கபே காபி டே (COFFEE DAY)நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மாயம்.

காபி டே நிறுவனரும் ,கர்நாடகா அரசியல் பிரமுகரான எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான வி ஜி சித்தார்த்தா மாயம்.தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

130 ஆண்டுகளாக காபிகொட்டை ஏற்றுமதியில் சித்தார்த்தாவின் குடும்பம் இருந்து வருகிறது.1993 – ல் ஆரம்பிக்கப்பட்ட
ஆடம்பர காபி டே 1500 கிளைகளுடன் இந்தியா முழுவதும் பரவி நிற்கிறது.ஆனால் சமீபத்தில்  காபி டே நிறுவனம்  3350  கோடி ரூபாய் கடனில் இருக்கிறது என்று தகவல் வெளியானது.
தனக்கு கடன் கொடுத்த சிலர் கடும் அழுத்தத்தை தருவதாகவும்,இதுவரை பல அழுத்தங்களை தாங்கி வந்ததாகவும் ,இனிமேல் தாங்கப்போவதில்லை என்ற கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மங்களுரூ அருகே உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்திலிருந்து வி ஜி சித்தார்த்தா மாயமாகி உள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவில் பல நிறுவனங்கள் நட்டமடைவதும், அதன் முதலாளிகள் வெளிநாட்டிற்கு ஓடுவதுமாக இருந்தனர்.இப்போது சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தகவல் உலவுகிறது.
அனில் அம்பானி( ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்), நரேஷ் கோயல்( ஜெட் ஏர்வேஸ்., விஜய் மல்லையா( கிங்பிஷர் ஏர்லைன்ஸ், நீரவ் மோடி( கீதாஞ்சலி குழுமம்)
போன்ற பல பெரிய நிறுவனங்கள் வீழ்ந்தது.
இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய வங்கிகளும் , நிதி நிறுவனங்களும் இதனால் கடும் சிக்கலிலும் உள்ளன. இந்த சுமைகளும் மக்கள் தலையில்தான் விழப்போகிறது.

மோடி இந்தியாவின்  பொருளாதாரத்தை முன்னேற்றுவதாக சொன்னாலும் உண்மையில் நாடு கடும் சிக்கலை சந்தித்து கொண்டிருக்கிறது.முதலாளிகளை புகழ்ந்து போற்றும் மோடி போன்றவர்களால் இந்த ஏமாற்றுக்கார முதலாளிகள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துக்கொண்டிருக்கிறது.
நிச்சயம் முதலாளிகளால் இந்தியாவை காப்பாற்ற முடியாது.ஏனென்றால் முதலாளித்துவம் தனக்கான புதைகுழியை தானே வெட்டிக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here