குஜராத் பில்கிஸ்பானு வழக்கு குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? – உச்சநீதி மன்றம்

குஜராத் பில்கிஸ்பானு வழக்கு குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? - உச்சநீதி மன்றம்
குஜராத் பில்கிஸ்பானு வழக்கு குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? - உச்சநீதி மன்றம்
குஜராத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு வழக்கில் சாட்சியத்தை மாற்றி பொய் மருத்துவ பரிசோ தனை அறிக்கை தாக்கல் செய்த 5 காவல்துறையினர் 2 டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வன் முறை சம்பவங்கள் நடந்தன. அதில், குடும்பத்தாருடன் தப்ப முயன்ற, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை சிலர் பாலியல் வன்முறை செய்தனர். அவருடைய இரண்டரை வயது மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கில், சாட்சியத்தை மாற் றியது, பொய் மருத்துவ பரிசோ தனை அறிக்கை தாக்கல் செய்தது போன்ற குற்றங்களுக்காக 5 காவல்துறையினர் 2 டாக்டர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதி மன்ற அமர்வு, காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்த அறிக் கையை தாக்கல் செய்யும்படி கடந்த மாதம் 23 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, அமர்வு உத்தரவிட்டதாவது:”காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, மாநில அரசு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. அதனால், ஆறு வாரங்கள் அவகாசம் தரப்படுகிறது. 2018ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

கூடுதல் இழப்பீடு கேட்டு, பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கின் விசாரணை, அடுத்த வாரம் நடைபெறும்.” என இவ்வாறு நீதிமன்றம் அமர்வு கூறி யுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here