காஷ்மீர் – எரியும் பனிமலை – 5- க.இரா. தமிழரசன்

கட்டுக்கதை – 3 காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து உள்ளது. குறிப்பாக , நிலம் வாங்க முடியாது.

உண்மை : காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளதும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது என்பதும் உண்மை தான். ஆனால் காசுமீரில் மட்டும் இப்படி இருப்பது போல் சொல்வது தான் கட்டுக்கதை. இதன் மூலம் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மட்டும் சிறப்புரிமை அனுபவித்து வருகிறார்கள் என்கிற பிம்பத்தை எல்லோர் மத்தியிலும் விதைக்க வேண்டும் என்பதற்காக இப்படியான கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள் .

உண்மையில் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த சிறப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது அங்கெல்லாம் வெளியார் யாரும் நிலம் வாங்க முடியாது. சில எடுத்துக்காட்டுகளை கீழே பார்க்கலாம்.

நாகாலாந்து

சட்டப்பிரிவு 371-ன் கீழ் நாகாலாந்து, மிசோரம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 371-ஏ நாகாலாந்து மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும் சிறப்பு பிரிவு. இதன்படி, நாடாளுமன்றம் இயற்றும் இந்த சட்டமும் நாகா மக்களின் மதம், சமூகம் சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு பொருந்தாது. நாகாலாந்து மக்களின் நிலம் அம்மாநில பூர்வகுடிகளுக்கு மட்டுமே சொந்தம். மத்திய அரசின் சட்டம் அமலாக்கப்பட வேண்டிய தேவையிருந்தால், நாகாலாந்து மாநில சட்டப்பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

மிசோராம்

மிசோராம் மாநிலத்திற்கு அரசியல் சட்டத்
தின் 371 ஜி படி பாதுகாப்பு வழங்கப்பட்
டுள்ளது. இதன்படி மாநில அரசின் ஒப்பு”
தல் இல்லாமல், மிசோ மக்களின் மதம்
மற்றும் கலாசார நடவடிக்கைகள் பாதிக்
கும் வகையில், பார்லிமென்டில் நிறை
வேற்றப்படும் எந்த சட்டத்தையும் அமல்ப
டுத்த முடியாது. நாகாலாந்து போலவே,
மிசோராமிலும் மக்களுக்கு இடையே
எழும் பிரச்னைகளுக்கு பாராம்பரியமாக
கடைப்பிடிக்கும் விதிகள், பழக்க வழக்
கங்கள் படியே தீர்வு காண முடியும். இதன்
படியே நிலம், போன்ற இயற்கை வளங்
களை மாற்றிக் கொள்ள முடியும்.

மணிப்பூர்

மணிப்பூர் மாநில பழங்குடியின மக்கள்
மத்தியிலும் எவ்வித அச்சமும் எழ
வில்லை. இந்த மாநிலத்திற்கு அரசியல்
சட்டத்தின் 371சி பிரிவு படி பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பழங்குடி
மக்கள் அதிகம் வாழும் மலை பிரதேச
மாவட்டங்கள், இம்பால் சமவெளி பகுதி
யில் இருந்து மாறுபட்டுள்ளது. அரசியல்
சட்டத்தின் 371சி பிரிவு படி தனியாக
மலை பிரதேச கமிட்டிகள் அமைக்கப்பட்ட
டுள்ளன. மாநில அரசு பழங்குடி மக்க”
ளுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக
இயற்றும் சட்டங்களுக்கு, இந்த கமிட்டிக
ளின் ஒப்புதலை பெற வேண்டும்

அஸ்ஸாம்

371B -ன் கீழ் அஸ்ஸாம் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரமும், சட்டப்பேரவையில் அம்மாநில பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா :

371 சட்டப் பிரிவின்படி குஜராத், மகாராஷ்டிரா மாநில ஆளுநர்கள் வளர்ச்சியற்ற பகுதிகளில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா :

371J சட்டப் பிரிவின் கீழ் ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவின் பின் தங்கிய ஆறு மாவட்டங்களில் வளர்ச்சி வாரியங்கள் அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரா :

1974 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிரிவு 371 (D&E) சட்டப்பிரிவு ஆந்திர மாநிலத்தின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அந்த மாநில மக்களுக்கான சிறப்புரிமையையும் அதன் பாதுகாப்பையும் நிலை நாட்டுகிறது.

இந்த சிறப்புரிமை வழங்கப்படுவதும் , நிலம் வாங்கத் தடை விதிப்பதும் நூறு விழுக்காடு சரியான அரசியல் நிலைப்பாடாகும். ஒரு மாநிலத்தில் இருக்கும் நிலங்களின் உரிமை அங்கு வாழும் சொந்த தேசிய இன மக்களுக்கு மட்டுமே உண்டு.
அவ்வாறில்லாமல் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தால் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.

அண்டையில் உள்ள தேசிய இனங்களின் சுரண்டல்காரர்களால் நிலம் வாங்கப்பட்டு அவர்கள் குடியேற்றம் அதிகமாகி அரசியல் , பொருளாதார , பண்பாட்டுக் குழப்பம் ஏற்படும். இதனால் சொந்த தேசிய இனத்தின் வாழ்வுரிமை சிதைக்கப்படும். இதை முன்னிட்டுத்தான் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.

காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசின் கருணையால் வழங்கப்பட்டதல்ல. காசுமீர் இந்தியாவோடு தற்காலிகமாக இணைக்கப்பட்ட போது தங்களின் தனித்தன்மையை இழந்து விடக் கூடாது என்பதற்காக போட்டுக் கொண்ட ஒப்பந்தம் . இப்படியொரு ஒப்பந்தம் போடாமல் விட்டிருந்தால் காசுமீர் நிலைமை என்னாகியிருக்கும் ?

பன்னாட்டு நிறுவனங்களின் , இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் சூறையாடலுக்கு உள்ளாகியிருக்கும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் , அணு உலைகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டிருக்கும் , அத்தனை அழிவுத் திட்டங்களும் உள்நுழைந்திருக்கும்.

இனி அது தான் நடக்கப் போகிறது .

மோடி அரசின் காசுமீர் சிறப்பு அந்தஸ்து செய்தி வந்தவுடன் பா.ஜ.க.வினர் ஒவ்வொருவரும் காசுமீரில் நிலம் வாங்க ஆசைப்படுவதாக அறிவிப்பு கொடுக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் வரும் அக்டோபர் மாதம் 12 முதல் 14ஆம் தேதி வரையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.கே.சவுதரி தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலர் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இனி ‘காஷ்மீர் பெரு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவிடும். தொழில் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சீர்குலைப்பதும் நடக்கும்.

(பின் குறிப்பு : காசுமீர் மாநில பா.ஜ.க. காசுமீரில் மற்ற மாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது )

தொடர்வோம்….
க.இரா. தமிழரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here