கோவிட்-19 , திணறும் அமெரிக்கா,சமாளிக்குமா இந்தியா?……லிங்கராஜ்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் வூகான் நகரில் உருவான கோவிட்-19 என்று மருத்துவத்துறையினால் அழைக்கப்படும் கொரானா வைரசால் உலகமெங்கிலும் 1000000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.50000  பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நோய் முதலில் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும் ,சீனா அதனிடமுள்ள சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகளினாலும்,நவீன தொழில்நுட்பத்தாலும் மீட்சியடைந்துள்ளது.
எனினும் இந்நோய் தொற்றானது உலகமெங்கிலும் கடுமையான பாதிப்புகளையும் பொருளாதார சீர்குலைவையும் ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.சீனாவில் 82,000  பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3000 அதிகமானோர் அதன் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கிறிஸ்துவ மதத்தின் தலைமையிடமான போப்பாண்டவரின்  இத்தாலியில் இதுவரை 101,739 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இத்தாலியின் பொதுப் பாதுகாப்பு முகமையின்(PUBLIC PROTECTOR AGENCY)கருத்தின் படி 11,591.
இந்நோய் தொற்றின் பரவலை தடுப்பதற்காக  , பாதிப்புக்குள்ளானவர்கள் நோய்தொற்று தொடர்பான தனிமைப்படுத்தி கொள்ளும் விதிமுறையை மீறினால் தங்களது வீடுகளில் வசிக்கமுடியாது எனவும், 1முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்குள்ளாவார்கள் என  இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

அணு ஆயுத தயாரிப்பில் உலகிற்கு வழிகாட்டியும், வல்லரசுமான அமெரிக்காவில் இதுவரை 160,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் CNN  செய்தி நிறுவனத்தின் கணிப்பின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000.சராசரியாக ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் சுமார் 100 பேர் நோய்தொற்றுக்கு உள்ளாகின்றனர்.
தனது சொந்த குடிமக்களை உளவுபார்ப்பதற்காவும், மற்ற  நாடுகளின் மீது தனது ஏகாத்திபத்திய கொள்கையை திணிப்பதற்காகவும், வரைமுறையின்றி தனது இராணுவதளவாடங்கள் , அணுஆயுதங்கள் மற்றும் பலவகையான நவீனதொழிற்நுட்பத்திலான உளவுபார்க்கும் கருவிகளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட அமெரிக்க அரசானது,கோவிட்-19 நோய்தொற்றிலிருந்து மக்களை காப்பதற்கான உட்கட்டமைப்புகளும், அறிவியல் தொழில்நுட்பங்களும் மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் கடுமையாக நிலைகுலைந்து போயுள்ளது. வெட்ககேடான நிகழ்வாக “போதுமான கையுறைகளும், முகக்கவசங்களும் இல்லை எனவும்  அவற்றிக்கு உடனடியாக அமெரிக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டுமெனவும்”மருத்துவர்களும் செவிலியர்களும் போராடும் அளவிற்கு தனது ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கவர்ச்சிகரமான மேலாடையை இழந்து சர்வதேச மனித சமுதாயத்தின் முன்பாக அம்மணமாக அம்பலப்பட்டு நிற்கின்றது.இத்தகைய வருந்ததக்க செய்திகளுடன் சமீபத்தில் உலகசுகாதார நிறுவனமானது, ” அமெரிக்காவே கோவிட் -19 நோய்தொற்றின் மையமாக இருக்கும்” என கூறியுள்ளது.

அமெரிக்க அரசின் சர்ஜன் ஜெனரலான  ஜெரோம் ஆடம்ஸ்,” நான் அமெரிக்காவை புரிந்துக் கொள்வதற்கு கோருகிறேன் .இந்தவாரம்(சென்றவாரம்) மிகமோசமாக போய்க்கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளார் .

முதலாளித்துவ நாடான ஜெர்மனியில் கோவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையானது 27,500க்கும்  அதிகமாகும்.கடந்த 24-03-2020 அன்றய ஒருநாளில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர் என ராபர்ட் கோச் இன்ஸ்டியூட் பார் இன்பெக்சியஸ் ஸ்டடி என்னும் ஆய்வு நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி அடைந்த மேற்படி சொன்ன அமெரிக்கா,இத்தாலி,ஜெர்மன் போன்ற நாடுகளே கோவிட்-19  நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்தியாவின் நிலைமையானது,அதன் முட்டாள்தனமான அதிகாரவர்க்கத்தின் செயல்பாட்டின் காரணத்தால் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
காலம்காலமாக இந்திய அரசனாது நிலப்பிரபுத்துவ ,பாா்ப்பனிய இந்துமத மூடநம்பிக்கையை பொதுமக்களிடம் மட்டுமல்லாது,அதன் அதிகார வர்க்க அரசு நிறுவனங்களிள்ளும் பரப்பி வந்திருக்கிறது.அதன் காரணமாக இந்தியாவின் சமூக பண்பாடனது அறிவியல் சார்ந்த சிந்தனை பெறாமல், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளையும், முட்டாள்தனங்களையும் கொண்டதாக பார்ப்பனிய சக்திகளால் உருவாக்கபட்டுள்ளது. கடந்த 2014 குஜராத் படுகொலையின் காரணகர்த்தா நரேந்திரமோடி பதவியேற்றபின்பு இத்தகைய காட்டுமிரான்டி காலத்திற்குரிய முட்டாள்தனங்கள்(நம்பிக்கைகள் ஏதேனும் காரணத்தினை அடிப்படையாக கொண்டது.ஆனால் முட்டாள்தனத்திற்கு காரணங்கள் தேவையற்றது.) தூசுதட்டபட்டு மக்களிடையே வேகமாக கொண்டுசெல்லபடுகின்றன. மேலும் பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைகழகங்கள் மற்றும் இதர ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இத்தகைய பார்ப்பன புரட்டுகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன.
இத்தகைய சமூக அமைப்பையும் நிறுவனங்களையும் கொண்டுள்ள இந்தியா கோவிட்-19 தொற்றுநோயானது மிகுந்த உயிரிழைப்பையும் மீளமுடியாத பொருளாதார சீர்குலைவையும் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 2509 க்கும் மேற்பட்டோர் கோவிட்-19 தொற்றிக்கு உள்ளாக்கியுள்ளனர் மற்றும் 68  க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தியா தன்னிடமுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை ,தரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மருத்துவமனைகள் அவற்றின் எண்ணிக்கை மற்றும் தரம்  போன்றவற்றின் போதாமை காரணமாக மிகுந்த அச்சத்துடன் மோடி அரசு நாடுமுழுவதும் மார்ச் -25 தொடங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை  பிறப்பித்துள்ளது.
இதன்படி அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து, அனைத்து வணிக நடவடிக்கைகளும் தொழில்சார்ந்த உற்பத்தியும் தடைசெய்யபட்டுள்ளது. மேலும் இக்காலங்களில் அத்தியாவசிய காரணங்கள் அன்றி ,வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தபட்டுள்னர்.

எனினும்,மோடியின் இத்தகைய நடவடிக்கை நோய் தொற்றை தடுக்க போதுமானவையல்ல எனவும்,இத்தகைய நடவடிக்கையானது நாட்டை மிகப்பெரிய பொருளாதார  நெருக்கடிக்கு தள்ளி ,பட்டினி சாவுகளுக்கே வழிவகுக்கும்,எனவும் மருத்துவ அறிஞர்களாலும், ப.சிதம்பரம் போன்றவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.மேலும் இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் உட்கட்டுமானம் மற்றும் மருத்துவ அமைப்பானது தரமில்லாததாகும்.
உதாரணமாக ,1000 நபர்களுக்கு தேவையான மருத்துவ படுக்கைகளில் 0.7 சதவீதம் மட்டுமே இந்தியா கொண்டுள்ளது.
பிரான்சில் இவ்விகிதம் 6.5 சதவிகிதமாகவும், வடகொரியாவில் 11.5 ஆகவும், சீனாவில் 3.5 ஆகவும் ,இத்தாலியில் 2.9 ஆகவும்,அமெரிக்காவில் 2.8 ஆகவும் உள்ளது.அதுமட்டுமில்லாமல் கோவிட்-19 நோய்தொற்றானது அதிகமாக நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே கடுமையாக பாதிக்கும் என்பதால் 80 % வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மக்களும், 50% ஊட்டசத்து குறைபாடுள்ள  குழந்தைகளையும் இந்தியா கொண்டுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட  அதிகமாகும்  சாத்தியபாடுகள் உள்ளன.
எனவே கல்வி மருத்துவம் முதலிய அடிப்படையான மனிததேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பெருநிறுவனங்களினல நலன்களை அரசின் கொள்கையாக கொண்டுள்ள முதலாளித்துவ நாடுகள் , அனைவருக்கும் கல்வி ,மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற கோட்பாடுகளின் அடிப்படையிலான சோசலிச கியூபாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது  ஏராளமாக உள்ளது.எனினும் நடைமுறையில் மனித சமூகம் பாதுகாக்க படவேண்டுமானால்,மக்கள் விரோத முதலாளித்துவ கொள்கைக்கு எதிராக போராடுவதற்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here