காணாமல் போன ஆயித்தற்கும் மேலான மீனவர்களின் பட்டியலை அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம்(ATSA) இன்று சென்னையில் வெளியிட்டது.
ஓக்கி புயலில் சிக்கிய கன்னியாக்குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இந்திய – தமிழ்நாடு அரசுகளும் இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த தகவலை வெளிக்கொண்டுவர அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பாக இன்று பகல் 12 மணியளவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்திய மீனவர் சங்கத் தலைவர் எம்.டி.தயாளன், அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சுனில், தமிழ்நெறியன், அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஜானகிராமன் ஆகியோர் செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தனர்.
மாணவர் இளைஞர் சமூக இயக்க பொறுப்பாளர் கார்த்திகேயன், அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தைச் சேர்ந்த அன்பழகன், நவீன், சத்யா, கார்த்தி, பிரகாஷ், மைக்கல், ரூபன், திருப்பதி, தினேஷ், வினோத் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.