சர்வதேச ஆயுத ஏற்றுமதிக்கான கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க ஒப்புதல்

சர்வதேச ஆயுத ஏற்றுமதிக்கான கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க ஒப்புதல்
சர்வதேச ஆயுத ஏற்றுமதிக்கான கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க ஒப்புதல்
பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சர்வதேச கூட்டமைப்பான வாசினாரில் இந்தியாவை இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகள் தங்கள் நட்பு நாடுகளுக்கு ஆயுதம் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இந்த வாசினார் கூட்டமைப்பு ஆகும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அர்ஜெண்டினா உள்ளிட்ட 41 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள வாசினார் கூட்டமைப்பால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக இணைய உள்ளது.

ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அமைப்பில் இடம் பெற்று இருக்கும் நாடுகள் அனைத்தும் இதற்கான அனுமதியை தந்துள்ளன. இதையடுத்து வாசினார் கூட்டமைப்பில் இணையும் 42 வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here