கொரோனோ வைரஸ் -சிங்கப்பூர் நிலவரம்.- தீபராஜ்

வணக்கம்
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான வைரஸானது உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி அந்நாட்டு மக்களை தாக்கி பேரழிவை செய்து வரலாறு படைத்து கொண்டடிருக்கிறது. இந்த வைரசானது சிங்கப்பூரில் ஆரம்ப காலத்தில் தாக்கம் குறைவாக இருந்தாலும் தற்போது இதன் தாக்கம் அதிகமாக மக்களிடையே பரவி தாக்குகிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆரம்பம் முதல் அரசாங்கம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தது. ஆனால் மக்களின் அலட்சியத்தால் இன்றைய நேரத்தில் மேலும் மேலும் பரவி எண்ணிகையை அதிகரித்து காட்டி கொண்டிருக்கிறது. திடீரென சிங்கப்பூரின் நட்பு நாடான மலேசியாவில் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தால் வரலாற்றில் முதல்முறையாக சிங்கப்பூர் மலேசியா இரண்டு நாடுகளுக்கும் இடையேயான எல்லை கதவு இழுத்து பூட்டப்பட்டது. இதனால் மலேசியாவில் இருந்து தினமும் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் பல்லாயிரம்கணக்கானோரின் நிலை மிகவும் மோசமானது. திடீரென சட்டம் இயற்றப்பட்டதால் மலேசிய மக்கள் சிங்கப்பூரிலேயே தங்க ஆயத்தமானார்கள். அத்தனை பேருக்கும் உடனடியாக அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தால் தங்க வைக்க இடம் இல்லாமல் அன்று இரவு இரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டனர் ஒருநாள் அகதிகள் போல. மீண்டும் கொரோனோ கிருமி தொற்று அதிகரித்தது இரட்டை இலக்கங்களில் இருந்து மூன்று இலக்க எண்களில் கிருமி தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் கடந்த 7ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் ஒருவாரத்திற்க்கு முன்பே ஊரடங்கு நிறைவேற்றப்படும் என்று முன்கூட்டியே அறிவித்தது. அவரவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி வைத்து கொள்ளுமாறும் ஆணையிட்டது அரசாங்கம். ஊரடங்கு சட்டத்தில் சில முக்கியமான தவிர்க்கமுடியான துறைகள் இயங்கும் எனவும் ஆணையிட்டது. மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான பேரங்காடிகள் இந்தியர்கள் அதிகமாக கூடும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பெரிய கடைகள் மற்றும் முஸ்தபா சென்டர் முதலியவற்றை மூடப்பட்டன. நிறுவனங்களில் கட்டிட கட்டுமான பணி செய்யும் இடங்கள், கப்பல் துறை பணி செய்யும் இடங்கள் போன்ற பல நிறுவனங்கள் இயங்காது என்றும் உத்தரவு பிறப்பிக்கபட்டது. பல லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கி இருக்கும் டாமிட்டரி( விடுதிகள்) பூட்டப்பட்டு யாரும் வெளியில் வரமுடியாதவாறு செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான மூன்று வேலை ஆரோக்கியமான உணவுகளை அரசாங்கமே வழங்குகிறது. மேலும் மாலை நேரத்தில் பழங்களும் பிஸ்கட்களும் வழங்குகிறது. அனைவரும் முககவசம் அணிய வேண்டும் அணியாதவர்களுக்கு $500 அபராதம் விதிக்கப்படும். இன்னும் பல கடுமையான சட்டங்களை இயற்றி கிருமி தொற்று பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீபராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here