கொரோனா காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள்..அஸ்வினி கலைச்செல்வன்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் செய்தவை மற்றும் செய்யாதவை பற்றி முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் (2006-2011)கூறியிருப்பதாவது :

கொரோனா வைரஸின் தாக்கமானது உடனே தெரிய வாய்ப்பில்லை  தமிழகத்தில் 911பேர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையான தகவலாக இருக்க முடியாது.பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.  நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது. பாதிப்பானது படிப்படியாக வெளியில் தெரியவரும்.மத்திய மாநில அரசுகள்  கவனக்குறைவாக இருந்துவிட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்பே முடுக்கி விட்டிருக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தால் ஓரளவு வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்திருக்கும். சட்டமன்ற கூட்டம் மற்றும்  அயல்நாடு சென்று வருபவர்களை அனுமதித்தது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அலட்சியமாக இருந்து விட்டது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மொத்தமாகவே 1,000 வென்டிலேட்டர் கருவிகள்தான் இருக்கின்றன. மிகவும் தாமதமாக தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது . அரசு மருத்துவமனைகளிலேயே அனைவரும் கூடினால் அதுவும் ஆபத்தானதாக அமையும்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்வதும் வென்டிலேட்டர் கருவிகளை இறக்குமதி செய்வதும் ஒரு நல்ல மாற்று.

அறிஞர்களின் கூற்றுகள் :

பொதுவாக ,இந்தியாவில் சளிக் காய்ச்சல் கண்காணிப்புக்கான திட்டம் உள்ளது .இதில் H1N1 உள்ளிட்ட நான்கு வகையான ப்ளூ வைரஸ்கள் இங்கே காணப்படுகின்றன.  ப்ளூ காய்ச்சலுக்குப் பரிசோதனை செய்யும் வசதிகளைக் கொண்ட பல மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை வழக்கமாக குளிர்பருவத்தில் காணப்படும் என்றாலும், இந்தியாவின் கோடை மற்றும் மழைக் காலங்களிலும் மக்களைத் தாக்குகிறது.

வைரஸ் இல்லை என்று முதல்கட்ட பரிசோதனையில் தெரியவரும் போது,சமுதாயத்தில் அடுத்த நிலையில் இந்த வைரஸ் பரவுகிறதா என்பதை, இந்த சளிக் காய்ச்சல் கண்காணிப்புத் திட்டம் மூலம் கண்காணிக்கலாம் என்று நச்சுயிரியல் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

“இதற்கு முன்பும்  இப்படி செய்திருக்கிறோம். மீண்டும் அதைப்போல செய்ய முடியும். நம்மால் விரைவாக மருத்துவப் பரிசோதனை செய்ய முடியும். அது சாத்தியமானது.பெரும்பாலான கொவிட் -19 தொற்றுகள் லேசானவை” என்று டெல்லியை சேர்ந்த தொற்று நோய்கள் துறை வல்லுநர் லலித் காந்த் கூறுகிறார்.

“நோயின் தீவிரத்தன்மை மாறி வரும் நிலையில் அதற்குப் பொருத்தமான வகையில், ஆதாரங்களின் அடிப்படையிலான, மதிப்பிடப்பட்ட பயன்கள் குறித்த விரைவான திட்டமிடல் தேவைப்படுகிறது. பரந்த நாடு என்ற வகையில், செயல்பாடுகளும் முடிவுகளும் பரவலாக்கப்பட வேண்டும், ஆனால் நன்கு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் சுவாமிநாதன்.

பதற்றம் கொள்வதற்கான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார். ஆனால், இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் இந்தியா மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டியுள்ளது.அதே நிலையில் பேரிடர் காலங்களில் ஏற்படும் சிக்கலை எதிர்கொள்ள தேவையான அளவு முன்னேற்பாடுகள் அவசியம். தமிழக அரசின் திடீர் ஊரடங்கு உத்தரவால் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளும் ,தொழிலுக்காக சென்ற மக்கள்  வெவ்வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் உணவின்றி சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார பின்னடைவைச் சரி செய்ய கடின உழைப்பை செலுத்தியும் மக்கள் அவதியுறும் நிலைக்கே தள்ளப்படுவார்கள். அக்கறையற்ற மத்திய மாநில அரசுகளின் வகுக்கப்படாத தடாலடி நடவடிக்கைகளால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடு சந்தித்திருக்கும் பொருளாதார பின்னடைவை சரி செய்ய விலைவாசி உயர்வு மற்றும் வரி கூட்டல்
போன்ற சுமைகளை மக்கள் மீது சுமத்தாது இருந்தால்கூட போதும்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here