சிரியாவின் மீது துருக்கி படையெடுப்பு. – அபராஜிதன்.

அமெரிக்க ,மேற்கு ஐரோப்பிய நாடுகிளன் பின்புலத்தில் துவங்கிய “அராபிய வசந்தம்” மத்தியகிழக்கு நாடுகளை தலைகீழாக புரட்டிப்போட்டது. அதில் சிக்கிய நாடுதான் சிரியா.

2012- ல் அதிபர் பசார் அல் அசாத்திற்கு எதிராக உருவான கிளர்ச்சிப்படை சிரியாவின் வடகிழக்கு, வடமேற்கு பகுதிகளை தங்கள் கட்டுபாட்டினுள் கொண்டு வந்தனர். பின்னர் உருவான ISIS தீவிரவாதப்படை அனைத்து குழுக்களையும் தோற்கடித்து தன்னுடைய கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது.

ISIS -ஐ தோற்க்கடிக்கப்போகிறோம் என்று சொல்லி அமெரிக்கா உள்ளே நுழைந்தது. ஒரு சமயத்தில் தலைநகரான டமாஸ்கஸ்-ஐ தவிர அனைத்து பகுதிகளையும் கிளர்ச்சிப்படையிடம் இழந்துவிட்டிருந்த பசார் அல் அகமது வேறுவழியில்லாமல் ரஷ்யாவின் உதவியை நாடினார்.

ரஷ்யா தன்னுடைய போர்விமானங்களால் தாக்குதல் நடத்தவே கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கி சென்றனர். இன்னொரு பக்கம் அமெரிக்கா சிரிய குர்து இனமக்களை தன் வசத்தில் கொண்டு வந்து அவர்களை தரைப்படையாக பயன்படுத்தியது. துருக்கி நாட்டில் தனிநாடு கோரி வரும் PKK அமைப்பிற்கு சிரிய குர்து இன மக்களும் அமைப்புகளும் உதவுகிறார்கள் என்ற காரணத்தை சொல்லி அமெரிக்கா குர்து போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவதை துருக்கி கடுமையாக எதிர்த்தது.ஆனால் துருக்கியின் குரலை பொருட்படுத்தாமல் ISIS பயங்கரவாதிகளை ஓழிப்பதற்கு Syrian Democratic forces என்ற சிரிய குர்துப்படைகளுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கியது அமெரிக்கா.

ISIS ஓழிக்கப்பட்ட பின் SDF தாங்கள் கைப்பற்றிய சிரிய பகுதியை தங்கள் கட்டுபாட்டிலேயே வைத்திருந்தனர்.இது துருக்கிக்கு உறுத்தலாகவே இருந்தது .பல நூற்றாண்டுகளாக தங்களுக்கென்று தனிநாடு கோரி வரும் குர்து இன மக்களுக்கு நான்கு நாடுகளுக்கு இடையே பரவி கிடக்கும் தங்கள் பகுதிகளில் தங்கள் தன்னாட்சியை நிறுவ வேண்டும் என்பதும் கனவாகவே இருந்துவருகிறது.

தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் பரந்த பிரதேசமும் , அமெரிக்க ஆதரவும் தங்கள் கனவை நிறைவேற்றிவிடும் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்த வேளையில் துருக்கி சிரியாவின் மேல் படையெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்தது.

சிரியப்போரின் காரணமாக 35 லட்சம் சிரிய அகதிகள் துருக்கியிடம் தஞ்சம் புகுந்துள்ளனர்.

துருக்கி தங்கள் நாட்டில் PKK என்ற பெயரில் செயல்படும் குர்து இன இயக்கத்திற்கு YPG/SDF போன்ற சிரிய குர்து இயக்கங்கள் உதவுவதால் அவர்களிடம் இருந்து துருக்கி எல்லையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே முதல் இலக்கு என்றும், அதற்காக தங்களது எல்லை நெடுகிலும் 30 கி.மி. அளவில் SDF படைகள் பின்வாங்க வேண்டும் என்றும் அறிவித்தது

இரண்டாவதாக ,தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் 35 லட்சம் சிரிய அகதிகளை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்துவதும் எங்கள் நோக்கங்களில் ஒன்று எனவும் அறிவித்தது.
அதற்கேற்றார் போல் தாக்குதலை துவங்கிய துருக்கிய படைகள் யூப்ரடிஸ் நதியை கடந்து இரண்டு முக்கியமான பகுதிகளை கைப்பற்றியது.

துருக்கிய படைகள் தாக்குதலை துவங்கியவுடன் அமெரிக்க படைகள் இலங்கை நோக்கி பின்வாங்க துவங்கின.போர் துவங்கி 5 நாட்கள் கழிந்தவுடன் அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு 150 மணி நேர போர்நிறுத்தத்தை அறிவித்தது துருக்கி. ரஷ்யாவுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டியதால் துருக்கியின் நடவடிக்கை அதற்கு வெற்றியாக முடிந்துள்ளது.

SDF 30 கி.மி அளவிற்கு பின்வாங்கியுள்ளது. ரஷ்ய ராணுவ போலீசு இருவருக்குமான எல்லைப்பகுதிகளில் ரோந்து வந்து கண்காணித்துக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here