு கிடையாது என்றும், இந்த மசோதாவை தேர்வுக் குழுக்கு அனுப்புவதற்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனும் RTI சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். 

தொடர்ந்து எதிர்ப்புகளைப் பதிவு செய்த எதிர்க்கட்சிகள், குலாம் நபி ஆசாத் தலைமையில் மாநிலங்களவை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதையடுத்து, மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்துக்கு எதிராக 117 உறுப்பினர்களும், ஆதரவாக 75 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தகவல் ஆணையரின் ஊதியம், பதவிக்காலம், நியமனம் ஆகியவை குறித்து மத்திய அரசு முடிவு செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. 
இந்த மசோதா ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரும் அடி” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.

தற்போது உள்ள நடைமுறைப்படி ஒரு மத்திய மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை உடைய கட்சியின் தலைவர் என மூன்று நபர்களின் ஆலோசனையின் பேரில் ஆணையர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  ஆனால் இந்த திருத்தத்தின்படி இனி மத்திய அரசே தன்னிச்சையாக ஆணையரை தேர்வு செய்யும் நிலை ஏற்படும். மேலும் தகவல் ஆணையர் உட்பட அதிகாரிகளின் சம்பளமும் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசே எடுத்து நடத்துமாயின் மாநில அரசு எதற்கு?
தகவல் அறியும் உரிமை சட்டம் இதற்கு பதிலளிக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here