கரோனா வைரசை வைத்து அரசியல் செய்யும் அமெரிக்கா.

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.”

அரசியல் வைரசு “தொற்றுக் கட்டுப்பாடு வளைவின்” பின்னே அமெரிக்க ஐக்கிய நாட்டினை தள்ளி நிறுத்தியிருக்கிறது.
கோவிட் -19 உலகம் முழுவதும் பரவி வருகிறது. மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக சில அமெரிக்க அரசியல்வாதிகள், சீனாவின் அனுபவத்தை கருத்தில் கொண்டு பெருமளவில் அக்கறை செலுத்தி எதையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக சீனாவை குற்றஞ்சாட்டுவதற்கான ஒரு தருணமாகவே அவர்கள் இதை கருதுவதால் இது ஒரு கடுமையான நிலைமைக்கு வழிவகுத்துள்ளது. இப்போது சீனாவிற்கு எதிரான தாக்குதல்களையும் குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்கா நிறுத்திவிட்டு, விரிவான தொற்றுநோய் தடுப்பைத் தொடங்க வேண்டும். வீணாக்க நேரமில்லை. அமெரிக்கா இனியும் தாமதிக்க கூடாது.
ஆனால், சில அமெரிக்க அரசியல்வாதிகள் இத்தகைய நெருக்கடியான நேரத்திலும் அரசியல் விளையாட்டை விளையாடி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மார்ச் 5 மற்றும் 6 தேதிகளில் கோவிட் -19 “வுகான் வைரசு” அல்லது “வுகான் கொரோனா வைரசு” என்று அப்பட்டமாக அழைத்தார். முன் முனையில் அமெரிக்காவிற்கு கிடைத்த தகவல்கள் “சரியானவை அல்ல” என்றும், அது அமெரிக்காவை ” தற்போதைய நடப்பு போக்குக்கு” பின் தள்ளி இருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா “தற்போதைய நடப்பு போக்குக்கு” பின் தங்கி இருப்பதற்கு, சீனாவை குற்றஞ்சாட்டலாமா? பாம்பியோவும் , சில அமெரிக்க அரசியல்வாதிகளும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவை எவ்வளவு பின் தங்க வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.
கேலிக்கூத்தான பாம்பியோவின் கருத்துக்கள் மேற்கத்திய ஊடகங்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. அவர் சீனாவின் அனுபவத்தை முற்றிலுமாக புறக்கணித்ததோடு, அமெரிக்க மக்களின் உயிரும், சுகாதாரமும் அவருக்கு ஒரு பொருட்டு இல்லை என்பது போல், மக்கள் கருத்தை மிகைப்படுத்துவதிலேயே அக்கறை காட்டினார்.
சீன மற்றும் வெளிநாட்டு வல்லுனர்கள் கோவிட்-19 மூலத்தை அடையாளம் காண முயன்று கொண்டிருக்கும் நிலையில், “வுகான் வைரசு” என்ற சொல்லாடல், பாம்பியோவின் அறியாமையை வெளிச்சமாக்குகிறது. அவர் அறிவியலை இழிவுபடுத்தி, ஒரு அரசியல் வைரசை பரப்புவதற்கு முயற்சி செய்கிறார்.
சீனா அதன் கடுமையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சனவரி மாதம் செயல்படுத்தியது. சீனாவிடம் குற்றம் கண்டுபிடிப்பதை தவிர்த்துவிட்டு இந்த இடைப்பட்ட நேரத்தில் அமெரிக்கா தொலைநோக்கு பார்வையோடு சில செயல்களில் தன்னை ஈடுபடுத்தியிருக்கலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமையன்று ஐரோப்பிய பயணத் தடையை அறிவித்தார். மேலும் அவர் கோவிட் -19 ஐ சமாளிக்க “மத்திய அரசின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த அவர் முழு ஆயத்ததோடு உள்ளார்” என்றும் கூறினார். இந்த நிலைமையின் தீவிரத்தை அமெரிக்கா உணர்ந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. தாமதமானாலும் கடமையை நிறைவேற்று என்ற கூற்று இங்கு பொருந்தும்.
கடுமையான சவால்களை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசோ பேசுகையில், டிரம்ப் இன் COVID-19 உரையில், “அமெரிக்க அதிபர் மிக முக்கியமான ஒன்றை பற்றி மெளனம் காத்து வருகிறார்: விரைவான, விரிவாக்கப்பட்ட சோதனை… வைரசு எங்கிருந்து வந்தது என்பதை பற்றி நியூயார்க்கர்களுக்கு கவலை இல்லை.
அமெரிக்காவில், கோவிட்-19 நோயாளிகளாக எத்தனை பேர் என்று சோதிக்கப்பட்டு கண்டறியப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் சோதிக்கப்பட வசதியும் வாய்ப்பும் இல்லை.
தொற்றுநோயின் மூலத்தைத் தேடுவது மருத்துவ நிபுணர்களின் வேலை. அரசியல்வாதிகள் செய்யவேண்டியது என்னவென்றால் பாமர மக்களின் உடல் நலனை உறுதி செய்வதாகும். டிரம்ப் தனது ட்வீட் ஒன்றில் அமெரிக்காவின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை விட “தனக்கு முக்கியமானது எதுவுமில்லை” என்று கூறினார். அவர் தனது கூற்றை காப்பாற்றுவார் என நம்புவோம்.
உலக சுகாதார அமைப்பு கோவிட்-19, உலகில் கிட்டதட்ட எல்லா நாடுகளுக்கும் பரவி விட்டது என அறிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சீனா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அமெரிக்காவும் விரைவில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடத் தொடங்க வேண்டும். பாம்பியோ போன்ற அரசியல்வாதிகளும் தங்கள் பங்கிற்கு, முகமூடி அணிந்து, வாயை மூடிக் கொண்டு, எல்லா இடங்களிலும் அரசியல் வைரசுகளைப் பரப்புவதை தவிர்த்தல் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here